புதிய அரசியலமைப்புக்கான அடுத்த கட்டத்திற்கு தயார்; ஜயம்பதி விக்ரமரட்ண கூறுகிறார்
2017-11-08 09:32:57 | General

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் முக்கியமான  பங்களிப்பை வழங்கும்  அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ண  எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போதைய நடவடிக்கைகளின் நிலைவரம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.  “டெய்லிமிரர்“ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு;

கேள்வி: வழிகாட்டல் குழுவின் ஊடாக அரசியலமைப்பை தயாரிப்பதில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். இப்போது  அனைத்துக் கட்சி மாநாட்டுக்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கிறார். அது தொடர்பாக தங்களின் கருத்து என்ன? 

பதில்:  இந்த விடயம் குறித்து சாத்தியமானளவுக்கு  பரந்தளவிலான  நோக்கத்தைக் கொண்டிருப்பது  மிகவும் முக்கியமானதாகும்.  அரசியல் அமைப்பு தயாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக  அந்த நடவடிக்கைகளை புறந்தள்ளாமல்  அதாவது பாராளுமன்றத்தால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கலந்துரையாடுவதற்கான எந்தவொரு முன்முனைப்புக்கும் நான் ஆதரவு அளிப்பேன். பாராளுமன்ற நடவடிக்கைகளை  இது புறந்தள்ளாமல் இருக்கும்  வரை  எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

கேள்வி:  இது ஓரங்கட்டிவிடப்படுமென  நீங்கள் அச்சப்படுவதாக  இது அர்த்தப்படுகிறதா?

பதில்: மற்றவர்கள் ஏதேவொன்றை கூறுகின்றார்கள் என்று எனக்குச் சொல்ல வேண்டாம்.  அது நேர்மையற்றது.  உங்கள் நிலைப்பாட்டை நான் அறிவேன்.  நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதை நான் வாசிக்கிறேன். 

கேள்வி:  அரசியல் அமைப்பை தயாரிக்கும் விடயத்தில்  இப்போது நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளீர்கள்?

பதில்: வெளியில் இருந்து நீங்கள் எதனை பார்க்க முடியுமோ  அவ்வளவு தூரத்திற்கு மட்டுமே இதுவரை முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.  அடுத்த கட்டத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.   

அரசியலமைப்பை வரைவது தொடர்பாக ஆயத்தமாகவுள்ளோம். அதற்கு முன்பு அரசியலமைப்பில் என்ன விடயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தொடர்பாக  இணக்கப்பாடு இருக்க வேண்டும். 

சட்டமூலம் வரையப்படும் போது  அமைச்சரவையினாலும்  சம்பந்தப்பட்ட அமைச்சினாலும்  சட்டவரைஞருக்கு விசேடமான அறிவுறுத்தல்கள்  வழங்கப்படுகின்றன.  அத்தகைய விசேட அறிவுறுத்தல்கள்  சகல விடயங்கள் தொடர்பாகவும்  அதாவது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுகின்ற சகல விடயங்கள் குறித்தும்  வழங்க வேண்டிய தேவை உள்ளது.

கேள்வி:  கட்சிகள் ஏற்கனவே இணங்கியிருக்கும் விடயங்கள் எவை?

பதில்: அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதில் பரந்தளவிலான இணக்கப்பாடு இருப்பதாக நான் நினைக்கிறேன்.  மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்படாது. அதுவே அரசியல் ரீதியான யதார்த்தம். எமது அரசியல் நிரந்தரமான ஒன்றாக இருக்கிறது.

ஆயினும் ,  கோட்பாட்டு ரீதியாக அவற்றை இல்லாதொழித்துவிட முடியும்.  இப்போது எவரும் அவற்றை இல்லாதொழிக்குமாறு கோரவில்லை.  ஆதலால் அவற்றை சிறப்பான முறையில் உருவாக்குவதே சிறந்ததாகும்.  அதிகாரப் பகிர்வில் 30 வருட அனுபவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். 

