இலங்கையில் பொது தனியார் துறை பங்குடைமையை ஊக்குவிப்பதற்கு அமெரிக்கா ஆர்வம்
2016-09-26 15:54:33 | General

இலங்கையில் பொது தனியார் துறை பங்குடைமையை (பி.பி.பி.எஸ்) ஊக்குவிப்பதில் அமெரிக்க அரசு ஆர்வத்துடன் செயற்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளார்.


யு.எஸ். எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் கொழும்பில் நடைபெறும் பொது தனியார் பங்குடமை தேசிய மாநாட்டினை ஆரம்பத்து உரை நிகழ்த்தும் போதே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்;


உலகின் இந்தப் பகுதிகளை சேர்ந்த நாடுகளில் பொருளாதார, சமூக அபிவிருத்தியில் புதிய முக்கிய மாற்றங்கள் இடம்பெறுவது புலனாகியுள்ளது. முன்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் என கருதப்பட்டவைகளை தற்போது தனியார் துறையினர் மேற்கொள்ளத்  தொடங்கியுள்ளனர்.


இலங்கையின் பல அரசாங்க அமைப்புகள் தங்கள் ஜனநாயக, பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடையச் செய்வதற்காக அமெரிக்கா அவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றது.


உதாரணத்திற்கு சமீபத்தில் நாங்கள் நிதியமைச்சின் பொதுநிதி திணைக்களம் (பி.பி.பி.எஸ்.) தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கும் ( பி.பி.பி.எஸ்.) தொடர்பில்  தற்போது காணப்படும் சட்ட, ஒழுங்குபடுத்தும் மற்றும் வர்த்தக சூழல் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான திட்டத்தை உருவாக்கவும் உதவினோம்.

இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு நாங்கள் அரசாங்கம் பி.பி.பி.எஸ். கட்டமைப்பை உருவாக்க உதவுகின்றோம்.மேலும் நாங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உதவுகின்றோம்.

உதாரணமாக பி.பி.பி.எஸ். பிரிவொன்றை உருவாக்குதல், தேசிய பி.பி.பி.எஸ். குழுவை உருவாக்குதல், பி.பி.பி.எஸ். தொடர்பில் தேசிய கொள்கை மற்றும் தந்திரோபாயத்தை உருவாக்குதல், தற்போதைய சட்ட மற்றும் ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த உதவுதல் போன்றவை.


ஆசிய அபிவிருத்தி வங்கி மேற்கொண்ட ஆய்வுகளின் படி ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு உட்கட்டமைப்பு அபிவிருத்திகளிற்காக 2010 முதல் 2020 வரை 8 திரில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம். இந்த தேவையை பூர்த்தி செய்யும் ஆற்றல் பாரம்பரிய நிதி வழங்குநர்களிடம் இல்லை.

இதன் காரணமாக பல நாடுகள் தனியார் துறை நிதிகளை திரட்ட முற்படுகின்றன அனேகமாக பி.பி.பி.எஸ். மூலமாக. இலங்கை அரசாங்கம் பி.பி.பி.எஸ்.ஸை. ஸ்தாபிப்பதில் முன்னணியில் காணப்படுகின்றது என தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் 1990 முதல் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.  

அவர்கள் இவ்வாறான 70 ஒத்துழைப்புகளை ஏற்படுத்தியுள்ளது மின்சார துறை, தொலைத்தொடர்பு, ஐ.சி.டி.  துறைமுகங்கள் போன்ற துறைகளில்  6 பில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் முதலீடுகளைப் பெற்றுள்ளது.

இந்த நாடுகளில் திட்டமிடப்படும் பி.பி.பி.எஸ். அந்த துறைகளிற்கே உரிய சட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவது அந்த நாடுகளிற்கே உரிய குணாதிசயமாக காணப்படுகின்றது. ஆனால், இந்த பி.பி.பி.எஸ். செயற்பாடுகளிற்கு அப்பால்   ஒவ்வொன்றும் தனித்தனியான விதி முறைகளின் கீழ் இயங்குகின்றன.
 
