பணவீக்கம் நவம்பரில் 8.4.% ஆக வீழ்ச்சி
2017-12-28 11:45:46 | General

கடந்த அக்டோபர் மாதம் 8.8 % ஆக இருந்த பணவீக்கமானது நவம்பர் மாதம் 8.4.% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தேசிய நுகவோர் விலைச் சுட்டெண்ணில் (NCPI) மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடிசன மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த சராசரியானது நவம்பர் மாத முடிவில் 7.5 % ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் 7.1 % ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் மாதம் 124.8 சுட்டெண் புள்ளிகளாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது நவம்பர் மாதம் 126.4 புள்ளிகளாக உயர்வடைந்துள்ளது.

இம்மாதாந்த அதிகரிப்பானது உணவு பொருட்களில் ஏற்பட்ட விலை அதிகரிப்பினை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த நவம்பர் மாதம் தேங்காய், பச்சை மிளகாய்,காய்கறிகளின் விலைகளானது உயர்வடைந்துள்ளது.

இதேவேளை உடனடி மீன்கள் மற்றும் சில பழவகைகளின் விலைகளானது வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், மருத்துவ ஆய்வுகூட பரிசோதனைகள் மற்றும் தனியார் வைத்தியசாலை அறைகளுக்கான கட்டணம் என்பன இக்காலப் பகுதியில் அதிகரித்துள்ளன.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுடன் இணைந்த பணவீக்கத்தின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் 4.1% ஆக இருந்த நாட்டினது பொருளாதார வளர்ச்சியானது நவம்பர் மாதம் 2.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுடன் இணைந்த பணத்தின் வருடாந்த சராசரியானது அக்டோபர் மாதம் 5.6% ஆக இருந்ததுடன், நவம்பர் மாதம் 5.2 % ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

TOTAL VIEWS : 186
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2kqyt
  PLEASE ENTER CAPTA VALUE.