இடர்பாடு சூழ்ந்த வரலாறு பற்றிய கதைகளைக் கூறுதல்
2017-12-05 11:26:33 | General

இலங்கை எழுத்தாளர் அனுக் அருட்பிரகாசம் அண்மையில் தெற்காசிய இலக்கியத்திற்கான டி.எஸ்.சி. பரிசை பெற்றிருந்தார். நாட்டின் கொடூரமான உள்நாட்டு யுத்தம் தொடர்பான சர்வதேச கவனத்துக்கு அது மீண்டும் கொண்டு சென்றதாக காணப்படுகின்றது. ஆனால், இந்தத் தடவை நாவலொன்றே கவனத்தை ஈர்க்க வைத்திருக்கின்றது. 

அருட்பிரகாசத்தின் ஆழம் நிறைந்த நாவல் 2016 இல் பிரசுரிக்கப்பட்டது. குறுகிய திருமணம் (Brief Marriage)  ஒன்றின் கதையாக அது அமைந்திருக்கின்றது. கொலம்பியா பல்கலைக்கழத்தில் பி.எச்.டி. பயிலும் அனுக் அருட்பிரகாசம் கவிதைத் தன்மை நிறைந்த அவரின் மொழிநடைக்கும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைகள் ஊடாக யுத்தத்தின் தன்மைகளை உள்ளீர்த்துக் கொண்டிருப்பதற்கான முயற்சிக்காக இந்த இளம் எழுத்தாளருர் பரிசை பெற்றிருக்கின்றார். 

"இதனை (வன்செயலை) உருவகப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், மிகவும் சதாரண மனிதர் நடவடிக்கைகளின் ஊடாக நபர் ஒருவரை உருவகிப்பதற்கு நான் தெரிவு செய்திருந்தேன்.  

நடந்து செல்லுதல், உறங்குதல், சாப்பிடுதல் போன்ற சாதாரண மனித நடவடிக்கைகளை உருவகப்படுத்த தேர்ந்தெடுத்தேன். ஏனெனில், இத்தகைய சூழ்நிலையில் நபரொருவர் அவர்களின் மனிதத்துவத்தை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்' என்று டாக்காவில் வைத்து த இந்துவின் வைஸ்னா ரோய்க்கு அவர் கூறியுள்ளார்.

பல ஊடக நேர்முகங்காணலின் போது அருட்பிரகாசம் கொழும்பிலுள்ள அவரின் சிறப்புரிமைபெற்ற  அமைவிடம் குறித்து கதைத்திருக்கிறார். அவருடையது போன்று ஆங்கில நாவலொன்று தெற்காசியத்துடன் தொடர்புபட்டதாக மக்களை சாதாரணமாக சென்றடைவது குறித்து தனது பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையைச் சேர்ந்த ஆங்கில மொழியிலான எழுத்தாளர்கள் பலரும் ஏனைய வெளிநாட்டவர்களும் தீவின் சிங்கள  தமிழ் இனமோதலின் பதிவுகளை புனைகதை சாராத பதிவுகளைக் கொண்டு எழுதியுள்ளனர். 

யுத்தம் குறித்தும் எழுதப்பட்டிருந்தது. லண்டனைத் தளமாகக் கொண்ட இலங்கை எழுத்தாளர் ஏ. சிவானந்தனின் 1997  When MEMORY  Dies (நினைவுகள் அழிந்த போது) என்ற நூல் காலனித்துவ ஆக்கிரமிப்பினாலும் இனப் பிழவுகளினாலும் சிதைவடைந்த நாடொன்று பற்றி பேசுகின்றது. 

எவ்வாறாயினும் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்த வருடங்களில் ஆங்கில நாவல்கள் அதிகளவில் வெளிவந்திருக்கவில்லை. Brief Marriage என்ற அருட் பிரகாசத்தின் கதையானது யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் அபூர்வமான புனைகதையாக வெளிவந்திருக்கின்றது. 

இது சில சமயங்களில் இதுவரையான ஒரேயொரு ஆங்கில நாவலாக இருக்கலாம். 2009 இல் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தை கொடூரமான முறையில் எதிர்கொண்டிருந்த தனிப்பட்ட ஒருவரினால் நோக்கப்பட்டதொன்றாக இது அமைந்திருக்கலாம். 

யுத்தம் அல்லது குழப்பமான தன்மை வலுவான கலை மற்றும் இலக்கியத்தை சிறப்பான முறையில் கொண்டிருக்கும் என்பது பரந்துபட்ட கருத்தாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை யுத்தம் தொடர்பாக அதிகளவான ஆங்கில நாவல்கள் இருக்கவில்லை. 

