கொழும்பில் ஏற்கனவே பெற்ற அனுபவம்
2017-08-09 11:48:23 | General

சசிகுமார்

30 வருடங்களின் பின்னர்  ஜூலை மாதம் பகல் நேரம் காலிமுகத் திடலில் சூரியன் கடுமையாக எரித்தது. போக்குவரத்து நெரிசல் வழமைபோல் காணப்பட்டது. அதேவேளை சீன முன்முனைப்புடனான துறைமுக நகரம் கடலுக்குள் நிர்மாணிக்கப்படுகின்றது. தீவு தேசம் மீதான புதிய தெற்காசிய பொருளாதார அதிகார அரசியல் மற்றும் போட்டித் தன்மையை நினைவூட்டுவதாக இது அமைந்திருந்தது. 


யுத்தம் முடிவடைந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆனால்  அரசியல்வாதிகள்  சிவில் சமூகம், ஊடக விமர்சகர்கள்  தொடர்ந்தும் முரண்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் எதனை விட்டுச் சென்றுள்ளது? எனன நடக்கப் போகின்றது என்பது தொடர்பாக தொடர்ந்தும் முரண்படட தன்மையே காணப்படுகிறது. இலங்கையின் நாட்காட்டியில் ஜூலை தீமையான அறிகுறியுடன் பிணைப்பைக் கொண்டதாக காணப்படுகிறது.

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஏரிக்கரைக் குழுமத்தின் டெய்லி நியூஸ் பத்திரிகையில் கடந்த வாரம் ஆசிரியர் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது. "ஜூலை கதை' என்ற உணர்வு பற்றியதாக அதில் எழுதப்பட்டிருந்தது. ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கெதிரான இரு பாரிய கலவரங்கள் இடம்பெற்றிருந்தன.

1958 இலும் கறுப்பு ஜுலை என அழைக்கப்படும் 1983 இலும் தமிழர்களுக்கெதிரான இந்த கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. 83 கலவரத்தின் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் மரபு ரீதியான இராணுவமாக மாற்றம் பெற்றதைக் காண முடிந்தது.  1977 ஜூலையில் வடக்கில் பயங்கரவாத இயக்கம் முதற்தடவையாக மேலெழுந்திருந்தது என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் மேலெழுந்திருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1983 ஜூலையில் இடம்பெற்ற கொலை மற்றும் தீ வைப்பு  தொடர்பாக கவலை தெரிவிக்கப்பட்ட அதேவேளை அதற்கு பெரும்பான்மை சமூகத்திலுள்ள சொற்ப தொகையினரான சிறுபான்மையை குற்றம் சாட்டுவதாகவும் அமைந்திருந்தது.

நாட்டின் அரசியல் தலைமைத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நிராதரவான சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட துன்பியலுக்கு தந்திரோபாயமான அங்கீகாரத்தை வழங்குவதாக அமைந்திருந்ததாகவும் ஆசிரியர் தலையங்கத்தில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அதேவேளை இந்த நாட்டின் விவகாரங்களில் இந்தியா சுதந்திரமான முறையில் தலையிடுவதற்கு இது வழியமைத்திருந்ததாகவும் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

தென்னிந்தியாவுடன் இலங்கைத் தமிழர்களுக்கு இருந்த உறவின் காரணமாக நாட்டின் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு இடமளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யதார்த்தத்தில் ஜே.ஆர். ஜெயவர்தனா அமெரிக்காவுடன் நெருக்கமாக சென்றிருந்த நிலையில் வழிக்கு கொண்டு வருவதே இதன் யதார்த்தமாகும். 


வடக்கிற்கு அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் உடன்படிக்கையானது  நாட்டை கொண்டு சென்றது.  அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பும் உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எமது காலனித்துவ எஜமானர்கள் வெளியேறிய பின்னர் முதற்தடவையாக இந்திய அமைதிகாக்கும் படை என்று அறியப்பட்ட அந்நிய இராணுவமொன்று நாட்டில் காலடி எடுத்து வைத்தது.

அத்துடன் தெற்கில் பயங்கரவாதம் மேலெழுவதற்கும் இது எரியூட்டுவதாக அமைந்திருந்தது என்று ஆசிரியர் தலையங்கத்தில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் வகிபாகம் தொடர்பாக இந்தியப் படை வீரர்கள் ஏன் இலங்கைக்கு சென்றார்கள் எனவும் அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்பது குறித்தும் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்தும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதாக விடயங்கள் அமைந்திருந்தன.

