3 ஆவது மாற்றத்தை தோற்றுவிக்க உயர்மட்ட கருத்தொருமைப்பாடு தேவை
2017-08-08 11:17:09 | General

தசாப்த கால இடைவெளிக்குள் 3 ஆவது மாற்றத்திற்கான நுழைவாசலில் இலங்கை நிற்கின்றது. 2009 இல் அந்த முதலாவது மாற்றம் ஏற்பட்டிருந்தது. வடக்கில் போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு முழு நாட்டையும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டபோது அந்த முதலாவது மாற்றம் ஏற்பட்டது. 2015 இல் 2 ஆவது மாற்றம் சம்பவித்தது.  யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்த முன்னைய அரசாங்கத்தை ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் ரீதியாக தோற்கடித்த போது 2 ஆவது மாற்றம் இடம்பெற்றது.


இந்நிலையில், மத்தியவங்கி பிணைமுறி விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான விவகாரமும் அதனால் ஏற்படக் கூடிய விளைவும் 3 ஆவது மாற்றமாக அமைய முடியும். அரசாங்கம் மட்டுமன்றி அரசியல் அரங்கும் இந்த விடயத்தை கையாள்கின்ற வழிமுறையானது விளைவுகளுக்கான தருணத்தை கொண்டிருக்க முடியுமென்பதை நிரூபிப்பதாக அமைய முடியும். 


வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பான பகிரங்க சர்ச்சை மேலெழுந்திருக்கிறது. அரசாங்கத்தின் தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த மாற்றத்திற்கான நடவடிக்கைகளின் பெறுபேறாக இது அமைந்திருக்கிறது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரால் 2015 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த மாற்றத்தின் பெறுபேறாக இது காணப்படுகிறது.

அந்த வருடம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன. அச்சமயம் நல்லாட்சிக்கான உறுதிமொழியையும் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் ஆட்களின் ஆட்சியை மேவி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்தும் அவர்கள் உறுதிமொழி அளித்திருந்தனர்.

மக்களின் சகல தரப்பினரையும் பீடித்திருந்த அச்ச உணர்வுடன் கூடிய கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்படுமென அவர்கள் உறுதியான விதத்தில் வாக்குறுதியளித்திருந்தனர். அத்துடன், ஊழல் தொடர்பாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். பாரியளவு மட்டத்தை எட்டியிருந்த ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஆட்சியில் வெளிப்படத்தன்மை ஏற்படுத்தப்படுமென அவர்கள் உறுதியளித்திருந்தனர்.


அரசாங்கம் முதன்முறையாக மேற்கொண்டிருந்த நன்மதிப்பு அளிக்கும் இறுதி விடயமாக காணப்படுவது அதன் உறுதிமொழிகளின் முக்கியத்துவமாகும். முடிவுக்கு வந்திராவிடினும், அச்ச உணர்வுக் கலாசாரம் குறைவடைந்துள்ளது. வாழ்க்கைக்கான பாதுகாப்பு இல்லாவிடில் பேசுவதற்கோ அல்லது செயற்படுவதற்கோ விருப்பமற்ற தன்மையே காணப்படும்.

இன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து குரல் கொடுப்பதற்கான விருப்பமும் இயலக்கூடிய தன்மையும் காணப்படுகின்றது. இப்போது வெளிவிவகார அமைச்சரை புயல் அச்சுறுத்துகின்றது. அந்தப் புயல் அரசாங்கத்திலுள்ள ஏனையவர்களையும் தாக்கக்கூடும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாரியளவு மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. வெள்ளை யானை திட்டங்களின் நிர்மாணம் நீண்டகாலத்திற்கான கடன் நெருக்கடியை நாட்டிற்கு ஏற்படுத்தியிருந்தது. வங்குரோத்தான நாடுகளிடமிருந்து வெளிநாட்டுப் பிணைகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

ஆயினும், அச்சத்தினால் அனேகமானோர் மௌனமாக இருந்தனர். தமது கவலைகளை வெளிப்படுத்துவது தொடர்பாகவும் சுயாதீன விசாரணைகள் எதுவும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமை பற்றிய தமது கவலையை வெளிப்படுத்துவதிலிருந்தும் அநேகமானவர்கள் மௌனம் காத்து வந்தனர்.