ஆங்கில இலக்கியமானது ஒப்பீட்டளவில் நாட்டை ஏப்பம் விட்டிருந்த யுத்தம் தொடர்பான பதிலை மெதுவாகவே கொண்டிருக்கின்றது என்று ஆக்ககர்த்தாக்களும் இலக்கிய விமர்சகர்களும் கூறுகின்றனர். அவர்கள் இதற்கு பல காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். 

அமைவிடத்திற்கான தூரம் அல்லது வர்க்கம், கதைசொல்லும் பாணி, நோக்கம், கதை சென்றடையும் ஆட்கள் என பல்வேறுபட்ட காரணங்களை அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இது காலத்தின் கேள்வியாக இருக்கின்றது என்று சிலர் வாதிடுகின்றனர். சிறந்த இலக்கியத்திற்கு நீண்டகாலமாக இழுபட்டுச் சென்ற யுத்தம் தொடர்பாக ஆழமான பார்வை ஒன்றிற்கு அதிகளவு காலம் தேவைப்படுமென்பது அவர்களின் கருத்தாக அமைந்திருக்கின்றது. 

இதேவேளை இதே சவாலை சிங்கள எழுத்தும் எதிர்கொண்டிருக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கில், யுத்தம் இடம்பெறுகின்ற என்ற உணர்வு தொலைவிலுள்ள ஒன்றாக காணப்படுகின்றது. மறுபுறத்தில் தமிழ் புனைகதை யுத்தம் தொடர்பாக துரிதமாக பதிலளித்திருக்கின்றது.

உடனடியாக அவசரமாக அது இடம்பெற்றதாக தெரிகிறது. நூற்றுக்கணக்கான நாவல்களும், சிறுகதைகளும் யுத்தம் பற்றி பொதுவாகவும் குறிப்பிட்டும் பேசுகின்றன. 

கதையில் மாற்றம்

புகழ்பெற்ற காலி இலக்கிய விழாவின் முன்னாள் பணிப்பாளரும் "ஏ லோங் வோட்ஜ்'  (A Long Watch) நாவல் ஆசிரியருமான சுனிலா ஹலப்பதி கூறுகையில்;  நாங்கள் இப்போது மட்டுமே சுய தன்மை வாய்ந்த கதைகூறுவதை ஆரம்பித்திருக்கிறோம் என்று சில சமயம் நான் நினைக்கின்றேன். ஆங்கிலத்தில் தெற்காசிய புனைகதையானது சில வருடங்களாக ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றது. வாசகர்களுக்காக எழுதப்பட்ட அந்த நூல்கள் தொலைதூரத்தில் உள்ளவை என்று அவர் கூறியுள்ளார்.

அவரின் கருத்தின் பிரகாரம் ஒவ்வொன்றைப் பற்றியும் எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிக்கின்றனர் என்பதாகும். "ஆட்களுக்கு நாங்கள் செய்வதும் நாங்கள் விபரிப்பது பற்றியுமே அறிந்துள்ளனர். அவர்கள் தாங்கள் எழுதுகின்ற வழிமுறையில் அவசரத் தன்மையையும் புதிய வழிமுறையையும் கண்டறிந்து கொள்ள முடியும். இலங்கை புனைகதையை ஆங்கிலத்தில் விபரிப்பதற்கு முயற்
சிக்க நாங்களும் தயாராக இருப்போம் என்பது மட்டுமே எனது உணர்வாக அமைந்திருக்கின்றது' என்று அவர் கூறுகிறார்.

வியப்பூட்டும் பெறுபேறு

தமிழ் மற்றும் சிங்கள புனைகதையை பொறுத்தவரை அவை லேசாக வேறுபட்ட கதையை கூறுவதாக தென்படுகின்றது. ஒருபுறத்தில் தமிழ் புனைகதையானது யுத்தம் தொடர்பாக துரிதமாக பதிலளித்திருக்கின்றது. உடனடி மற்றும் அவசர தன்மை கொண்டதாக தென்படுகின்றது. 

பொதுவாக மோதல் மற்றும் குறிப்பாக யுத்தம் பற்றி நூற்றுக்கணக்கான நாவல்களும் கதைகளும் பேசுகின்றன. பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆங்கில பேராசிரியர் சிவமோகன் சுமதி தெரிவித்த கருத்தின் பிரகாரம் அடிப்படை போராட்டத்தின் எழுச்சியும் அதனுடன் இணைந்த இலக்கிய ரீதியான விளைவும் மிகவும் வலுவான தமிழ் இலக்கியத்தை உருவாக்கியிருக்கின்றது என்பது அவரின் கருத்தாக அமைந்திருக்கின்றது.