அவற்றை மேலும் செயற்பாட்டுத்திறனுடன் நாங்கள் எவ்வாறு உருவாக்கப் போகிறோம்?   கூட்டு எதிரணியில் உள்ளவர்களில் சிலர் மட்டுமே  அதிகாரப் பகிர்வுக்கு எதிராக உள்ளனர்.  அங்கும் பரந்தளவிலான இணக்கப்பாடு உள்ளது.

அத்துடன் தேர்தல் சீர் திருத்தங்கள் தொடர்பாக பரந்தளவிலான இணக்கப்பாடு உள்ளது. சமய விவகாரத்தில்  பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமையான இடத்தை வழங்குவது தொடர்பாக பரந்தளவிலான இணக்கப்பாடு காணப்படுகிறது. 

கேள்வி:  கட்சிகள்  இணங்கியிருக்கும்  விசேட துறைகள் எவை?

பதில்: அறிக்கையில் நீங்கள் பார்த்தால்  அதிகாரப் பகிர்வு  நீட்சி தொடர்பாக வேறுபாடுகள் இருப்பது தென்படும்.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதில்  இல்லாதொழிக்க வேண்டும் என்பதில்  அதிகளவான கருத்தே காணப்படுகிறது.  சகலராலும் கலந்தாராயப்பட்டது என்ன என்பது பற்றி அறிக்கையில் உள்ளது. 

அறிக்கையில் எதுவும் இல்லாது விடில் அதுபற்றி கலந்துரையாடப்படவில்லை என்பதாகும்.  சமயம் தொடர்பாக முன்னர்  சுமார் 7 அல்லது 8 தெரிவுகள்  காணப்பட்டன.  அவை குறித்து பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.  அது கலந்துரையாடுவதற்கான கட்டமாக இருந்தது.  இறுதியில் நாங்கள் இரு தெரிவுகளுக்கு  வந்திருந்தோம்.  இப்போது  அந்த விடயம்  தெரிவுக்கான ஒரேயொரு விடயமாக இணங்கப்பட்டுள்ளது. அல்லது  மாற்றியமைப்பதற்கான ஒன்றாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

கேள்வி:  மாகாண சபை முறைமை குறித்து நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.  ஒற்றையாட்சி அரசியல்  ஒன்றுக்கும் மேற்பட்ட உதவி சட்டவாக்க அமைப்புகள்   இருக்க முடியும் என  பாராளுமன்றத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.  அந்த தன்மையில் ஒற்றையாட்சி அரசென நீங்கள் எவ்வாறு வரையறைப்படுத்துவீர்கள்?

பதில்: உயர் நீதிமன்றம் என்ன கூறியது என்பதே அதுவாகும்.  13 வது திருத்தம் தொடர்பான தீர்மானத்தில்  ஒற்றையாட்சி அரசில் உப அமைப்புகள் இருக்க முடியாதென்று  அர்த்தப்படாது என்று கூறியுள்ளது. 

அவற்றை  நீக்கிவிட முடியும் விதத்தில்  ஏனைய  சட்டவாக்க அமைப்புகளும் அங்கு இருக்கமுடியும்.  அவற்றை மேவிச் செல்வதற்கும் அல்லது தீர்மானம் எடுப்பதற்குமான ஏற்பாடுகளை கொண்டிருக்க முடியும்.

இப்போதும் கூட அரசியலமைப்பை திருத்துவதன் மூலம் மாகாண சபைகளை நீக்க விட முடியும்.  மாகாண சபைகள் தொடர்பான அத்தியாயமானது  சகல மாகாண சபைகளும் இணங்கிக் கொண்டால் சாதாரண பெரும்பான்மையுடன் அவற்றை இல்லாதொழித்துவிட முடியும் என்று விசேடப்படுத்துகின்றது. 

அவை சம்மதிக்காது விடில் 2/3 பெரும்பான்மையுடன் நீங்கள் அதனை நீக்கி விடலாம்.  நான் என்ன அர்த்தப்படுத்துகிறேன் என்றால்  மாகாண சபை முறைமையானது  நீடித்ததொன்றாக இல்லை என்பதாகும்.


