இலங்கையின் அதிமதிப்பிற்குரிய உணவு மற்றும் பான வகை உற்பத்தி நிறுவனமாக நெஸ்லே
2017-09-26 12:18:52 | General

LMD சஞ்சிகை வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான மிகவும் மதிக்கப்படுகின்ற நிறுவனங்களின் வெளியீட்டில் இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் உணவு மற்றும் பான வகை உற்பத்தி நிறுவனம் என்ற தரப்படுத்தலை நெஸ்லே நிறுவனம் சம்பாதித்துள்ளது.

உணவு மற்றும் பான வகை உற்பத்திப் பிரிவில் "துறைசார் வெற்றியாளராக' தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து தொழிற்றுறைகளையும் சார்ந்த 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்தியில் ஒட்டுமொத்த தரப்படுத்தலில் 11  ஆவது ஸ்தானத்தை நிறுவனம் தக்கவைத்துள்ளதுடன், 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனது மொத்த புள்ளிகளில் மேலும் 10 புள்ளிகளையும் கூடுதலாக ஈட்டியுள்ளது.


நெஸ்லே நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷிவானி ஹெக்டே கூறுகையில்;


"இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் உணவு மற்றும் பான வகை உற்பத்தி நிறுவனமாக மீண்டும் ஒருமுறை இனங்காணல் அங்கீகாரத்தை சம்பாதித்துள்ளதையிட்டு நாம் மிகுந்த பெருமையும் கௌரவமும் அடைந்துள்ளோம்.எமது நிறுவனம் மற்றும் ஊழியர்கள் மற்றும் நாம் பேணி வருகின்ற பாரம்பரியங்கள் ஆகியவற்றின் வலிமைக்கு இது சான்று பகர்கின்றது.

தினந்தோறும் நாம் நோக்கம் தவறாது செயற்பட்டு எமது செயற்பாடுகள் அனைத்திலும் எங்கள் மீதான மரியாதை, ஏனையவர்களின் மீதான மரியாதை, பன்முகத்தன்மை மீதான மரியாதை மற்றும் எதிர்காலத்தின் மீதான மரியாதை ஆகியவற்றை வெளிக்காண்பித்து வருகின்றமையால் எம்முடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பரஸ்பர மற்றும் நிலையான மரியாதையை நாம் சம்பாதித்துள்ளோம்“ என்று குறிப்பிட்டார்.


நெஸ்லே நிறுவனம் 1906 ஆம் ஆண்டு இலங்கையில் தொழிற்பட ஆரம்பித்தது. நிறுவனம் 1,000 வரையான மக்களுக்கு நேரடி தொழில் வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற நெஸ்லே நிறுவனத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதில் அவர்கள் அனைவரும் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

தற்போது நாட்டிலுள்ள மிகப்பாரிய உணவு மற்றும் பான வகை உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் Nestomalt, Milo, Milkmaid, Nespray மற்றும் Maggi அடங்கலாக இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற நெஸ்லே உற்பத்திகளில் 90% இற்கும் மேற்பட்டவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் தனியார் துறை மத்தியில் மிகவும் அதிகளவான பாலை கொள்வனவு செய்யும் நிறுவனம் என்ற வகையிலும் உலகின் மிகப் பெரிய தேங்காய்ப்பால்மா ஏற்றுமதி நிறுவனங்களுள் ஒன்று என்ற வகையிலும், நெஸ்லே நிறுவனத்தின் வர்த்தகச் செயற்பாடுகளால் 20,000 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு நற்பயன் கிடைத்துள்ளது.

இலங்கையிலுள்ள பாற்பண்ணையாளர்களுடன் அது தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு, உயர்தரம் கொண்ட பாலை இன்னும் அதிகமான அளவில் உற்பத்தி செய்ய பயிற்சியும்  ஒத்துழைப்பும் வழங்கி, எமது நாடு பாலுற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு உதவி வருகின்றது.

நிலையான தெங்கு பயிர்ச் செய்கைக்கு உதவி மற்றும் உள்நாட்டிலுள்ள தென்னந்தோட்டக்காரர்களின் வாழ்வாதாரத்தை நிலைபேறு கொண்டதாக மாற்றியமைப்பதற்கு Nestle Coconut Plan என்ற செயற்றிட்டத்தையும் நிறுவனம் கடந்த ஆண்டில் ஆரம்பித்திருந்தது.

பால்மா மற்றும் தேங்காய்ப் பால்மா ஆகியவற்றின் உற்பத்தி அளவை மேம்படுத்தும் முகமாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தனது தொழிற்சாலை மீதும் கணிசமான முதலீடுகளை நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

TOTAL VIEWS : 614
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3sqka
  PLEASE ENTER CAPTA VALUE.