"ஆனால் இதுமட்டும் ஒரேயொரு தேசியவாத பரிமாண பெறுபேறல்ல. எம்.ஏ.நுஹுமானின் பாலஸ்தீன கவிதை மொழிபெயர்ப்புகள், தமிழ் இளைஞர்கள் மத்தியிலான செயற்பாட்டாளர்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது என்று கூறப்படுகிறது. விடுதøலை மொழியை அது நாடிநின்றது' என்று அவர் கூறுகின்றார்.


கடந்த 7 தசாப்தங்களுக்கு மேலாக பிரசுரிக்கப்பட்ட தமிழ் நாவல்களின் தலைப்புகளை பட்டியலிடும்போது அதாவது 1960 களில் இருந்து பட்டியலிடும் போது கிளிநொச்சியை தளமாகக் கொண்ட தமிழ் நூலாசிரியரும் ஊடகவியலாளருமான கருணாகரன் மு. தளையசிங்கத்தின் "ஒரு தனிவீடு', அருட்பிரகாசத்தின் "லங்கா ராணி', தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினர் கோவிந்தனின் "புதியதோர் உலகம்', சோபா சக்தியின் "கெரில்லா' என்பன யுத்தம் பற்றி குறிப்பிடும் முக்கியமான நாவல்களில் சிலவாக இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றார்.

"அவற்றை விட பற்பல மிகவும் முக்கியமான சிறுகதைகளும் நாவல்களும் உள்ளன. விசேடமாக தமிழினி, மலைமகள் போன்ற பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஆக்கங்களும் உள்ளன. பெண்போராளிகளின் அனுபவங்களை அவர்கள் எழுதியிருந்தனர்' என்று அவர் கூறுகிறார்.

தமிழ் புனைகதையை இரு தடங்களாக அவர் வகைப்படுத்துகின்றார். ஆயுதப் போராட்டத்திற்கு அனுதாபமான பணி மற்றும் ஏனையவர்களால் கருத்து பேதங்கொண்ட இலக்கியம் என்பதாக அவர் வகைப்படுத்துகின்றார். கருத்துபேத இலக்கிய எழுத்தாளர்கள் பலர் வெவ்வேறான போராளிக் குழுக்களின் அங்கமாக விளங்கியவர்கள். அவர்களுக்குள் உள்ள ஜனநாயகம் குறைவான தன்மை தொடர்பாக கேள்விக்குட்படுத்துவையாக அவை அமைந்திருந்தன.

"எனது கருத்தின் பிரகாரம் எதிர்வினை இலக்கியம் அதிகளவுக்கு பிரபல்யமானதாக இப்போது உருவாகியிருக்கின்றது. விசேடமாக இளம் வாசகர்கள் மத்தியில் அவ்வாறு தோற்றம் பெற்றிருக்கின்றது. 

உண்மையில் இளம் எழுத்தாளர்களும் அதிகளவுக்கு விமர்சன ரீதியான வில்லைகளைக் கொண்டு தமது கடந்த காலத்தை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த மாதிரியான நேர்மைத் தன்மை தமிழ் சமூகத்தின் எழுத்துக்களுக்குள் பிரதிபலிப்பது மிகவும் சாதகமான போக்காக அமைந்திருக்கின்றது' என்று கருணாகரன் கூறுகின்றார்.

சிரேஷ்ட தமிழ் கல்விமானும், கவிஞரும், இலக்கிய விமர்சகருமான பேராசிரியர் நுஹுமான் தேசியவாத அரசியல் ஒன்றை தமிழ் நாவல்கள் பல அங்கீகரித்திருப்பதாக அவர் அவதானத்தை கொண்டிருக்கின்றார். அதேவேளை சோபா சக்தி போன்ற ஆக்ககர்த்தாக்கள் முக்கியமான இலக்கிய தலையீட்டை உருவாக்கியுள்ளனர். 

உள்நாட்டு யுத்தத்தின் கதைக்கு ஏனைய கதை கூற்றுகளை கொண்டுவந்துள்ளனர். யுத்தம் தொடர்பான நேரடி அனுபவத்தை கொண்டிருந்த ஆக்ககர்த்தாக்கள் குறிப்பிட்ட சில தீவிரத் தன்மையுடன் எழுதுகின்றனர். ஒருவரின் எழுத்தில் நேரடி அனுபவம் மட்டுமே அதனைக் கொண்டுவருமென்று அவர் கூறுகின்றார்.


