பெரிய விமானங்களுக்காக காத்திருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்
2017-04-03 12:54:36 | General

ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக வழமையான செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொண்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும்07ம் திகதி முதல் வழமைபோன்று இயங்கவுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி 06ம் திகதி தொடக்கம் ஏப்ரல் ஐந்தாம் திகதி வரை விமான நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இதற்காக நாளாந்தம் எட்டுமணிநேரம் வரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, ஓடுபாதைகள் புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 48 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டிருந்ததுடன், இத் தொகை அரசாங்கம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் செலவழிக்கப்பட்டிருந்தது.

தற்போது விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 07ம்திகதி தொடக்கம் விமான நிலையம் வழமை போன்று இயங்கத் தொடங்கவுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஓடுபாதை புனரமைப்பு பணிகள் காரணமாக உலகின் மிகப் பெரிய விமானங்களும் எதிர்வரும் காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து செல்வதற்கான ஓடுபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 572
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m8dht
  PLEASE ENTER CAPTA VALUE.