மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% ஆக வளர்ச்சியடையும் வாய்ப்பு
2017-10-24 10:27:07 | General

ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிற்கு அமைய இவ்வாண்டு முடிவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP)    4.5% ஆக வளர்ச்சியடைவதுடன், 2018 ஆம் ஆண்டளவில் இது 5% ஆக அதிகரிக்கும் எனக் கூறியுள்ளது.


மேற்படி தகவலுக்கமைய இவ்வாண்டு முதற் காலாண்டில் இலங்கையின் GDP    ஆனது 3.8% ஆக வளர்ச்சியடைந்ததுடன், இரண்டாம் காலாண்டில் 4% ஆகவும் உயர்வடைந்துள்ளது. இதேவேளை இவ்வாண்டு முதல் அரையாண்டில் GDPஆனது 3.9% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.


மேலும் இவ்வாண்டு முதற் காலாண்டில் இலங்கையின் கைத்தொழில் துறையானது 6.3% ஆகவும் இரண்டாம் காலாண்டில் 5.2% என்ற ரீதியில் உயர்வடைந்துள்ளதுடன், இவ்வாண்டு முதல் அரையாண்டில் கைத்தொழில் துறையானது 5.8% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.


புடவை உற்பத்தியானது இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வீழ்ச்சியடைந்ததுடன் நிர்மாணத்துறையானது 9.3%   16.1% என்ற இடைப்பட்ட வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.


இலங்கையின் சேவைத் துறையானது இவ்வாண்டு முதற் காலாண்டில் 3.5% ஆக விஸ்தரிக்கப்பட்டதுடன், முதல் அரையாண்டில் இது 4% ஆக உயர்வடைந்துள்ளது. நிதியியல் சேவையானது குறிப்பாக காப்புறுதி மற்றும் அரச சேவைத் துறையானது இக்காலப்பகுதியில் வளர்ச்சியடைந்துள்ளது. மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் என்பன இக்காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்துள்ளன.


மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிற்கு இணங்க இவ்வாண்டு முடிவில் ஆசியாவின் வளர்ச்சியானது 5.9% ஆகவும் 2018 ஆம் ஆண்டளவில் 5.8% ஆக அமையும் என எதிர்வு கூறியுள்ளது.


இது தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரான டெக்ஹிகோ நகோ தெரிவிக்கையில்; தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு  அமைய மேற்குறிப்பிடப்பட்ட வகையில் ஆசியாவின் வளர்ச்சியானது அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், உயர் வருமானம், புதிய கைத்தொழில், பொருளாதாரத்திற்கு அமைய ஆசிய பிராந்தியமானது இவ்வாண்டு 6.4% வளர்ச்சியையும் 2018 ஆம் ஆண்டளவில் 6.3% வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

 

TOTAL VIEWS : 284
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vh1lj
  PLEASE ENTER CAPTA VALUE.