புத்தாண்டில் உண்மையைத் தேடுதல் அரசியல் ரீதியில் சாத்தியமாகுமா?
2017-12-28 11:17:16 | General

உள்ளூராட்சித் தேர்தல்கள் 2018 பெப்ரவரி 10 இல் இடம்பெறவுள்ளன. சுமார்  ஒரு கோடியே 60 இலட்சம் பேர் இந்தத் தேர்தல்களில் வாக்களிக்கவுள்ளனர். இலங்கையின் வரலாற்றில் இது மிகப் பாரிய தேர்தலாக அமையும். கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் முதற்தடவையாக இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.

60 வீதமான உறுப்பினர்கள் பழைய தொகுதி முறையின் கீழும் ஏனைய 40 வீதமானோர் விகிதாசார பிரதிநிதித்துவப் பட்டியல்  மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளனர். எவ்வாறாயினும், தேர்தல் பெறுபேறுகள் தொடர்பான எதிர்பார்ப்பானது முன்னைய தேர்தல்களை விட குறைந்தளவானதாகவே இருக்கும்.

கடைசியாக 2011 இல் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற்றது. 65%மானோர் மட்டுமே அச்சமயம் வாக்களித்தனர். இந்தத் தடவை அந்தத் தொகை குறைவாக இருக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் தொடர்பாக வாக்காளர்கள் வலுவான பிணைப்பைக் கொண்டிருக்கவில்லை.


இலங்கையில் மத்திய அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது உள்ளூராட்சி அரசாங்கம் பலவீனமானதாக இருக்கின்றது. ஆதலால் உள்ளூர் தேர்தல்கள் தொடர்பான விவகாரங்கள் வழமையாக உள்ளூர் விவகாரமாக இருப்பதில்லை. ஆனால், தேசிய விவகாரங்களே வாக்காளர்களுக்கு அதிகளவுக்கு ஆர்வம் கொண்டவையாக இருக்கின்றன. இந்தத் தேர்தலும் அதற்கு விதிவிலக்காக இருக்காது.

குறிப்பாக எதிரணி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றது என்று வாக்காளர்களைப் பார்க்கச் செய்வதற்கு தூண்டுதலிக்க முயற்சிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றார். இந்தத் தேர்தல் உள்ளூர் விவகாரங்கள் பற்றியதாக இருக்க மாட்டாது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

அதேவேளை அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவளிப்பார்களா அல்லது எதிர்ப்பார்களா என்பது பற்றி தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. வாக்காளர்களுக்கு அளித்த உறுதிமொழிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது அரசாங்கம் தொடர்பாக அவர் (மகிந்த ராஜபக்ஷ) முன்வைக்கும் விவாதமாகும்.


அரசாங்கத்தை அமைத்திருக்கும் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல்கள் அனுகூலமற்றவையாக உள்ளன. 2015 இல் இடம்பெற்ற தேசிய தேர்தல்களின் போது அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவற்றின் செயற்பாட்டை காண்பிப்பதன் மூலம் அவை அனுகூலமற்றவையாக அமையும். 2015 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 78% மாக அமைந்தது.

அரசாங்கத்தின் பிரதான பிரசார உறுதிமொழிகள் சிறப்பான பொருளாதாரத்தை ஏற்படுத்துதல், பாரியளவிலான ஊழல், மோசடியில் குற்றம் சாட்டப்பட்டோர் தொடர்பாக நீதியை வழங்குதல், பொதுமக்களுக்கு சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுத்தல் என்பனவாக இருந்தன. ஆனால் இந்தப் பிரசாரத்தில் வேட்டைக்காரனே வேட்டையாடப்படுவதை பார்க்கக்கூடியதாக இருக்கும்.

பாரியளவில் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேட்டைக்காரர்களாக இப்போது உருவாகுவதற்கு நாடியுள்ளனர். வாக்காளர்களுக்கான பிரச்சினையாக இருப்பது கூட்டு எதிரணியின் தடம் மாறிய பாதையாகும். அரசாங்கம் மிகவும் வறியதாக இருக்கும் நிலையில் அவர்கள் (கூட்டு எதிரணி) தமது கடந்த காலம் தொடர்பான சுயவிமர்சனத்தை அலட்சியப்படுத்துவதை நாடியுள்ளனர். 

மறுசீரமைக்கப்படாத எதிரணி

தாங்களே  மறுசீரமைப்புக்கு உட்பட வேண்டிய தன்மையை கூட்டு எதிரணி அதிகளவுக்கு காண்பிக்க வில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தமக்கு இது அனுகூலமற்றதாக அமையும் என்பதை இந்த விடயம் நிரூபிக்கும். கடந்த வாரம் பெண் செயற்பாட்டாளர்கள் அடங்கிய சிறிய குழுவொன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்தது.