ஆரம்பத்தில் தமிழர்களின் போராட்டத்தை விமர்சிக்கும் எந்தவொரு விடயமும் நிராகரிப்பதற்கு தயாரான நிலையில் இருந்தது. தமிழ் போராளிக் குழுக்கள் சில இலங்கையில் விமர்சன ரீதியான நாவல் சிலவற்றை எழுதி வெளியிடுவதை அனுமதித்திருக்கவில்லை. இதனால் எழுத்தாளர்கள் வெளிநாட்டு பிரசுரிப்பாளர்களை நாடவேண்டியிருந்தது. இலக்கியத்திற்கான அந்த வெளி திறந்துவிடப் பட்டிருந்தது என்று ஆக்க கர்த்தாக்கள் கூறுகின்றனர். 

சிறுபான்மை அறிக்கை

ஓட்டமாவடி அரபாத் போன்ற எழுத்தாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் அனுபவங்களை யுத்த காலத்தின் போது எழுதியுள்ளனர். புலிகளின் கரங்களில் முஸ்லிம்களின் துன்பங்கள் குறித்து உப விமர்சனங்களை சில முஸ்லிம் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றனர். 

சர்மிளா செய்யத் போன் சிலர் தமிழ் தேசிய வாதத்தின் கடுமையான விமர்சனம் மற்றும் கிழக்கிலங்கையில் முஸ்லிம் சமூகத்ததின் "தலிபன் மயமாக்குதல்' போன்ற கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டதற்காக கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது. அவரின் சமூகத்திற்குள் இருந்தும் எழுந்த அச்சுறுத்தல்கள் சில வருடங்களுக்கு முன்னர் அவர் சுயமாக அஞ்ஞான வாசமிருக்க நேரிட்டது.  

அதேவேளை, முற்போக்கு தன்மைகொண்ட சிங்களப் புனைகதை இடதுசாரி ஜே.வி.பி. தலைமையிலான இளைஞர் புரட்சிகளை அடிக்கடி கையாண்டது. 1970 களின் முற்பகுதியிலும் 1980 களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி. தலைமையிலான புரட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

முதலாளித்துவ அரசின் அடக்கு முறையினால் கிளர்ச்சியை இளைஞர்கள் நாடியது தொடர்பாக எழுத்தாளர்கள் பலர் அனுதாபத்தைக் கொண்டிருந்த அதேவேளை, ஜே.வி.பி.யின் தேசியவாத அரசியல் தமிழரின் பிரச்சினை தொடர்பாக அதன் நிலைப்பாடு என்பவற்றிற்கு அவர்கள் துரிதமாக சவால் விடுத்திருந்தனர். தமது எழுத்துக்கள் ஊடாக அவர்கள் 

சவால் விடுத்தனர் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள திணைக்களத்தின் பேராசிரியரும் எழுத்தாளருமான லியனகே அமரகீர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் சொந்த நாவலான "அடவாக புத்தூர்' (அரைப்பிறை மைந்தர்கள்) என்ற நூல் கருப்பொருள் தொடர்பான முக்கியமான பணியாக கருதப்படுகிறது.

"உள்நாட்டு யுத்தத்தை பின்னணியாகக் கொண்ட சிறப்பான சில சிறுகதைகள் உள்ளன. ஆனால், யுத்தம் தொடர்பான அநேகமான நாவல் ஆசிரியர்கள் மிகத் தொலைதூரத்தில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அங்கு தூரமுள்ளது' என்று பேராசிரியர் அமர கீர்த்தி கூறுகின்றார். 

சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கையின் தென்பகுதியை போர்வீரர்களை யுத்த கதாநாயகர்களாக கொண்டாடுகின்ற போக்கு இருப்பதாக அவர் கூறுகின்றார். அதனால், சுய வெளிப்பாடான எந்தவொரு விமர்சனமும் தடுக்கப்படுகின்றது என்று அவர் கூறியுள்ளார். 