கேள்வி: இதே போன்ற முறைமை ஒன்றுக்கு நீங்கள் ஆலோசனை கூறுகிறீர்கள் என்று  இது அர்த்தப்படுகிறதா?

பதில்: ஆம். எனக்குப் பிரச்சினை இல்லை.

கேள்வி:  எந்த வொரு சட்டவாக்க அமைப்புகள் என்று நீங்கள் கூறும் போது  அவை சில வடிவத்திலான சுயாட்சியை கொண்டிருக்காதா?

பதில்: 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்புகளில்  யோசனைகளில்  மேலும் சென்றிருந்தன. இன்று வேறுபட்ட சூழல் காணப்படுகிறது.  அதனாலேயே 2000 ஆம் ஆண்டு யோசனைகளை தான் விரும்புவதாக அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருந்தார். 

இப்போது தெரிவிக்கப்பட்ட யோசனைக்கு தனது கட்சி ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.  பாராளுமன்றத்தின் அதிகாரத்தில்  எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை.  அதாவது அரசியல் அமைப்பை மாற்றுவதாகவும் அல்லது தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பாக  பாராளுமன்ற அதிகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 

கேள்வி: தெற்கிலுள்ள முதலமைச்சர்கள் என்ன கோரியிருந்தார்கள்?

பதில்: நீங்கள் தேசிய கொள்கைகளை உருவாக்க முடியும். ஆனால்  எங்களையும் சம்பந்தப்படுத்துங்கள் என்பதேயாகும். அதேவேளை,  தேசிய கொள்கைகளை உருவாக்கும் போர்வையில் நாங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தை உங்களால் அகற்ற முடியாது. 

சட்டங்களின் முறைமையின் அடிப்படையிலேயே தேசிய கொள்கைகள் உருவாக்கப்படுவது அவசியம்.  நிர்வாக சுற்றறிக்கைகள்  அல்லது அமைச்சரவைத் தீர்மானங்களினால் தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட முடியாது. 

கேள்வி:  பொதுப் பட்டியல் நிலைமை என்ன மாதிரி?

பதில்: சகல முதலமைச்சர்களும் எதிரணியிலுள்ள சகல தலைவர்களும் பொதுப் பட்டியலை வெளியிட வேண்டும் என விரும்பபுகின்றனர். ஆனால்,  இந்த விடயத்தை  மிகக் கவனமாக பரிசீலனை செய்ய வேணடும் என வழிகாட்டல் குழு கருதியது.  பொதுப் பட்டியலை முழுமையாக நீக்கிவிடுவதற்கு  வழிகாட்டல் குழு  ஆதரவாக இல்லை.  தனிப்பட்ட முறையில் அதனை குறுகிய பொதுப்பட்டியலாக வைத்திருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.

கேள்வி:  மத்திய அரசாங்கத்திற்கு  பிரத்தியேகமான விடயங்கள் எவை?
 
பதில்: ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயங்களில்  எந்த மாற்றங்களும் பிரேரிக்கப்பட்டிருக்கவில்லை. 

கேள்வி:  மத்தியில் அதிகாரப் பகிர்வு என்னமாதிரியாக உள்ளது?

பதில்: அது மிகவும் முக்கியமானதொன்றாகும்.  இதயசுத்தியுடனான அதிகாரப் பகிர்வைக் கொண்ட சகல நாடுகளிலும்  மத்தியில்  அதிகாரம் பகிரப்படுகின்றது.  அலகுகளுக்கு  அதிகாரத்தை வழங்கும் போது  இந்த அலகுகள் திரும்பவும் மத்தியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாக அவற்றை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். 

2000 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட நகல் வரைபில் பின்னடைவு ஒன்று உள்ளது.  இரண்டாவது சபை தொடர்பான அங்கு இணக்கப்பாடு எற்பட்டிருக்கவில்லை. ஸ்பெயினில் கட்டலோனியா  சம்பந்தப்பட்ட விடயத்தை நீங்கள் பார்த்ததால்  இது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. 

