புதிய அரசியலமைப்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதி; அமைச்சர் கயந்த கருணாதிலக கூறுகிறார்
2017-11-04 10:06:55 | General

மக்களுக்கு அளித்த உறுதிமொழியை புதிய அரசியலமைப்பென்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக கூறியிருக்கின்றார். 


தற்போதைய அரசியலமைப்பைக் கொண்டுவந்த நாங்கள் கூட ( ஐ.தே.க.) மாற்றம் தேவையென்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதியும் அதே கருத்தைக் கொண்டிருக்கின்றார்.

18ஆவது திருத்தத்தை கொண்டுவந்த விவாதத்தில் இதனை நாங்கள் கொண்டுவரமாட்டோம். சகலரினது அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்வோம். இப்போது தயாரிக்கப்பட்டிருப்பது இடைக்கால அறிக்கை.

அது குறித்து கலந்துரையாடப்படுகின்றது. நாங்கள் எதனையும் பலவந்தமாக திணிக்க முயற்சிக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிலோன் டுடே பத்திரிகைக்கு அமைச்சர் அளித்த பேட்டி வருமாறு; 

கேள்வி: அரசாங்கம் சுமார்  3 வருடங்களைத் தாண்டியுள்ளது. ஆயினும் பல குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றனவே? 

பதில்: நீங்கள் கூறுகின்ற குற்றச்சாட்டுகள் என்ன?

கேள்வி: குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் என்ன என்பது குறித்து 
நீங்கள் அறியாதிருக்க முடியாது? 

பதில்: அவற்றில் சிலவற்றை நீங்கள் கூறுங்கள்.

கேள்வி: அரசாங்கம் கூறுவதை செய்யாத அரசாங்கமென்று தெரிவிக்கப்படுகின்றது. நாட்டுக்கு அரசாங்கம் துரோகம் இழைப்பதாக கூறப்படுகின்றது. அது தொடர்பான நீண்ட பட்டியல் உள்ளதே?

பதில்: எவராவது எதனையாவது கூறுகின்றனர். நாங்கள் மௌனப் புரட்சியில் ஈடுபட்டுள்ளோம். நல்லாட்சியை ஏற்படுத்துவோமென்று கூறியிருந்தோம். நாங்கள் அதனைச் செய்துள்ளோம். ஆட்சி அதிகாரம், பண அதிகாரம் அல்லது ஊடக அதிகாரம் என்பன இல்லாமல் மக்களின் அதிகாரத்தை நாங்கள் வென்றெடுத்தோம்.

கடந்த இரு வருடங்களைப் பார்த்தால், மிகவும் நெருக்கடியான நிலையில் நாட்டை பொறுப்பெடுத்திருந்தோம். அரசாட்சிப் போன்றிருந்தது. சர்வாதிகார பரம்பரை ஆட்சியாக இருந்தது. அதனை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்.

இன்று அதிகளவான சுதந்திரம் காணப்படுகின்றது. முன்னர் அந்த சுதந்திரமிருந்ததா?, இன்று அதிகளவு சுதந்திரம் காணப்படுகின்றதென்பதே குற்றச்சாட்டாகும். அதிக பட்சம் ஊடக சுதந்திரம் இருக்கின்றது. எவ்வாறாயினும் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்கியிருந்த போதிலும் ஊடக உரிமையாளர்கள் அந்த சுதந்திரத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளார்களா என்பது கேள்வியாகவுள்ளது. ஊடகவியலாளர் மீது அவர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

கேள்வி:  இப்போது புதிய அரசியலமைப்புத் தொடர்பாக விமர்சிக்கப்படுகின்றது ?அரசாங்கம் எங்கு தவறிழைத்துள்ளது?

பதில்: புதிய அரசியலமைப்பொன்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியாகும்.  தற்போதைய அரசியலமைப்பை நாங்கள் கொண்டுவந்திருந்தாலும் கூட, தேவையான மாற்றத்தினை நாங்கள் ஏற்றிருக்கின்றோம். ஜனாதிபதியும் அதே கருத்தைக் கொணடிருக்கின்றார். 

18 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட அதேவழி முறையை நாங்கள் அறிமுகப்படுத்த மாட்டோம். சகலரது அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்வோம். இப்போது இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக கலந்துரையாடப்படுகின்றது. அதிகளவு ஜனநாயகத்துடன், எந்தவொரு அரசியலமைப்பும் கொண்டுவரப்பட்டதாக நாங்கள் எதனையும் பலவந்தப்படுத்தமாட்டோம். 