ஒருங்கிணைந்த நல்லிணக்க பொறிமுறைகளுக்கான அரசாங்கத்தின் செயலகத்துடன் சந்திப்புக்கு அக்குழுவினர் வந்திருந்தனர். பிரதமரின் அலுவலகத்தின் கீழ் இந்தப் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு அரசாங்கத்தின் ஆலோசகர் மனோ தித்தவெல தலைமை தாங்குகின்றார். கொழும்பு வருவதற்கு முன்னர் அவர்கள் பல தடவைகள் சந்தித்திருந்தனர்.

அரசாங்க அதிகாரிகளிடம் தமது துன்பங்கள் தொடர்பாக மகஜர்களை சமர்ப்பித்திருந்தனர். தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து அவற்றை அவர்கள் கையளித்திருந்தனர். ஆனால், கொழும்புக்கு வருவதன் மூலமே இந்த விடயங்களைச் செய்ய முடியும் என்ற பொதுவான எண்ணப்பாடு காணப்படுகின்றது. அதனடிப்படையில் அவர்கள் இங்கு வந்திருந்தனர். கொழும்பிலுள்ள மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளிடம் சந்திப்பு தொடர்பாக அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

அந்தச் சந்திப்பில் பெண்கள் பல்வேறு விடயங்களை தெரிவித்திருந்தனர். அதிகாரத்திலுள்ளவர்களினால் தமது துன்பங்கள்  கேட்கப்பட வேண்டும் என்பதில் தாங்கள் ஆர்வத்துடன் இருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் விடயம் பின்னடைவை கண்டிருந்தது. அவர்கள் என்ன கூறவுள்ளனர் என்பதை கவனிப்பதற்குப் பதிலாக, அவர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை கேட்பதற்குப் பதிலாக அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தாங்கள் திட்டமிட்டிருப்பதாக அவர்களுக்கு கூறியுள்ளனர்.

இதனால் அவர்கள் விசனமடைந்தனர். தமது முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் மாற்றத்திற்கான இடைவெளி மிகவும் தாமதமாக இருப்பது குறித்து அவர்கள் விசனமடைந்திருந்தனர். காணாமல் போனோர் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது குறித்து அவர்கள் ஆத்திரமடைந்திருந்தனர். செயலகத்தின் அதிகாரிகள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு முன்பாக நல்லிணக்க ஒருங்கிணைப்புக்கான விடயங்களில் செவிமடுத்தமை தொடர்பாக மெச்சியிருந்தனர்.

இரண்டாவதாக அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க விடயமாக இருந்தது. கொழும்புக்கு தாங்கள் சுதந்திரமாக பயணம் செய்யக்கூடியதாக இருப்பதாகும். அரசாங்கத்திடம் தமது கவலைகளை தெரிவிக்கக்கூடியதாக இருந்தது என்பது இரண்டாவது விடயமாகும். கடந்த காலத்துடன் நிகழ்காலத்தை அவர்கள் ஒப்பிட்டுள்ளனர். நிகழ்காலத்தை சாதகமான முறையில் அவர்கள் ஒப்பிட்டிருந்தனர். கடந்த காலத்தில் வடக்கிலிருந்து தெற்கிற்கு வர முடியாது எனவும் அத்தகைய சுதந்திரம் இல்லையெனவும் அத்துடன் கடந்த காலத்தில் தமது மனதில் இருந்ததை அரசாங்க அதிகாரிகளுடன் பேச முடியாதிருந்ததாகவும் அவ்வாறு பே
சினால் வெள்ளை வான்களில் அவர்கள் கொண்டு செல்லப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அச்ச சூழல் முழுமையாக இல்லாவிடினும் குறைவடைந்திருப்பதே இங்கு முக்கியமானதொன்றாகும். தீக்கோழி போன்று புறக்கணித்துக் கொண்டிருக்காமல் பதிலாக கூட்டு எதிரணி செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மூன்றாவது விடயமாக இருப்பது, தெற்கில் தாங்கள் கதைத்த ஆட்கள் தமது பிரச்சினைகள் குறித்து அனுதாபத்துடன் இருந்ததாக பெண் செயற்பாட்டாளர்கள் கூறிய விடயமாகும். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வெளிப்படைத்தன்மை காணப்பட்டதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மீளவும் இது இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது என்பது பற்றியும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். துன்பங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையாக இருக்கின்றது. தெற்கிலுள்ள மக்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அலட்சியமாக இருந்தார்கள் என்பதில்லை. ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலத்தில் அவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். போராளிகளினதும் பாதுகாப்புப் படைகளினதும் கரங்களில் அவர்கள் பாதிப்படைந்திருந்தனர். புலிகளின் காலகட்டத்தில் அதே நிலைமையை கொண்டிருந்தார்கள். 