அதிகாரப் பகிர்வினால்  விவகாரத்தாலேயே. முதலாவதாக அங்கு  இதயசுத்தியுடனான  அதிகாரப்பகிர்வு இல்லை. ஸ்பெயினில்  நீடித்த  அதிகாரப் பகிர்வு உள்ளது. ஆனால், மத்தியில் அதிகாரம் பகிரப்பட்டிருக்கவில்லை.  ஆதலால்  மத்தியின் அங்கமாக தாங்கள் இருக்கின்றார்கள் என்று அலகுகள்  கருதவில்லை.  இந்த அலகுகள் யாவும் மத்தியில் அதிகாரத்தை பகிர்வதாக கொண்டுவரப்பட்டிருந்தால் விடயங்கள் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

கேள்வி:  அத்தகைய ஏற்பாடுகளை  இங்கு கொண்டு வருவது தொடர்பாக  எவ்வாறு நீங்கள் செயற்படுகின்றீர்கள்?

பதில்: ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் ஐந்து உறுப்பினர்கள் தொடர்பாக அறிக்கையில்  பிரேரரிக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்றத்தினால் 10 பேர் நியமிக்கப்படவுள்ளார்கள். 

கேள்வி:  இந்த யோசனைகளை எப்போது நீங்கள் மேற்கொண்டீர்கள்? 
நீங்கள் பரிசீலனைக்கு எடுத்திருக்கும் முன்மாதிரிகள் எவ்வாறாக உள்ளன?

பதில்: அரசியலமைப்பு தயாரிக்கப்படும் போது  ஏனைய  சட்டவாதிக்கங்களில்  என்ன நடந்துள்ளது என்பது பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது.  மற்றொரு நாட்டில்  குறிப்பிட்டதொரு ஏற்பாடு  வெற்றியடைந்துள்ளது என்பது பற்றியதாக இது அர்த்தப்படாது. 

மற்றொரு நாட்டில்  இது தோல்வியாக அமைந்திருந்தால் எமது நாட்டிலும் இது தோல்வியாக அமையும் என அர்த்தப்படாது. ஏனைய முன்மாதிரிகளில் இருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.  ஆனால்,  மாதிரிகளில் நான் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனைய நாடுகளில் என்ன நடந்துள்ளது என்பதை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி:  சமஷ்டிக் கட்டமைப்பை கொண்டிருப்பதற்கு இலங்கை மிகவும் சிறிய நாடாக இருக்கின்றது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.  இது தொடர்பாக தங்கள் பதில் என்ன?

பதில்: அது பழைய வாதமாகும்.  உங்கள் ஊடகவியலாளர் தொழில் களத்திலும் பார்க்க இது பழைமையானது.  சுவிற்ஸர்லாந்தில் என்னமாதிரியாக உள்ளது?
 அந்த மாதிரியான சிறிய நாடொன்றில் வலுவான சமஷ்டி தன்மைகளை நீங்கள் கொண்டுள்ளீர்கள். இலங்கையிலும் பார்க்க சுவிற்ஸர்லாந்து மிகவும் சிறிய நாடு. 

இலங்கையில் எவருமே சுவிஸ் கன்டோன்களுக்கு இருக்கும்  அதிகாரங்களை கேட்கவில்லை.  நான் உங்கள் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். இங்கு அதிகாரப்பகிர்வு மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. சமஷ்டி அல்ல.  அந்த விடயம்  நாட்டின் பருமனில் தங்கியிருக்கவில்லை. 

கேள்வி: 30 வருடங்களாக பிரிவினைவாதத்தால்  சம்பந்தப்பட்ட நாடாக இலங்கை உள்ளது.  கணிசமான  அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படும் போது  பிரிவினை வாத சக்திகள் தமது இறுதி இலக்கை எட்டுவதற்கு இது எடுத்துவைக்கும் அடியாக அமையும் என சிலர் அச்சப்படுகின்றார்கள்.  உங்கள் கருத்து என்ன?