1980 களின் பிற்பகுதியில் கொழும்பிற்கும் வடக்கு கிழக்கிற்கும் நான் பல தடவைகள் பயணம் மேற்கொண்டேன். களநிலவரத்தை அறிந்து அறிக்கையிடுவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். இந்திய சமாதானப் படையானது இதயங்களை வென்றöடுப்பதாகவோ அல்லது அதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் வெற்றி கொள்வதாகவோ காணப்படவில்லை. 


இப்போது ஊடகங்களில் பெற்றுக் கொள்ளும் விடயங்கள் மற்றும் மேலாதிக்கம் பெற்றுள்ள நீங்கள் கேட்கும் விடயங்களிலிருந்தும் அவை முரண்பட்டவையாக அமைந்திருந்தன. ஞாபகங்கள் சிலவும் முற்றிலும் வேறுபட்ட ஆட்களும் இந்தக் கட்டத்திலும் உயிர்துடிப்புடையதாக காணப்படுகின்றனர். இவை அடிக்கடி பிரதிவாதிகளினால் வெளிப்படுத்தப்பட்டவையாகும்.

அவர்கள் எதனை நாடியிருந்தார்கள்? என்பது தொடர்பாக முக்கியம் வாய்ந்ததாகவும் எந்த விடயத்தை நழுவிச் சென்றார்கள் அல்லது உண்மையில் எதனை கூறியிருந்தார்கள் என்பது பற்றியதாகவும் இந்த செயற்பாடுகள் காணப்பட்டன. ஜனாதிபதி ஜயவர்தன நட்புறவான உணர்வைக் கொண்டதாக இருக்கவில்லை. “கிழட்டு நரி‘யென குறிப்பிடப்பட்டார். காந்தி மற்றும் நேருவின் இந்தியாவின் தடம் தொடர்பாக அவர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

எமது உரையாடலின் போது சாத்தியமான அளவுக்கு ராஜீவ் காந்தியை உள்ளீர்த்துக் கொள்ளாமல் வைத்திருப்பது பிரதானமானது என எனக்குத் தோன்றியது. அச்சமயம் எதிர்க்கட்சியில் தலைவராக விளங்கிய சந்திரிகா குமாரதுங்க தனது வரவேற்பறையில் அவர் அமர்ந்திருந்த கதிரைக்கு அடுத்ததாக இருந்த மேசையின் ஓரத்தில் இந்திரா காந்தியின் புகைப்படம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிரமப்பட்டிருந்தார். அவரின் கணவர் விஜயகுமாரதுங்க சினிமா நடிகர்.

அத்துடன் அரசியல்வாதியாக இருந்தவர்.  உள்நாட்டில் எத்தகைய குழப்பம் மேலெழுந்து வருகின்றது என்பதை அறிந்தவராக இருந்தார்.  கடும்போக்கு அரசியல் வாதியான லலித் அத்துலத்முதலி யைப் பொறுத்தவரை  எனது ஞாபகம் சரியானதானால் அவர் கூறியவற்றை அடையாளம் கண்டுகொண்டால் அவரின் பெற்றோரின் தரப்பிலிருந்து பல தலைமுறைகளுக்கு முன்னராக வட கேரளாவை சார்ந்தவர்களாவர்.

இனிமைப் பண்பு கொண்ட காமினி திசாநாயக்க மற்றும் அவரின் இல்லம் அவரின் பாரியார் அன்புள்ளவர்களாக விளங்கினார்கள்.  என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி அதிகளவுக்கு அரசியல் ரீதியாக புத்திஜீவித் தனமான முறையில் புரிந்து கொள்வதென்பது சிறப்பான விடயமாகும். சிரேஷ்ட தலைவரான ட்ரொஸ்கியவாதி கொல்வின் ஆர். டி.சில்வா தொடக்கம் நீலன் திருச்செல்வம் போன்ற புத்திசாலித்தனம் வாய்ந்த முன்னோக்கி பார்க்கும் இளைய தலைமுறை வரை என்ன நடக்கின்றது என்பது பற்றிய புரிந்துணர்வைக் கொண்டிருத்தல் முக்கியமானதாக அமைந்திருந்தது.

அத்துடன் போராளி தலைவர்கள் பலர் இருந்தார்கள் மிதவாத தமிழ்த் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் இருந்தனர். இவற்றில் புளொட்  தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவையும்உ ள்ளடங்கியுள்ளன. புளொட்டின் ஸ்தாபகர் உமா மகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர். இவர்களின் கலந்துரையாடல் நினைவில் இடம் பிடித்திருப்பது மட்டுமன்றி இந்தத் தலைவர்களை உள்ளீர்த்திருந்த அரசியலின் துரிதமான தன்மைகள் குறித்தும் நினைவிற் கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது.