வெளிப்படைத் தன்மையைக் கொண்ட மக்கள் கடந்த காலத்தைப் பற்றி கற்றுக் கொள்வதில் இலங்கையர்களில் அநேகமானோர் திறந்த மனதுடன் இருப்பதை தற்போது இடம்பெற்றுவரும் ஆய்வு காண்பிக்கின்றது. ஒருபுறத்தில் ஏனைய சமூகங்கள் பற்றிய அறிவு அதிகளவில் பிளவுபட்டதாக காணப்படுகின்றது. அவர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் கூட வேறுபட்ட இன, மத, சமூகங்கள் மத்தியில் இருக்கின்ற போதிலும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்ற போதிலும் கூட இது தொடர்பான அறிவு குறைவாக உள்ளது. மறுபுறத்தில் உண்மையின் மற்ற பக்கத்தைப் பற்றி கற்றுக் கொள்வதில் வலுவான ஆர்வம் காண்பிக்கப்படுகின்றது.

இது இலங்கையின் சிறப்பான தன்மையாகும். இது தொடர்பாக சர்ச்சை இருப்பதை அவர்கள் அறிவார்கள். உண்மையை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த விடயமும் பாதுகாப்புப் படைகளின் அநேகமான உறுப்பினர்களுக்கு பொருத்தப்பாடாக அமைகின்றது. தாங்கள் புகைமூட்டத்தின் கீழ் இருப்பதையும் தங்களின் பெயர்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டிய வெளிப்பாடு இருப்பதையும் அவர்கள் விரும்புவதாக தென்படுகிறது.

பல வருட இன, மத முரண்பாடுகள் இருந்தபோதிலும் அநேகமான மக்கள் வெறுப்புணர்வை கொண்டிருக்க  விரும்பவில்லை. அல்லது அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டிருக்க விரும்பவில்லை. தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆய்வில் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருப்பது சமூக மட்டத்திலுள்ள மக்கள் ஏனைய இன, மத சமூகங்களை உள்ளடக்கிய தீர்மானத்தை உருவாக்கும் குழுக்களை அமைக்க விரும்புவதாகும்.

தேசிய சமாதானப் பேரவை போன்ற சிவில் சமூகக் குழுக்கள் சகல மட்டத்திலும் சகல துறைகளிலும் உள்ள மக்களை உள்ளடக்கிய சிவில் சமூகக் குழுவாக விளங்குகிறது. இந்த சிவில் சமூகக் குழுக்களில் அரச நிர்வாகத் துறை, பாதுகாப்புப் படையினர், மதகுருமார் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் சந்திப்புகளை மேற்கொள்வதிலும் ஒன்று சேர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இது மிகவும் சாதகமான சமூக, கலாசார அம்சமாகும். இலங்கையில் அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு உள்ளது. தேசிய விவகாரங்கள் தொடர்பாக எதிர்வரும் தேர்தல்களில் கவனத்தை செலுத்துவதன் காரணமாக அரசாங்கம் சர்ச்சையான எந்தவொரு விடயத்தையும் செய்வதற்கு விரும்பும் சாத்தியப்பாடு காணப்படவில்லை. அவ்வாறு செய்தால் எதிரணியின் தேர்தல் பிரசாரத்திற்கு தீனி போடுவதாக அமையும்.

கூட்டு எதிரணி தீவிரமான தேசிய வாதத்தை தமது அரசியல் ரீதியான அறிவிப்புகளில் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தத் தடவை தேர்தல் அரசியலுக்கான காரணங்களுக்கான முரண்பாட்டை கொண்டிருப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க மாட்டாது.

ஆனால், பெப்ரவரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் நல்லிணக்கத்திற்கான புதிய வாய்ப்பு ஏற்படும். உண்மையை தெளிவுபடுத்துவது மற்றும் அளித்த வாக்குறுதியை நிச்சயமாக்குதல் என்பனவற்றை வழங்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக அமையும். மக்களால் அதுவே விரும்பப்படுவதும் அவர்களுக்கு தேவைப்பட்டதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இது அமையும். 

 

TOTAL VIEWS : 873
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kd7fe
  PLEASE ENTER CAPTA VALUE.