கோவில்களில் கும்பாபிஷேகம் ஏன் நடத்தப்படுகிறது?
2016-10-21 11:16:55 | General

இறைவன் தனது அகண்டா காரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்து கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்கின்றான். எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச் சேர்த்து அனுப்புகிறது மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தி.

 
ஏனைய இடங்களில் இறைவனை வழிபட்டால் வினைகள் வெதும்பும். ஆலயத்தில் உள்ள மூர்த்திக்கு முன் வழிபட்டால் வினைகள் வெந்து போகும். ஆகவே, நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஞானிகளும் இந்த உலகம் உய்ய அமைந்தவை ஆலயங்கள். அந்த ஆலயத்தில் கருவறையில் சுவாமி மந்திர மல்மாயா கன்மங்களை நீராக்கி அருள் புரிகின்றான்.
 
மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம் மந்திரம் சொன்னால் பாம்பு கடிக்காது. கடித்த விஷம் இறங்கும். ஆகையினால்தான் பெரியவர்கள் வேத மந்திரத்தினாலே இறைவனை வழிபட்டார்கள். ஆகவே, கோவிலுக்கு சென்று கடவுளை வணங்க வேண்டும். இறைவனுடைய அருளைப் பெற்ற மகான்களாக இருந்தாலும் ஆலய வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
 
கல்லினால் திருவுருவத்தை அமைத்துத் தானிய வாசம், ஜலவாசம் வைத்து அந்த மகாதேவனுடைய மந்திரங்களை எழுதி மந்திர யந்திரத்தை 48 நாள் வழிபாடு வைப்பார்கள். அந்த மந்திர சக்தி மேலே வரும். அந்த வேத சிவாகமத்திலே வல்லவர்களாக இருக்கின்றவர்கள் யாகசாலை அமைத்து இனிய மந்திரங்களை ஓதி காலங்கள் தோறும் யாக அக்னி வளர்த்து அதில் ஜோதியை விலையுமாறு செய்கிறார்கள். அப்படி விளைந்த ஜோதியைக் கும்பத்தில் சேர்ப்பார்கள்.
 
கல்லினாலும், மண்ணினாலும், கதையினாலும், மனிதராலும் உருவாக்கப்பட்டவை விக்கரங்களாகும். அவற்றிற்குத் தெய்வ சக்தியை உண்டு பண்ணுவதற்காகச் செய்யப்படும் பல கிரியைகளில் ஒன்றுதான் கும்பாபிஷேகம்.

TOTAL VIEWS : 762
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qj8jn
  PLEASE ENTER CAPTA VALUE.