கேள்வி: அதிகளவு கருத்துகளை  பெற்றுக் கொண்டிருப்பதால் நெருக்கடி இருக்கின்றதா?

பதில்: இல்லை. நெருக்கடி அங்கு இல்லை. விமர்சனமும் பேச்சுவார்த்தையும் மாத்திரமே, அது நெருக்கடியல்ல. 

கேள்வி: மகா சங்கத்திடமிருந்து கூட எதிர்ப்புக் காணப்படுகின்றதே?

பதில்: நாங்கள் மகாசங்கத்தினர் தமது கருத்துகளைத் தெரிவிக்க அதிகபட்ச வாய்ப்பை வழங்கியிருந்தோம். மத குருமார்கள் எதிர்ப்பதாக ஊடகம் கூறுகின்றது. எவ்வாறாயினும் அது விடயமல்ல என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 


கேள்வி: ராஜபக்ஷ அணியின் கோட்டையை வீழ்த்துவதற்கு கருவியாக இருந்தவர் ரத்ன தேரர். இந்த அரசாங்கம் அமைவதற்கு அவர் உதவியிருந்தார். அவர் புதிய அரசியலமைப்பினால் நாடு அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்று கூறுகிறாரே?

பதில்: அரசாங்கத்திற்குள்ளேயே அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்கின்றதென்பதை இது காண்பிக்கின்றது. அதுதான் சுதந்திரம்.

கேள்வி: சுதந்திரக் கட்சியின் சார்பில் உரையாற்றும் போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிழையான விடயங்கள் இருந்தால் கட்சி  ஆட்சேபிக்குமென்று கூறியுள்ளாரே?

பதில்: தவறான விடயங்கள் இருந்தால் ஐ.தே.க.வும் அதனை எதிர்க்கும். 

கேள்வி: தற்போதைய அரசியல் அமைப்பை ஐ.தே.க. வரைந்ததைப் போன்று தென்படுகின்றதே? புதிய அரசியலமைப்பு யாருக்கு அதிகளவுக்கு தேவைப்படுகின்றது? 

பதில்: இல்லை,  ஜனாதிபதி, பிரதமர் உட்பட யாவருமே அதனை விரும்புகின்றோம். புதிய அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் ஆணையை இந்த அரசாங்கம் பெற்றிருந்தது. நாங்கள் யாவரும் இந்த நாட்டை நேசிக்கின்றோம். எமது மார்பில் அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. 


கேள்வி: பாராளுமன்றத்திற்கு குண்டு வீசப்பட வேண்டுமென்று விமல் வீரவன்ச கூறுகின்றாரே? புதிய அரசியலமைப்புக்கு வாக்களிக்கப்பட்டால் அவ்வாறு செய்ய வேண்டுமென்று கூறுகின்றாரே? 

பதில்:  அந்தக் கதை முன்னைய அரசாங்கத்தின் அடிவருடிகளிடமிருந்து வருகின்ற கதையாகும். அவர்களின் மனப்பாங்கை அது காண்பிக்கின்றது. அதிகாரத்தில் இருந்தபோது எவ்வாறு அவர்கள் நடந்துகொண்டார்கள் என்பது என்று உங்களால் நினைவு கூறமுடியுமா?

அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு சவால் விடுக்க முனைந்தார்கள். கோமாளிகளாக உருவானார்கள். எவ்வாறாயினும், 80 களில் பாராளுமன்றத்திற்கு குண்டு வீசியவர்கள் அவர்களின் உறவுகளாவர். அந்த ஆட்களே பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கினார்கள். தமது கரங்களில் சட்டத்தை எடுத்தவர்களும் அவர்களே.

இப்போது அவர்கள் கூச்சலிடுகின்றார்கள். அதனாலேயே அந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. பாராளுமன்ற உறுப்பினரொருவர் அந்த மாதிரியான பயங்கரமான விடயங்களைக் கூறுவாரா ?

கேள்வி : இத்தகைய கருத்துகள் எந்தக் கட்சியிலுமுள்ள குறிப்பிட்ட சிலரினால் வெளியிடப்படுகின்றன. இத்தகைய விடயங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லையா? 

பதில்: மிகவும் பெறுமதியான கேள்வியை நீங்கள் கேட்கின்றீர்கள். உண்மையில் இது தொடர்பாக எமது கவனத்தைச் செலுத்த வேண்டும். குண்டு வீசப்படுமென்றோ ஒரு இடத்திற்கு குண்டு வீசுவதோ ஒரே மாதிரியான விடயமாகும். நீங்கள் எவரையாவது கொன்றால் அல்லது அச்சுறுத்தினால் அது குற்றச் செயலாகும். 

