மறக்கப்பட்ட மக்கள்; இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள்
2017-11-16 12:43:28 | General

அண்மைய மாதங்களில் இந்தியாவில் ரோஹிங்யா அகதிகள் தொடர்பாக ஊடகங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றன. ஆனால், இலங்கை அகதிகளின் துன்பமானது பொதுமக்களின் பிரக்ஞையிலிருந்தும் இல்லாமல் போய்விட்டதாக தென்படுகிறது. அவர்கள் சுமார் 35 வருடங்களாக  இந்தியாவில் இருந்து வருகின்றனர். 


 தங்குமிடம்,  நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு, வாழ்வாதார வாய்ப்புகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட தன்மை என்பன சுமார் ஒரு இலட்சம் வரையிலான இலங்கை அகதிகளை  பாதித்திருக்கின்றது. 1983 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்ற காலம் தொடக்கம் அவர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் அவர்களுக்கு நாடற்ற பிரச்சினையொன்று பாரியதாக காணப்படுகிறது. அவர்களில் அநேகமானோர் இலங்கையின் மத்திய பகுதியை 
சேர்ந்தவர்கள். 


சமூக உளவியல் பிரச்சினைகளினால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலைகள், பாடசாலைகளிலிருந்தும் விலகுதல், பிள்ளைப் பராயத் திருமணம் என்பவை தொடர்பான செய்திகள் வெளிவருகின்றன. நடுத்தர வயது அகதிகள் பலர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர்.

முகாம்களிலுள்ள அகதிகளில் 40% இற்கும் குறைவானோர் 18 வயதுக்குட்பட்டோராவர். 28,500 அகதிகள் நாடற்றவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. 2003 மற்றும் 2009 இல் இலங்கை அரசாங்கம் அவர்களை இலகுவாக திருப்பி அனுப்புவது தொடர்பாக தனது சட்டங்களை திருத்தியிருந்தது.

பாக்கு நீரிணைக்கு மறுபக்கத்திலுள்ள (இலங்கையிலுள்ள) தமிழ் அரசியல் கட்சிகள் அகதிகள் திரும்பி வருவதை விரும்புகின்றனர். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வட மாகாணத்திலிருந்து இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் வலு அதிகரிக்கும் என்பதால் அவர்கள் திரும்பி வருவதை அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. 


தாயகம் திரும்புவதற்கான தருணமாக உள்ளது. ஆனால் இலங்கையா? தமிழகமா? 
இதுவரை சுயவிருப்பத்துடன் திரும்பிச் செல்லும் அகதிகளின் தொகை பின்னடைவு கண்டிருந்தது. 2009 மேயில் ஈழப் போர் முடிவுக்கு வந்தது.  2016 ஜனவரியில் விசா கட்டணத்தை தவிர்த்துவிடுவதற்கு இந்திய அதிகாரிகள் தீர்மானத்தை மேற்கொண்டனர்.

ஆயினும், அதிக காலத்திற்கு தங்கியிருப்பதற்கு விரும்புவோரின் தொகை குறையவில்லை. கடந்த எட்டரை ஆண்டுகளாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்துடன் (யு.என்.எச்.சிஆர்.)  இணைந்து திட்டமொன்றை இந்திய அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியிருந்த போதிலும் அகதிகள் தொகையில் 10% மே திரும்பிச் சென்றிருக்கிறது. (9238 பேர்) சில சமயம் அகதிகள் திரும்பிச் செல்வதற்கு தயங்குவதற்கு சிறப்பான காரணம் இருக்கக்கூடும். 


வாழ்க்கை முறையில் மேம்பாடு


தமிழ் நாட்டில் 107 முகாம்களில் 62,000 அகதிகள் தங்கியுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களினால் பலதரப்பட்ட நிவாரணங்களை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அண்மைய வருடங்களாக மேலதிகமாக தமிழ்நாடு அரசாங்கம் அகதிகள் சமூகத்தைச் சேர்ந்த இளம் பையன்கள், சிறுமிகளுக்கு புள்ளிகளுக்கு தொழில்சார் நிபுணத்துவ பாட நெறிகளில் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்திருந்தது. குறிப்பாக, பொறியியல் துறையில் அவர்கள் இணைந்து கொள்வதற்கு இடமளிக்கப்படுகின்றது. இந்த விடயம் மாநிலத்திலுள்ள முகாமில் தங்கியிருக்காத சுமார் 36,800 அகதிகள் மத்தியிலும் தகைமையானவர்களுக்கு அனுகூலத்தை தந்திருக்கின்றது. 


