புதிய கார்களின் பதிவு ஆகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சி
2017-09-26 12:12:53 | General

புதிய மோட்டார் கார்களின் பதிவானது கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஆகஸ்ட் மாதம்  4% ஆல் குறைந்துள்ளது. 


J.B. Securitiesஇன் மாதாந்த அறிக்கைக்கு இணங்க நடுத்தர அளவு கார்களின் பிரிவானது 2.9% இல் இருந்து 3.4% ஆக முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

பாரியளவு கார்களுக்கான நிதியியல் பங்கானது 55% இல் இருந்து  30% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், நடுத்தர அளவு கார்களுக்கான நிதியியல் பங்கானது 57% இல் இருந்து  45% ஆகவும் சிறியளவு கார்களுக்கான நிதியியல் பங்கானது 58% இல் இருந்து 55% ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதற்கிணங்க ஒட்டுமொத்த புதிய கார்களின் நிதியியல் பங்கானது 58.4% இல் இருந்து 53.6% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, முன்சொந்தமான கார்களின் பதிவானது மாதாந்த அடிப்படையில் 5.6% ஆலும், வருடாந்த அடிப்படையில்  78% ஆலும் அதிகரித்துள்ளது.

முன் சொந்தமான கார்களின் பதிவுகளில் டொயோடாவும் சுசுகியும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை  அவதானிக்கப்பட்டுள்ளது. சிறிய கார்களின் பிரிவானது 46% இல் இருந்து 50% ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பிரீமியம் கார்கள் ஜூலை மாதம்  62 ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம்  80 ஆக அதிகரித்துள்ளன. புதிய பிரீமியம் கார்களில் BMWஆனது முன்னணி வகிக்கிறது. 


ஒட்டுமொத்த புதிய SUV கார்கள் மாதாந்த ரீதியில்  40% அதிகரிப்பையும் வருடாந்த அடிப்படையில் 29% அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளன. இதேவேளை, முன் சொந்தமான SUV கார்கள் மாதாந்த ரீதியில் 9% அதிகரிப்பையும் வருடாந்த அடிப்படையில் 51% அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளன. மாதாந்த அடிப்படையில் புதிய ஹைபிரிட் கார்கள்  40% ஆலும் முன்சொந்தமான ஹைபிரிட் கார்கள்  4% ஆலும் அதிகரித்துள்ளன. 


 இதேவேளை, வான்கள் மாதாந்த அடிப்படையில்  15% ஆலும் வருடாந்த அடிப்படையில்  12 % ஆலும் வீழ்ச்சியடைந்துள்ளன. சிறிய ரக வான்களின் பதிவானது 628 இல் இருந்து 616 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த நிதியியல் பங்கானது 73.2% இல் இருந்து 72.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 


இதேவேளை, முச்சக்கர வண்டிகளின் பதிவானது 17% ஆல் அதிகரித்துள்ளது.
 இரு சக்கர வாகனங்களின் பதிவானது ஆகஸ்ட் மாதத்தில் 29,579 ஆக இருந்ததுடன், மாதாந்த அடிப்படையில் 3.2% வீழ்ச்சியையும் வருடாந்த அடிப்படையில் 1.2% அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது. இதன் ஒட்டுமொத்த நிதியியல் பங்கானது 71.2% இல் இருந்து 72.1% ஆக அதிகரித்துள்ளது. 


புதிய சிறிய ட்ரக்குகள் மாதாந்த அடிப்படையில் 4% வளர்ச்சியையும் வருடாந்த அடிப்படையில் 85% வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த நிதியியல் பங்கானது 88% இல் இருந்து 87% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 


பஸ்கள் இம் மாதத்தில் 32% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், வருடாந்த அடிப்படையில் 5% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. லங்கா அஷோக் லெய்லான்ட் ஆனது  24% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த நிதியியல் பங்கானது 7% இல் இருந்து  32% ஆக அதிகரித்துள்ளது.

TOTAL VIEWS : 420
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xbw1c
  PLEASE ENTER CAPTA VALUE.