பிணைமுறி மோசடி; சொந்தமாகவே சமநிலைப்படுத்தல் கண்காணிப்பை கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டு அரசாங்கம்
2018-01-09 10:02:27 | General

ஆணைக்குழு முன்னிலையில் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் அழைக்கப்பட்டமையும் அதற்கு முன்னிலையில் அவர் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருக்கின்றது. ஆணையாளர்களினால் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அவர்கள் முன்னிலையில் அவர் சாட்சியமளித்திருந்தார். சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமமானவர்கள் என்பதற்கான முன்னுதாரணத்தை இது ஏற்படுத்தியிருக்கின்றது. 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் இது நடைமுறையாகவுள்ளது. ஆனால்,  வளர்ச்சி குன்றிய நாடுகளில் அவ்வாறில்லை. இலங்கை இப்போது அபிவிருத்தியடைந்த நாடாக இருப்பதற்கான பாதையிலுள்ளது. அதனை முன்கொண்டு செல்வதற்கு சிவில் சமூகம், அரசியல் கட்சிகள், நீதிமன்றங்களிடமிருந்து அழுத்தம் தேவைப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக துரிதமான விவாதமொன்றிற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

மீள இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நிறுவன ரீதியிலான மறுசீரமைப்புக் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பொன்றை இது வழங்கும். கடந்த காலத்தில் அவ்வாறு செய்யப்பட்டிருக்காதுவிட்டால் கூட  எதிர்காலத்தில் வித்தியாசமானதாக அமையமுடியும்.

2015 ஜனவரி தேர்தலில் அவர் நாடியிருந்த அரசியல் தளத்திற்கான அவரின் ஈடுபாட்டை மீள உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவின் அறிக்கை சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றது. உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தில் அவரின் கட்சிக்கு அவர் தலைமைதாங்கும் தருணத்தில் ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கின்றது.

அந்த அரசியல் தளத்தின் பிரதான விடயமாக அமைந்தது 3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் உறுதிமொழி அளித்திருந்த முன்னைய அரசாங்கத்தின் ஊழல் விவகாரம் பற்றியதாகும். 

தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ஊழலை இல்லாதொழித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்திருந்தார். எவ்வாறாயினும், ஊழலை இறுக்கமான விதத்தில் கண்காணிப்பது தொடர்பாக எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் நிறைவேறியிருக்கவில்லை.  பதிலாக அரசாங்கத்தின் தரப்புகள் பாரியளவு ஊழல், மோசடியை முன்னெடுத்திருந்தன. 

இந்நிலையில், முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் பானை கேத்தலை கறுப்பென அழைப்பதற்கு வாய்ப்பது தொடர்பாக உருவாகியிருக்கின்றது. 
இந்த விடயத்தில் ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பாக நாட்டிற்கு அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அவர் ஆணைக்குழுவை அமைத்திருந்தார்.  பொது மக்களின் பார்வையில் அவர் தொடர்பான பிரதிமையை இது மேலுயர்த்திவிட்டிருக்கக் கூடும். அரசியல் வாழ்வில்  ஊழல் அற்ற மற்றும் கட்டுப்பாடுடன் சிலரே உள்ளனர். 

இந்நிலையில் , இந்த இடத்தை ஜனாதிபதி சில சமயம் கைப்பற்றியிருக்கக் கூடும். பிரதமர் தொடர்பான கருத்துகளை மிகக் கவனமான முறையில் ஜனாதிபதி மட்டுப்படுத்திய விதத்தில் அவரின் பகிரங்க அறிக்கை அமைந்திருந்தமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

பிரதமர் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான விடயத்தை ஆகக்குறைந்தளவாக்கியதாக அந்த அறிக்கை அமைந்திருந்தது.  
பிணை முறி ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி கயிற்றில் நடக்கவேண்டியுள்ளது. 

ஒருபுறத்தில் அறிக்கையிலுள்ளடங்கியுள்ள விடயத்தில் அவர் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான பொதுவான கோரிக்கை காணப்பட்டது. மறுபுறத்தில் அவர் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டியதை மனதில் கொள்ளவேண்டியிருந்தது. 

அரசாங்கம் தேசிய ஒருமைப்பாட்டு அரசாக காணப்படுகின்றது. ஐ.தே.க.விற்கும் சு.க.விற்கும் இடையிலான அத்தியாவசியமான கூட்டமைப்பாக அது காணப்படுகின்றது. மத்திய வங்கி ஊழல் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்தின் அங்கமாக ஐ.தே.க. விளங்குவதுடன், அது கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

2015 இல் விநியோகிக்கப்பட்ட பிணை முறிகள் தொடர்பாக ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி பயன்படுத்துவதற்கு அரசியல் ரீதியான எண்ணப்பாட்டைக் கொண்டிருந்தால் முன்னைய மத்திய வங்கி பிணைமுறி விவகாரங்கள், துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையையும் நாடவேண்டியுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களையும் அது உள்ளடக்கியதாக அமையும். 

தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையை பரிசீலித்தல்

ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக செயற்படுவதில் இலங்கையின் கடந்த பதிவுகள் தாழ்ந்த மட்டத்தில் இருப்பது அடிக்கடி அவதானிக்கப்படுகின்றது. எந்தவொரு ஆணைக்குழுவின் அறிக்கையும் அதற்கு அமைவாக செயற்பட்டதில்லை. 