இலங்கை அகதிகள் திரும்பிச் செல்வது அதிகரிப்பு


வீடுகளின் தரம், அவர்களின் தொழில் தன்மை என்பவற்றுக்கு அப்பால் முகாம்களிலுள்ள அகதிகள் பலர் அவர்கள் வாழ்க்கை முறைமையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை கொண்டிருக்கின்றனர். அதற்கு அப்பால் புதிய தலைமுறை முழுமையாக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு இலங்கை அந்நிய நாடாக இருக்கும் என்பதில் ஆச்சரியமானதொன்றல்ல.

எவ்வாறாயினும் அவர்களின் பெற்றோர்கள் சில சமயம் யாழ்ப்பாணம் அல்லது முல்லைத்தீவை விரும்புவார்கள். தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் தமிழ் நாட்டில் அனுபவிக்கும் அனுகூலங்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அகதிகள் நன்கு அறிந்துள்ளார்கள். ஆயினும், அவர்களுக்கு கவலையான விடயமாக இருப்பது வாழ்வாதார வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றமை அல்லது இல்லாமல் இருக்கின்றமையாகும்.

யு.என்.எச்.சி.ஆரினால் நாடு திரும்பிய அகதிகள் தொடர்பாக கணிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2015 இல் கொழும்பிலுள்ள யு.என்.எச்.சி.ஆர். அந்த மதிப்பீட்டை மேற்கொண்டிருந்தது. இலங்கையின் பொருளாதார நிலைமையில் பிந்திய அண்மைக் காலத்தில் நிலைவரம் மாறியிருக்கவில்லையென கண்டறியப்பட்டுள்ளது. மலையகத்தைச் சேர்ந்த அகதிகள் நிலமற்றவர்களாக உள்ளனர்.

அவர்களுக்கு சிறிய துண்டு காணிகள் வழங்கப்படாத வரை அவர்கள் திரும்பிச் செல்ல விரும்பமாட்டார்கள். மலையக நாட்டு பகுதியில் தற்போதைய நிலைவரத்தை மனதில் கொள்ளவேண்டியுள்ளது.  அங்கு தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்வதற்கு தமிழர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. 


தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் அகதிகள் திரும்பிச் செல்லும் விடயம் முன்னுரிமையளிக்கப்படும் ஒன்றாக தென்படவில்லை. ஆனால் அவர்கள் நீண்டகாலத்திற்கு நாடற்றவர்களாக இருக்க முடியாது என்பதற்கு அப்பால் இந்தியாவில் அதிக எண்ணிக்கையான அகதிகளை கொண்டிருக்கும் இடமாக தமிழகம் தொடர்ந்தும் இருந்து வருவதை தாங்கிக் கொள்ள முடியாது.

இந்த விடயம் குறித்து காலம் தாழ்த்தாமல் துரிதமாக செயற்படுவது இரு நாடுகளினதும் நலன்களுக்கு சிறப்பானதாக அமையும். இந்தியாவைப் பொறுத்தவரை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதாக காணப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரை இன நல்லிணக்கத்தை நோக்கி எடுத்து வைக்கும் நடவடிக்கையாக இது அமையும்.


உண்மையில் கடந்த வருடம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை இந்தியா மீள ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. சுயவிருப்பத்தின் பேரில் தாயகம் திரும்புவதற்கு பரந்துபட்ட பொதியொன்று தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் செயற்பட முடியும்.

அகதிகள் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தமிழக அரசாங்கம், இலங்கையின் வட மாகாண சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளை சம்பந்தப்படுத்தியதாக இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அகதிகளைப் பொறுத்தவரை தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்புவோருக்கு பிரஜாவுரிமை கொடுப்பது குறித்து  இந்தியாவினால் பரிசீலனை செய்ய முடியும்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்தியா அதனை செய்திருந்தது. பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான உரிமை  நிச்சயமாக இல்லை. அதேவேளை சகலவும் சுமுகமாக இடம்பெறுமானால் தமிழகத்திலுள்ள முகாம்களை அதிகாரிகள் இறுதியில் மூடிவிட முடியும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திலும் பார்க்க நீண்டகாலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு முடிவொன்று கிட்டுவதாக இது அமையும். 


இந்து 

TOTAL VIEWS : 959
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
svww8
  PLEASE ENTER CAPTA VALUE.