பதில்: இன மோதலுக்கான காரணத்தை  நீங்கள் அறிந்து கொள்ளாமல் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.  நாங்கள் யுத்தத்தை கொண்டிருந்தோம்.  யுத்தத்திற்கான ஆணிவேரை நீங்கள் கொண்டிருக்க வேண்டியுள்ளது.  அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றியே நான் பேச வேண்டியுள்ளது. 

எமது பிரச்சினையின் வரலாற்று ரீதியான பின்னணி என்ன? எமது தலைவர்கள் எதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்?  அரச அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் விடயத்திற்கு தீர்வு காண அவர்கள் முயற்சித்திருந்தார்கள்.  இந்த நாட்டை பலதரப்பட்ட சமூகங்கள் ஆள்வதற்கு  முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் அரசியல் விவகாரம் தொடர்ந்து இருந்து வருகிறது.  அது அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பான விடயமாகும்.  இதனை மிகவும் இலகுவாக கொண்டிருக்கும் சிலரும்  உள்ளனர்.  2007 இல் கருத்தரங்கு ஒன்றில் நான் இதனை கூறியிருந்தேன். 

தமிழர்கள் என்ன பிரச்சினைகளை கொண்டிருக்கிறார்கள்?  நாங்களும் ஒரே பஸ்ஸில் போகிறோம்.  ஒரே தேநீர் கேத்தலை பகிர்ந்து கொள்கிறோம் என்று ஒருவர் தனது பதிலாக இதனைக் கூறினார். அவரைப் பொறுத்தவரை  ஒரே தேநீர் கேத்தலை  பகிர்ந்து கொண்டால்  பிரச்சினை அங்கு இல்லை என்பதாகும்.

எனது தருணம் வந்த போது  அது பிரச்சினையாக இருப்பதாக நான் கூறினேன்.   நீங்கள் தேநீர் கேத்தலை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளீர்கள். ஆனால் அரச அதிகாரத்தை அல்ல என்று நான் கூறினேன். ஆரம்பத்தில் இருந்தே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.  அங்கு பிரச்சினை எதுவும்  இல்லை என ஆட்கள் நினைக்கின்றார்கள். 

பிரச்சினை எதுவும் இல்லாவிட்டால் அங்கு ஏன் யுத்தம்  ஏற்பட்டது?  பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களுக்கு நீங்கள் தீர்வு காண வேண்டியுள்ளது.  அரச அதிகாரங்களை பல்வேறு சமூகங்கள் பகிர்ந்து கொள்ளும் விதத்திலும் அல்லது  பல்வேறு மட்டங்களில்  ஆட்சியை பெற்றுக் கொள்வதற்கும்  தேவைப்பாடு உள்ளது.  நாங்கள் அரசாங்கத்தின் மூன்றாவது கட்டத்தை பிரேரித்துள்ளோம்.  கிராம மட்டத்தில் மக்கள்  கிராம சபைகளை கோருகின்றனர். 

கேள்வி: நீங்கள்  இடதுசாரிக் கொள்கையுடைய அரசியல் வாதியாக உள்ளீர்கள்.  பொருளாதார காரணங்களினாலேயே இந்த பிரச்சினை உருவானதாக இடதுசாரி அரசியல்வாதிகள் சிலர் வாதிடுகின்றனர் உங்கள் பதில் என்ன?

பதில்: உதாரணங்கள் சிலவற்றை உங்களால் எனக்கு தரமுடியமா? ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோகண விஜயவீர  தனது நூலில்  இதனை  ஆய்வு ரீதியாக குறிப்பிட்டுள்ளார். ( ஊடகவியலாளரின் பதில் இது).

இப்போது ஜே.வி.பி. வேறுபட்ட கருத்தை கொண்டிருக்கிறது.  இடதுசாரி என்று அழைக்கப்பட்ட ஆட்கள்  மட்டுமல்லாமல் சில ஆட்கள்  மற்றும் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்களும்  இது வெறுமனே பொருளாதார பிரச்சினை என நினைக்கின்றனர். 