கேள்வி: ஓய்வு பெற்ற சில இராணுவ அதிகாரிகள் புதிய அரசியலமைப்புக்கு வாக்களிக்கும் அமைச்சர்கள், சுடப்பட வேண்டுமென்றும் அவர்களின் உடல் முழங்காலுக்கு மேலே கொண்டு செல்லக் கூடாதெனவும் கூறியுள்ளனரே? 

பதில்: அவை அரசியல் நிகழ்ச்சி நிரல்கள், அதேவிதமான இடத்தில் இருந்து அவை  வெளிப்படுத்தப்படுகின்றன. 

கேள்வி: பிக்குகளை தாக்குவதற்கு கூலிப் படைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றதென்று டலஸ் அழகப்பெரும கூறுகின்றாரே?

பதில்: அரசியலுக்காக பிக்குகளை யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை சகலரும் அறிவார்கள். இந்த விடயங்களைக் கூறும் தலைமை பிக்குகள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த இதே ஆட்கள் முயற்சித்திருந்தார்கள். இதே ஆட்கள் தலதா மாளிகைக்கு எதிரில் கார் ரேஸ் இடம்பெற்றபோது மௌனமாக இருந்தார்கள். இப்போது அவர்கள் கத்துகின்றனர்.

கேள்வி: 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட விதம் தவறென உயர்
நீதிமன்றத்திற்கு சென்று முன்னாள் தலைமை பிரதி நீதியரசர் ஒருவர் கூறியுள்ளாரே?

பதில்: பூக்காத மொட்டுகளுக்கு பட்டியலை தயாரிக்க இயலாது. அவர்கள் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு ஆயத்தமாகவில்லை. எதிர்காலத்தில் இது தான்  அரசாங்கம் வெற்றிபெற்றதென்று கூறுவார்கள்.

சுதந்திரக் கட்சிக்குள் முறிவை ஏற்படுத்துவதற்கு ஐ.தே.க. வழியமைத்து இருக்கவில்லையா? ஏன் அதனைக் கூறுகின்றீர்கள்? அந்த இரு அணிகளும் கடும் பகைவர்கள். பாம்பும் கீரியும் போன்று மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். அது எங்களால் அல்ல. எவர் எதனைச் செய்தாலும் அந்த இரு அணிகளும் ஒன்று சேரமாட்டாது. 

கேள்வி: அந்த மோதல்கள் குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்?

பதில்: இல்லை, நாங்கள் சந்தோசமோ , துக்கமோ கொள்ளவில்லை. சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கான போராட்டத்தை மகிந்த ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அவர் அதிகாரத்தில் இருந்த போது மற்றைய கட்சியை உடைத்தார். இப்போது அவர் அதிகாரத்தில் இல்லாதபோது அவரின் சொந்தக் கட்சியை உடைத்துக் கொண்டிருக்கின்றார். 

கேள்வி: ஊழல் மோசடியான ஆட்கள் அல்லது திருடர்கள் எவரும் பிடிபட்டிருக்கவில்லையா?

பதில்: பல்வேறு காரணங்களால் அது தாமதமடைந்து வருகின்றது. இப்போது அதற்குத் தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. திறமையின்மைக்கான காரணத்தை நாங்கள் மாற்றியுள்ளோம். இப்போது யாவரும் துரிதப்படுத்தப்படுகின்றனர்.

கேள்வி: அமைச்சரே திருடர்கள் இப்போது மாறியுள்ளனரோ?

பதில்: ஏன் அது?

கேள்வி: அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும் போது விசாரணைகளுக்காக  அழைக்கப்படும் ஆட்களாக அவர்கள் இருக்கின்றார்களே?

பதில்: எவராவது தவறான செயற்பாட்டில் ஈடுபட்டால் அது தவறானதாகும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் முன்னைய ஆட்சியில் இருந்த திருடர்கள் இப்போது தூய்மையானவர்களாக வந்துள்ளனர். எம்மீது அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

கேள்வி: 2020 இல் நிச்சயமாக தேர்தல் இடம்பெறுமா?

பதில்: ஆம். நாங்கள் தனித்தனியாகப் போட்டியிடுவோம் . ஒன்று சேர்ந்து அரசாங்கத்தினை அமைப்போம். 

TOTAL VIEWS : 518
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3syhx
  PLEASE ENTER CAPTA VALUE.