இலங்கை பங்களாதேஷிக்கிடையே வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை
2017-09-12 12:09:26 | General

பங்களாதேஷûக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை விரைவில் நடைமுறைப்படுத்த பங்களாதேஷ் தனது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதுடன், இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவினைப் பலப்படுத்தும் பொருட்டு இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்க பங்களாதேஷ் முன்வந்துள்ளது என பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட் தெரிவித்தார்.


கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்   வளாகத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடனான விசேட  சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.


இச்சந்திப்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லா  பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள் அமைச்சின் உயர் அதிகாரிகள், அமைச்சர் பதியுதீனுடன்   கலந்துகொண்டனர்.


பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட் இச்சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கைக்கும்பங்களாதேஷûக்கும் இடையிலான வர்த்தகம் உறவு நிலையான வளர்ச்சியை கொண்டிருப்பதாக அவதானிக்க முடிகின்றதோடு இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை  துரிதமாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பை விடுவிக்கின்றேன், இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிக்கப்பட வேண்டும். மேலும் இலங்கையில் பங்களாதேஷûடான மற்றொரு வர்த்தக விவகாரம் தொடர்பான  கூட்டு செயற்குழு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டு செயற்பாட்டுகுழுவின் முதல் சந்திப்பு 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டாக்காவில் நடைபெற்றது. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான  கட்டமைப்பு சாத்தியக்கூறு ஆய்வுக்கு இருதரப்பும் உடன்பட்டன.  இலங்கை அமைச்சரவை  இதற்கான ஒப்புதலை 2014 ஆம் ஆண்டு மே மாதம் வழங்கியது. 

 அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பரில் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது கூட்டு செயற்பாட்டுகுழுச் சந்திப்பின் போது இரு தரப்பினரும் பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தி  சாத்தியமான ஆய்வுகளினை  முடிவுக்கு கொண்டு வந்தனர். 


பங்களாதேஷும் இலங்கையும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும், அவை   முழுமையான ஆற்றல் வளத்தை பெறுவதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இது மிகவும் பிரயோஜனமாக இருப்பதோடு இருதரப்பு தயாரிப்புகளை  விரிவுபடுத்தும் சந்தர்ப்பமாக அமையும்.

உதாரணமாக, இலங்கை பங்களாதேஷிலிருந்து அதிக மருந்து வகைகளை குறைந்த செலவில் வாங்க முடியும் என்றார். கைத்தொழில் மற்றும்    வர்த்தக அமைச்சர் ரிஷார் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில்;

கடந்த ஜூலை மாதம் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் டாக்கா விஜயம் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில்  அமைந்ததுடன் மேலும் ஊக்கமளித்தது.

  
நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இரு நாட்டு அரச தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். 


பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையில் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் விசேட பொருளாதார வலயத்தை ஏற்படுத்தல் தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.
நாடுகளுக்கிடையே காணப்படும் தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.  


இந்த புதிய ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையே பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். எமது அரசாங்கம்  இருதரப்பு முன்னேற்றங்ளை நெருக்கமாக கண்காணிக்கும.“ 


இரு நாடுகளின் பலம் மற்றும் தேவைகள் தொடர்பில் பங்களாதேஷûடன் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்புகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கிடையே  வர்த்தக  அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், அங்கு இன்னமும் வெற்றி விளைவுகளை ஈட்டுவதற்கு பெரியளவிலான ஆற்றல்கள் காணப்படுகின்றன.

எனவே நாம் தற்போதைய 139 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக அளவை நகர்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது.  வலுவாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் மூலம்  இருதரப்பு ஏற்றுமதி கூடையில் அடங்கியிருக்கும் பொருட்கள் மற்றும் தொகுதிகளை முன்னோக்கி நோக்கி நகர்த்த முடியும.“

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுவிக்கினறேன். அவர்களுக்கான சகல வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.


இலங்கை  பங்களாதேஷ் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை  மூடப்பட்டவுடன் இலங்கை தெற்காசியாவின் மூன்று பெரிய லீக் பொருளாதாரங்களுடன், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைக் கைப்பற்றிய ஒரேயொரு தெற்காசிய நாடு என்ற பெயரை வெளிப்படுத்தி அதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதியில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலரை ஆதிக்கம் செலுத்தும் வலுவான சந்தையில் நுழையும். இலங்கையில் நன்கு அறியப்பட்ட மற்றைய இரண்டு  சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டவையாகும் என்றார் அமைச்சர் ரிஷாத்.


இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் படி,  கடந்த ஐந்து வருட காலப்பகுதியில்  (20122016) இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகம் ஒரு வலுவான 43% வளர்ச்சியுடன் 142 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. அத்துடன் வருடாந்த வர்த்தகமும் 11% சத வீத  அதிகரிப்பை காட்டியுள்ளது.  

 

TOTAL VIEWS : 340
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ido0w
  PLEASE ENTER CAPTA VALUE.