உலகம் பூராகவும் உள்ள அனுபவங்கள்  இந்த விடயம்  இறுதியில்  ஆட்சியை பெற்றுக் கொள்வதற்கும் அரச அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான விடயம் என்பதை பரிந்துரைக்கிறது.  புதிய அரசியலமைப்பொன்று இருக்காவிடில் என்ன மாதிரியாக இருக்கும்?  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படாவிடில் என்ன நடக்கும்?  நிறைவேற்று அதிகார முறைமையை பொறுத்தவரை  இரு அதிகார மையங்கள் உள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் என இரு அதிகார மையங்கள் காணப்படுகின்றன.  தற்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான உறவு தொடரும் வரை அங்கு பிரச்சினை இருக்காது.  புதிய ஜனாதிபதி அல்லது புதிய பிரதமரின் கீழ் அந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டால்  நிறைவேற்று அதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் மோதல்கள் ஏற்படும்.  இதற்கு தீர்வுகாண வேண்டியுள்ளது. 

அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயத்தில்  இணக்கப்பாடு ஒன்று இல்லாவிடில் என்ன நடக்கும்?  வடக்கிலுள்ள தீவிரவாதிகள் வலுப்பெறுவார்கள். அது இடம்பெற்றால் வடக்கிலுள்ள மக்கள் அடிப்படை வாத தன்மையை கொண்டவர்களாக மாறுவார்கள். மிகவும் மிதவாத சக்தியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரங்கட்டப்பட்டுவிடும். 

பாராளுமன்றத்தில் அதிகளவுக்கு அடிப்படைவாதத் தன்மை கொண்ட தலைவர்களுடனேயே நாங்கள் விடயங்களை கையாள வேண்டி ஏற்படும்.  புதிய அரசியல் அமைப்பை எதிர்ப்போர்  அதனையே விரும்புகின்றனர்.  அவர்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர்.

கேள்வி:  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: ஆட்கள் 40 வருடங்களாக இதுபற்றி கலந்துரையாடுகிறார்கள்.  2015 ஜனவரி 8 இல் பொதுமக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். இப்போது  நாங்கள் அதனை அமுல்படுத்துவதிலேயே அது தங்கியுள்ளது. 

கேள்வி: ஆனால், ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான கட்சியே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தங்கள் பதில் என்ன?

பதில்: இது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், பின்னர் அமைச்சர்கள் டிலான் பெரேரா மற்றும் தயாசிறி ஜெயசேகர போன்றோர்  வயிற்றில் இருந்து  சதையை ஆட்கள் கோரக்கூடாது என  கூறுவதாக  நான் கேள்விப்பட்டுள்ளேன். 

வெற்றி பெறுவதற்கான சூத்திரம் ஒன்றை நாங்கள் கண்டறியவேண்டிய தேவை ஒன்று உள்ளது.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மைத்திரிபால சிறிசேன கொண்டிருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.  மற்றொரு ஜனாதிபதி தேர்தல் இருக்க மாட்டாது. 

அதனையே அவர் கூறியிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதனை அவர் தெரிவித்திருந்தார். ஐக்கிய இடது முன்னணியில் உள்ள நாங்கள் இதனை யோசனையாக முன்மொழிந்திருந்தோம்.  இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் செல்லுமாறு எமது கட்சி எனக்கு அறிவுறுத்தியிருந்தது. 

பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்ற அடிப்படையில் அரசியல் அமைப்பை நாங்கள் நிறைவேற்றுவோம்.  நாங்கள் அல்லது கட்சிகள் அரசியலமைப்பு தொடர்பாக இணங்குகிறோம். அத்துடன், ஜனாதிபதி சிறிசேன இரண்டாவது பதவிக் காலத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கும் நாங்கள் இணங்கியுள்ளோம்.

TOTAL VIEWS : 416
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5rtue
  PLEASE ENTER CAPTA VALUE.