GSP+ வரிச்சலுகை மூலம் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பதுடன் 20000 தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் நிலை
2017-09-11 11:53:41 | General

GSP பிளஸ் வரிச் சலுகை மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இலங்கையின் வருடாந்த ஆடை ஏற்றுமதியை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதுடன் 20,000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரான மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.


சார்க் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில் விவசாய பிரிவினை சேர்ந்த பொருட்களை அதிகளவு ஏற்றுமதி செய்யவுள்ளதுடன் உடனடி மற்றும் பதனிடப்பட்ட காய்கறிகள், உணவுகள் குறிப்பாக தெங்குடன் தொடர்புடைய பொருட்கள் ஏற்றுமதி  செய்யப்படுடவுள்ளன.


இலங்கையின் மீன்பிடித்துறையானது சிறந்த வளர்ச்சியை பதிவு செய்து வருவதுடன் மீன்படி உற்பத்திகளுக்கு தற்போது இரட்டிப்பு கேள்வி நிலவுகிறது. இலங்கையின் மீன்பிடி ஏற்றுமதியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு ஜூன் மாதம் வரை மீன்பிடி ஏற்றுமதியானது 40% ஆக உயர்வடைந்துள்ளது.


பீங்கான், பாதணிகள், சைக்கிள்கள் மற்றும் தோற்பொருட்கள் போன்றவைகள் சிறப்பான துறைகளாவுள்ளன. சீனாவுடன் முன்வைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது (FAT) ஆடை, தேயிலை தங்க ஆபரண மற்றும் இரத்தினக்கல், இறப்பர் பொருட்கள், தெங்கு, வாசனைத் திரவியங்கள் போன்றவைகளை ஊக்குவிப்பதாகவுள்ளதுடன் சீனாவின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, இந்தியாவின் எட்கா போன்றவைகள் 2.5 மில்லியன் மக்களின் சந்தை சொத்தாகவுள்ளது.


சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் இலங்கையானது மீள் உற்பத்தி துறையை இந்திய நடைமுறைகளுக்கமைய ஊக்குவிக்கவுள்ளது.
உலக நாடுகளில் ஆசிய பிராந்தியமே மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன் கடந்த ஆண்டு 6.8% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆசிய பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 2.89 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஒவ்வொரு ஆசிய நாட்டினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இதில் பங்களிப்புச் செய்துள்ளன. இந்தியா 78%, பாகிஸ்தான் 10% பங்களாதேஷ் 8% என்ற ரீதியில் இவை உள்ளன. 


எட்டு ஆசிய நாடுகளில் இலங்கையானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற ரீதியில் பாரம்பரிய ஏற்றுமதி சந்தைகளான ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் கேள்வி நிலவுகிறது.

TOTAL VIEWS : 230
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kna8z
  PLEASE ENTER CAPTA VALUE.