இதற்கு மிகச்சிறந்த உதாரணம்கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியாகும். இந்த திட்டம் இலங்கை அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தனியார் துறையினரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

துறைமுகத்தின் செயற்பாட்டு திறனை அதிகரிப்பதற்கும் சர்வதேச கப்பல்சரக்கு பரிமாற்றத்தில் அதன் பங்கை அதிகரிப்பதற்காகவும் இந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது. 
 
பி.பி.பி.எஸ். இனை ஊக்குவிப்பதே அமெரிக்காவின் முக்கிய நிகழ்ச்சி நிரல். இதனுடன் தொடர்புபட்டவர்களின் திட்டங்களிற்கு உதவுவதில் எங்களிற்கு சிறந்த அனுபவம் உள்ளது.உலகில் பல நாடுகளில் பி.பி.பி.எஸ். திட்டங்களை திட்டமிட்டு ஆதரித்த உறுதியான அனுபவங்கள் எங்களிற்கு உள்ளது.


இலங்கையில் அமெரிக்க அரசாங்கம் இதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு  நிபுணர்கள் தலைமையிலான திட்டங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உதவியுள்ளது.

உதாரணத்திற்கு, இலத்திரனியல் அரச கொள்வனவு  திட்டத்தை குறிப்பிடலாம். இது செலவு குறைந்தது. வலுத்திறன் மிக்கது,  வசதியானது. மேலும் இது அரசாங்கத்தின் செயற்பாடுகளை நேர்மையானதாக, வெளிப்படை தன்மை மிக்கதாக மாற்றும்.


அரசாங்க செயற்பாடுகளை வெளிப்படையானதாக, பொறுப்புக்கூறும் தன்மை மிக்கதாக மாற்றுவதற்கு உதவக்கூடிய தேசிய இலத்திரனியல் அரசாங்க அமைப்பை கொள்வனவு செய்வதற்கு பி.பி.பி.எஸ். யை பயன்படுத்தலாம்.  

அது ஆட்சி முறையை மேலும் பலப்படுத்தும். பி.பி.பி.எஸ்.களிற்கு எப்போதும் நவீனமயப்படுத்துவதும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அவசியம் இவற்றிற்கு மூதலீடும் முலதனமும் அவசியம். இதன் காரணமாக தனியார் துறையினரை   ஆட்சி அல்லது ஐ.சி.டி. சேவையை அரசாங்கத்தின் சார்பில் வழங்கச்செய்வது  இருதரப்பிற்கும் நன்மையளிக்கும்.


யு.எஸ்.எயிட் நிதியமைச்சின் பொதுநிதிப்பிரிவு ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும்  இன்றைய தேசிய மாநாடு பி.பி.பி.எஸ். இனை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப,உருவாக்குவதற்கான தந்திரோபாயங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்வதற்கான வாய்ப்பை அரசாங்க அதிகாரிகளிற்கு உருவாக்குகின்றது. இதனுடன் வெளிப்படைத் தன்மை, பொதுநிதி முகாமைத்துவம்,பொதுமக்கள் பங்களிப்பு,  தகவல் பெறுதல் ஆகிய தொடர்புபட்டுள்ளன.


பி.பி.பி.எஸ். மாதிரியை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்களிற்கும் அரசாங்கத்திற்கும் உதவுவது குறித்து அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சி கொண்டுள்ளது. கடந்த 60 வருடங்களாக நாங்கள் செயற்பட்டுள்ளது போன்று உங்கள் வாழ்க்கையை எதிர்காலத்திற்கு உதவுவதற்கு மனிதாபிமான அபிவிருத்தியை நாங்கள் தொடர்ந்தும் வழங்குவோம். அமெரிக்க அரசாங்கம்  2 பில்லியன் டொலர்கள் வரை பல அபிவிருத்தித் திட்டங்களிற்கு வழங்கியுள்ளது. 

TOTAL VIEWS : 1790
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6jqww
  PLEASE ENTER CAPTA VALUE.