பாரிய பிரச்சினை


பேஸ்புக்கில் இந்த ஏற்றத்தாழ்வு மற்றும் இரட்டை நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் கருணாநாயக்கவின் மகள் எழுதியுள்ளார். இந்த மாதிரியான புதிய அரசாங்கம் இருக்கும்போது தனது தந்தையை மட்டும் தனியாக ஏன் வேறுபடுத்துகின்றார்கள் என அவர் கேட்டுள்ளார். இப்போது பானைகள் பல கேத்திலைக் கறுப்பாக இருப்பதாக கூறுகின்றன.

ஆனால், மகளால் விடுக்கப்பட்ட சவால் பெறுமதியானதாக இருக்கின்றது. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு பாரிய பிரதிமை தேவைப்படுகிறது. அவரின் தந்தையை மட்டும் வீழ்ச்சி கண்டவராக உருவாக்குவது நல்லாட்சியாக அமையமுடியாது. ஊழல் பிரச்சினையானது பரந்தளவிலும் ஆழமாக வேரூன்றியதாகவும் காணப்படுவதுடன், படிமுறையான விதத்தில் அதனை கையாளப்பட வேண்டிய தேவைப்பாடும் காணப்படுகிறது.

மிகவும் அண்மைக்காலத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் முன்னர் வெளிவந்திருந்த ஊழல்கள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அல்லது ஊழலை விசாரணை செய்யும் நடவடிக்கைகளும் ஊழல்கள் சார்ந்ததாக உருவாகும் நெருக்கடியே காணப்படும். ஊழலைக் கையாள்வது தொடர்பாக அளித்திருந்த தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இதுவரை விருப்பமில்லாத தன்மையைக் கொண்டிருப்பது அரசாங்கத்தின் பாரிய தவறுகளில் ஒன்றாகும். பொதுமக்கள் மத்தியில் இந்த விடயம் அதிகளவுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் பல வடிவங்களில் வருகின்றது. பல மில்லியன் ரூபா பெறுமதியான அதியுயர் சொகுசு வாகனங்களின் வடிவத்திலும் இது வருகின்றது. அவை அரசாங்க அமைச்சர்களுக்காக கிரமமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அரசியல் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தங்களுக்கான விகிதங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் வடிவத்தில் இந்த ஊழல் வருகின்றது. இந்த வீதாசாரமானது முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அசாதாரணமான விதத்தில் இருந்தது என நம்பப்பட்டது. இப்போது தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இந்தமாதிரியான நிலைமை இருப்பதாக நம்பப்படுகிறது. 


2015 இன் இறுதிப்பகுதியில் பாரிய மாற்றம் ஏற்பட்டு அமைச்சர்கள் தமது கொமிஷனுக்கு வலியுறுத்தல் விடுத்திருக்கவில்லையென ஒப்பந்தக்காரர் ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். ஒருவருடத்தின் பின்னர் நான் அவரைச் சந்தித்த போது அவர் வேறுபட்ட கதையை கூறுவதற்கு வைத்திருந்தார். அந்த ஒப்பந்தக் காரர் மட்டுமன்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அனேகமானோர் ஊழல் தொடர்பான யதார்த்தத்தை உறுதிப்படுத்துவார்கள். அவர்கள் பகிரங்கமாக செல்வதற்கு விரும்பாவிடினும் கூட அந்த விவகாரத்தின் அங்கமாக அவர்களே காணப்படுகின்றனர்.


அரசாங்கம் மற்றும் அரசியல் அரங்கானது தற்போது தருணத்தில் பயன்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும். பொதுமக்கள் ஊழல் விவகாரத்தில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் தனது நம்பகத்தன்மையை கற்க வைத்துக் கொள்வது அரசாங்கத்திற்கு அவசியமான விடயமாக காணப்படுகிறது. 19 ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் சுயாதீன நிறுவனங்களை உருவாக்கியிருந்தது.

அவையும் பொதுமக்கள் மத்தியிலான அபிப்பிராயம் தற்போது அரசாங்கத்தின் கரங்களில் செயற்படுவதற்கான நிர்ப்பந்தத்தை கொடுத்திருக்கின்றன. சட்டமா அதிபர் திணைக்களம் மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தை விசாரணை செய்கின்றது. 19 ஆவது திருத்தத்தின் பெறுமானத்தை இது வெளிப்படுத்துகின்றது. அத்துடன், சட்ட ஆட்சிக்கு அரசாங்கத் தலைவர்கள் மதிப்பளிக்கக்கூடியதாகவும் இது வைத்திருக்கின்றது. அத்துடன், ஆட்களின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கு நாடாமல் இருக்காமல் தமது கடமையை செய்வதற்கும் ஆணையை வழங்குவதாக இது அமைந்திருக்கின்றது.