ஒரு கட்சி அரசாங்கத்தை கொண்டிருக்கும் போது மேலாதிக்கத்தைக் கொண்ட கட்சி உண்மைகளை சௌகரியத்திற்கு ஏற்புடையதாக நசுக்கிவிடக் கூடியதாக இருக்கும். இந்தக் குறிப்பிட்ட விடயத்திலும் கூட பிரதமர்  ஐ.தே.க.வுடன் பிணைப்பைக் கொண்ட சட்டத்தரணிகளை நியமித்தபோது அதாவது பிணைமுறி மோசடி தொடர்பான கணிப்பீட்டை மேற்கொள்ளுமாறு குழுவை நியமித்தப் போது அடிப்படையில்  விடயங்கள் யாவும் நன்றாகவுள்ளதென்று அவர்கள் யாவரும் கூறியிருந்தார்கள். 

இந்நிலையில், இதற்கு ஜனாதிபதியின் தலையீடு தேவைப்பட்டது.  மற்றொரு விசாரணை அமைப்பு நியமிக்கப்பட்டது. அந்த அமைப்பு அதிகளவுக்கு சுயாதீனமானதாக அமையக் கூடியதாகும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்த இயலாதிருக்கும்.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் பிரயோகிக்கப்பட்ட சமநிலைப்படுத்தக்கூடிய அழுத்தமானது  சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை  உறுதிப்படுத்துவதற்கான அதிகளவு சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. முன்னரிலும் பார்க்க இது சிறப்பானதாக அமையும்.  

தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பெறுமானம் 2015 மத்திய வங்கி பிணைமுறி விநியோக துஷ்பிரயோகம் வெளிப்படுத்தப்பட்ட விதத்தைக் கொண்டு பார்க்கக்கூடியதாக காணப்படுகின்றது. மத்திய வங்கி பிணை பரிவர்த்தனைகள் இடம்பெற்ற வழிமுறை பற்றி தவறான எண்ணங்கள் தொடர்பாக இதுதான் முதலாவது சந்தர்ப்பமாக இல்லை. ஆனால், கடந்த கால துஷ்பிரயோகம் தொடர்பாக ஒருபோதுமே விரிவான முறையில் விசாரணை செய்யப்பட்டிருக்கவில்லை. 

தற்போது போன்று விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை. இங்கு வேறுபாடாக காணப்படுவது இந்தத் தடவை ஆட்சியில் இரு கட்சிகளும் பொறுப்பாக இருப்பதாகும். ஆட்சிக்கான பொறுப்பை ஒரு கட்சி மட்டுமே கொண்டிருந்தால் உண்மைகளை சௌகரியமான முறையில் நசுக்கிவிடுவது இலகுவானதாக அமையும். 

ஆனால், இரு கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது உண்மை வெளிவரும் தன்மையைக் கொண்டிருக்கும். இப்போது ஜனாதிபதி தான் பார்ப்பது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதே முக்கியமானதாக இருக்கின்றது. இங்கு முக்கியமான விடயம் நிறுவனங்களை வலுப்படுத்துவதாகும்.அதன் மூலமே சட்ட ஆட்சி நிலைபெறும். ஆட்களின் ஆட்சி இருக்காது. 

இலங்கை மிகவும் நெருக்கடியான சவால்கள் பலவற்றை எதிர்கொண்டிருக்கின்றது. அவற்றில் ஊழல் ஒன்று மட்டுமேயாகும். நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பான விவகாரமும் இங்கு உள்ளது. பிரச்சினைகள் நெருக்கடியானவையாகவும் தீர்வுகாண கடினமானவையாகவும் கடந்த கால ஆட்சியில் தீர்வுகள் நழுவவிட்டவையாகவும் அமைந்திருக்கின்றது.

ஆனால், எந்தவொரு தனிக்கட்சியிலும் பார்க்க இரு கட்சிகள் ஒன்றுசேர்வதன் மூலம் அவற்றுக்கு இலகுவாக தீர்வுகாண முடியும். நல்லிணக்க நடவடிக்கை விடயத்தில் இராணுவத்திடம் இருக்கும் காணிகள் பொது மக்களுக்கு திரும்ப வழங்கவேண்டிய தேவைப்பாடு உள்ளது. அத்துடன், காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

அரசியல் அமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் கைவிடப்படாதிருப்பது அவசியமானது. மத்திய வங்கி பிணைமுறிமோசடி விவகாரத்தில் ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டோர் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக்கும் தேவைப்பாடு காணப்படுகின்றது.  

அண்மையில் தென்கொரியாவிலும்  தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் இடம்பெற்றிருந்தவை போன்று, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தவறான செயற்பாடுகளுக்காக விசாரணை செய்யப்படுவதில் இருந்தும் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையை இந்த மண்ணில் உயர்மட்டத்தில்  உள்ளவர்கள் கூட பெற்றுக்கொள்ளாதிருப்பதை உறுதிப்படுத்தும் நாளொன்றை  நாங்கள் எதிர்பார்ப்பது அவசியமானதாகும். 

 

TOTAL VIEWS : 548
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
lssb3
  PLEASE ENTER CAPTA VALUE.