"யாவற்றிற்கும் மேலாக சில விடயங்களில் வெற்றியுணர்வு அல்லது ஏனையோரின் அச்ச உணர்வு எழுத்தில் வருகின்றது என்று நான் நினைக்கின்றேன். யுத்தத்தை எதிர்கொண்ட சிங்களவர்கள் அநேகமாக படைவீரர்களாக இருந்தார்கள். தென்கொரிய கருத்தின் அடிப்படையில் அவர்கள் நாவல்களை எழுதினால் அவை தொடர்பாக அற்புதமான விதத்தில் நெருக்கமான சிலவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ளக் கூடும். சிங்களத்தில் யுத்தம் தொடர்பாக குறிப்பிடத்தக்க இலக்கிய ரீதியான பெறுபேறை மிக விரைவில் கொண்டிருக்க முடியுமென நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

ஆர்வம் அதிகரிப்பு

சிங்களத்தில் அரசியல் நாவல்கள் தொடர்பாக வாசகர்கள் மத்தியில் பாரியளவு விருப்பம் காணப்படுகின்றது என்று கொழும்பைத் தளமாகக் கொண்ட பிரசுர இல்லமான சரசவிய புத்தக நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.டி. பிரேமசிறி கருதுகிறார். "அந்தமாதிரியான நாவல்கள் 30,000 பிரதிகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 

சிறுகதை எழுத்தாளர்கள் இப்போது உள்நாட்டு யுத்தம் தொடர்பாக எழுதுவது அதிகரித்திருக்கின்றது' என்று அவர் கூறியிருக்கிறார். அத்துடன் தமிழிலிருந்து சிங்களத்தில் நல்ல நாவல்களின் மொழிபெயர்ப்புகளும் சிறப்பான முறையில் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

"சிங்கள மொழி பெயர்ப்பில் தமிழ் இலக்கியம் தொடர்பான பாடநெறியொன்றை பேராசிரியர் அமர கீர்த்தி கற்பிக்கின்றார். மொழியே நாட்டை பிளவுபடுத்தியதாகவும் தமிழிலுள்ள முக்கியமான எழுத்துகளை பெற்றுக் கொள்வதற்கு மொழிபெயர்ப்புக்கள் இன்றியமையாத பாலமாக அமைந்திருக்கின்றன' என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

"சமூகம் தொடர்பாக தமிழிலுள்ள சிறுகதைகள் கூர்மையான விமர்சனத்தை கொண்டிருக்கின்றன. உணர்வுகள், சமூகக் கட்டமைப்பு, வேறுபாடு தொடர்பான உணர்வு போன்ற பல்பரிமாணத்தை அவை காண்பிக்கின்றன' என்று பேராசிரியர் சிவமோகன் குறிப்பிடுகின்றார். 

"ஆங்கில சிறுகதையில் ஒப்பிடும்போது நன்கு படிமானமானமொன்றாக இருப்பதை நான் கண்டுள்ளேன். அண்மைய வருடங்களில் ஆங்கில நாவல்களும் சிறுகதைகளும் சுவாரஸ்யமான வடிவங்களை எடுத்துள்ளன. ஷெஹான் கருணா திலகவின் "சைனா மேன்',கார்முல்லரின் "த ஜாம் புருட் ரீ'  என்பன இப்போது குறிப்பிட்டுக் கூறக்கூடியவையாகும். பொதுவாக ஆங்கில எழுத்தானது மத்திய தர வர்க்கத்தின் மட்டத்திலேயே அமைவிடத்தை கொண்டிருக்கின்றது. 

ஆங்கில புனைகதையில் இது இறுதியான பலவீனமாக காணப்படுகின்றது' என்று அவர் கூறியுள்ளார். காலம் முக்கியமான காரணியெனவும் அதுவே எழுத்தை வடிவமைக்கின்றது என்றும் சில எழுத்தாளர்கள் பார்க்கின்றனர். "எழுதப்பட்ட முதல் புத்தகங்கள் அபூர்வமாக சிறப்பானவையாக உள்ளன. வேறொன்றும் இல்லாவிட்டால் நாங்கள் எமது வரலாற்றை மிக அண்மித்துவிடுகின்றோம். 

அதனை மிக ஆழமாக பார்க்கும் ஆட்களாக நாங்கள் இருக்க முடியாது' என்று கலப்பதி குறிப்பிடுகின்றார். தற்போது எழுதப்பட்டுள்ள நூல்கள் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக எதிர்கால எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படும் என்று அவர் கருதுகின்றார். எம்மைப் பற்றி நாமே எவ்வாறான புரிந்துணர்வை கொண்டிருக்கின்றோம் என்பதை சிறியளவு அடையாளம் கண்டுகொள்வதற்கு இது பயன்படுத்தப்படுமென அவர் கருதுகிறார்.

இந்து 

TOTAL VIEWS : 380
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6qcjg
  PLEASE ENTER CAPTA VALUE.