கூட்டாண்மை காப்பாளராக தம்மை நிரூபித்துள்ள நேஷன் லங்கா ஃபினான்ஸ்
2016-07-26 15:33:39 | General

இலங்கையில் துரித கதியில் வளர்ச்சியடைந்து வரும் நிதி நிறுவனமான நேஷன் லங்கா ஃபினான்ஸ் பி.எல்.சி. பொறுப்புணர்வு மிக்க கூட்டாண்மை பிரஜை என்ற வகையில் அதன் இருப்பினை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன் வெறுமனே நிதி பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதோடு நிறுத்தி விடாது அதற்கு அப்பாலும் தனது சேவைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

ஸ்திரத்தன்மையை அதன் செயற்பாடுகளின் மையமாகக் கொண்டு செயற்படும் நிறுவனமானது ஸ்திரத் தன்மையை அதன் செயற்பாடுகளில்  வெளிப்படுத்துவதன் ஊடாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிதி குறித்த அறிவினை மேலும் மேம்படுத்த விளைகின்றது.

இதற்காக வாடிக்கையாளர்களின் வர்த்தக முனைப்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் நிதி முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்கள் பலவற்றை நிறுவனம் அமுல்படுத்துகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் "தினவமு லங்கா' என்ற செயற்றிட்டத்தின் கீழ் நேஷன் லங்காவின்  நுண்நிதியியல் பிரிவினால் செயற்படுத்தப்படுகின்றது.


நேஷன் லங்கா  தமது வாடிக்கையாளர்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளை நோக்காகக் கொண்டு செயற்படுவதுடன் நிறுவனத்திடமிருந்து கடன் பெறாத வாடிக்கையாளர்களுக்குக் கூட அனுகூலங்களை அளிப்பதன் ஊடாக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயற்படும் நிறுவனமாக விளங்குதலை உறுதி செய்கின்றது.

நுண் நிதியியலானது நேஷன் லங்காவின் சிறப்பு வர்த்தகமாக திகழும் அதேவேளை தினவமு லங்கா என்ற செயற்றிட்டத்தின் ஊடாக கடன்களை விஸ்தரிக்கும் செயற்பாடுகளுடன் இணைந்து நுண்நிதியியல் சேவைகளை மேலும் வலுவாக்கும் முனைப்புகளை முன்னெடுத்துள்ளது.

நிறுவனத்தின் நுண்நிதியியல் வர்த்தக பிரிவில் 275 ஊழியர்களும் நாடளாவிய ரீதியில் 25 சேவை நிலையங்களும் பொது முகாமையாளரான பிரதீப் பாலசூரியவின் தலைமையின் கீழ் வினைத் திறனுடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இலாபகரமான வணிக ஊடகமாக விளங்கிய போதிலும் நுண்நிதியியல் வர்த்தகமானது பல்வேறு இடர்களுக்கு உட்படக்கூடியதாகும். எனினும் துரதிர்ஷ்டவசமாக இந்த துறையில் நிலவும் கடும் போட்டியின் காரணமாக முழுமையான நுண்நிதியியல் வர்த்தக நடவடிக்கைகளின் தரம் குறைந்துள்ளதென்றே குறிப்பிட வேண்டும்.

தமது நுண்நிதியியல் வாடிக்கையாளர்களின் தளத்தினை தக்க வைப்பதுடன் மேலும் அதிகரிக்கும் நோக்குடன் நேஷன் லங்கா ஃபினான்ஸ் தினவமு லங்கா செயற்றிட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்துகின்றது.

இதன் ஊடாக வெறுமனே நிதிச் சேவைகளை மாத்திரம் அளிப்பதுடன் நின்றுவிடாது சமூகத்திற்கு தம்மாலியன்ற நன்மைகளை அளிப்பதற்கு நிறுவனம் எண்ணுகின்றது.

 

TOTAL VIEWS : 1321
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bs7qn
  PLEASE ENTER CAPTA VALUE.