உடன்படிக்கை தேவைப்பட்ட இணக்கப்பாடு


ஊழல் பிரச்சினையை கையாள்வதில் நிலைமாற்று நீதி நடவடிக்கைகளிடமிருந்து விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும். கடந்த காலத்திலும் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான போர்க்கால மீறல்கள் தொடர்பாகவும் கையாளும் நிலைமாற்று நீதி நடவடிக்கைகளிடமிருந்து இந்த பிரச்சினையை கையாள்வதற்கான விடயத்தை பெற்றுக் கொள்ள முடியும். மீள நிலைநாட்டும் நீதி முறைமைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கும் பாதையில் இலங்கை சென்றுகொண்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்டோர்களை ஆற்றுப்படுத்துதல், மீள இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துதல் போன்றவற்றிற்கான பாதையில் இலங்கை செல்கின்றது. தண்டனையை நிறைவேற்றும் விடயத்தில் அழுத்தியுரைப்பதிலும் பார்க்க இந்தப் பாதையில் நாடு செல்கின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது யுத்தத்தின் இறுதிக் கட்டம் தொடர்பாக அழுத்தங்கள் காணப்படும் நிலையில், அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகள் செயற்படுவதற்கு முன்பதான விவகாரங்களையும் உள்ளீர்த்துக் கொள்வதற்கான சிந்தனை காணப்படுகிறது.

இந்த விடயம் ஓரிரு பெரிய மீன்களை மீனவர் ஒருவர் பிடிப்பதிலும் பார்க்க தனது வலையை வீசி முழு மீனையும் பிடிப்பது போன்றதாகும். கடந்த காலத்தில் சகல தரப்பினருமே தவறிழைத்திருந்தனர். ஆதலால், அந்த நடவடிக்கைகளுக்கு சகல தரப்பையும் உள்ளீர்த்துக் கொண்ட தூய்மையான தன்மை தேவைப்படுகிறது. 


2015 இல் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த புதிய காலத்தில் ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. இலங்கையின் ரக்பி கப்டன் வாஸிம் தாஜுடீன் கொலை போன்ற பாரிய குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் விசாரணையாளர்கள் இந்தக் குற்றங்களை இழைத்தோரை விசாரணை செய்வதற்கு தேவைப்படும் ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வதில் துரிதமான முன்னேற்றத்தைக் கண்டிருந்தனர்.

ஆனால் இவர்கள் இப்போது மிகவும் தாமதமாக முன்னகர்வதாக தோன்றுகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்த விசாரணைகள் முடக்கப்பட்டிருக்கின்றன என்ற சந்தேகத்திற்கு இது இட்டுச் சென்றிருக்கின்றது. முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்களால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருதடவைக்கும் மேலாக கவலைதெரிவித்திருந்தார். முன்னாள் அரசாங்கததின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறப்பட்டிருக்கிறது.

அவர்கள் தற்போது கூட்டு எதிரணிக்கு தலைமை தாங்குகின்றனர். இந்தக் கூட்டு எதிரணி ஜனாதிபதியை பலவீனமாக்கியுள்ளது. சுதந்திரக் கட்சியை முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் நிகழ்ச்சியிலும் அது தோல்வி காண வைத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டிய நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருந்தார். அத்துடன் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் அவர் அழுத்தியுரைத்திருந்தார். "நிரந்தர சமாதானத்தை தக்க வைப்பதும், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதும் இந்த நோக்கங்களை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைபடுத்துவதும் இரு பிரதான காரணிகள்' என்று அவர் கூறியிருந்தார்.

இரு பிரதான கட்சிகளும் இந்த நோக்கத்தை எட்டுவதற்கு ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்திருந்தார். எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக அடுத்த தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்காக அவர்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்துவதாக அந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்க வேண்டும். ஊழல் விவகாரத்தை அவர்கள் கையாளும் போது அவர்களின் வழிமுறையில் குறுக்கிடக் கூடாது. 


கொழும்பு ரெலிகிராப்

TOTAL VIEWS : 684
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
r2sij
  PLEASE ENTER CAPTA VALUE.