அவர்களில்  புலிகளினால் அநேகமானோர் கொல்லப்படவிருந்தனர். தசாப்த காலத்துக்குள் அல்லது அதற்கு பின்னர் அவர்களின் நீண்ட பேட்டிகளைத் தொடர்ந்து  அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவை யாவும் மற்றும் அவற்றுக்கு இட்டுச் சென்ற சகல நிபந்தனைகளும் 2009 மேயில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் விட்டுச் செல்லப்பட்டு விட்டன.

புலிகள் மட்டுமன்றி வட இலங்கையில் மக்கள் தொகையினரில் ஒரு பிரிவும் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது.  ஆனால் முன்னிடம் பிடித்திருந்தன மொழி இன நம்பிக்கையீனத்துக்கு தீ மூட்டும் அறிகுறிகளைக் கொண்டதாக  இது இருந்து வருகிறது. உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்  யுத்தத்தின் பின்னர் இப்போது காற்றில் சென்றுவிட்டதாக தோன்றுகிறது. 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால காணாமல் போனோர் அலுவலகத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே இராணுவத்துக்கு எதிரான பொலிஸாருக்கு எதிரான ஒன்றென சில தரப்பினரால் ஏற்கனவே பார்க்கப்படுகின்றது.ஜூலையில் உயர்மட்டப் பௌத்த அமைப்பான மகாநாயக்க தேரர்களுக்கான பகிரங்க கடிதத்தில்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இது தொடர்பாக கவலை எழுப்பியிருந்தார்.

ஏனைய விடயங்களுக்கு மத்தியில் இந்த அலுவலகத்துக்கான அதிகாரம் குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். எந்தவொரு நேரத்திலும் பகலோ இரவோ என்று இல்லாமல் எந்தவொரு பொலிஸ் நிலையதம் சிறைச்சாலை அல்லது இராணுவ நிலைய என்றில்லாமல் எந்தவொரு ஆவணத்தையும் அவர்களுக்கு தேவைப்படும் போது  முடக்கி வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை இந்தத் தருணத்தில் செய்திப் பத்திரிகைகள் படிமுறையான கடத்தல்கள் மற்றும் சித்திரவதை தொடர்பான விசாரணைகள் குறித்து அதிர்ச்சியான தகவல்களை அறிக்கையிட்டும் வெளியிட்டுக் கொண்டுமிருந்தனர். இராணுவம் மற்றும் பொலிஸ் சீருடையில் இருந்தவர்களால் 2000 ஆம் ஆண்டிலிருந்து படிமுறையாக இவை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.


அண்மையில் யாழ்ப்பாணம் நல்லூரில் தமிழ் நீதிபதியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் முயற்சி உட்பட்ட சம்பவங்களை ராஜபக்ஷவும் பற்றிப் பிடித்திருக்கின்றார். விடுதலைப் புலிகள் மேலெழுந்து வருவார்கள் என்பது பற்றியும் சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்த போது முன்னாள் புலி உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் முன்னாள் புலி உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் மதுபோதையில் செயற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நபர் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுள்ளார். அதேவேளை வெள்ளை வான் தொடர்பான நாங்கள் இப்போது மீண்டும் கேட்கக் கூடியதாக அறியக்கூடியதாக காணப்படுகிறது.

அனுமதிப் பத்திரங்கள் இல்லாத இத்தகைய வான்கள் மீள வெளிப்பட்டுள்ளன. ஜெயவர்தன அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதேபோன்றதொன்றாக இந்தச் சம்பவங்கள் காணப்படுகினன. காணாமல் போனோர் விவகாரம் குறித்து இப்போது பேசப்படும் நிலைமை காணப்படுகிறது.

இதேவேளை கொழும்பில் மருத்துவபீட மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவர்களின் தலைவர் கொண்டு செல்லப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரத்தின் தாழ்வாரங்களிலிருந்தும் களத்தில் உண்மையாகப் பயன்படுத்தப்படும் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படும் அதிகார மையததிலிருந்து மாற்றம் பெறுவதற்கான உறுதிமொழி அளிக்கும் தன்மை காணப்படுகிறது. 


அதிகாரத்திலுள்ள கூட்டணியானது பாராளுமன்றத்தில் சௌகரியமான முறையில் பெரும்பான்மையை கொண்டிருப்பதாக தென்படுகிறது. அதேவேளை ராஜபக்ஷ  எங்கே உள்ளார் என்பதை பார்ப்பது மற்றும் அவரால் எதனைச் செய்யக் கூடியதாக இருக்குமென கண்டுகொள்வது என்பன இங்கு விடயங்களாக காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பிலிருந்து ஆட்கள் வெளியேறுவது தொடர்பான பேச்சும் காணப்படுகிறது.

இதுவொரு கனவென கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ள போதிலும் அத்தகைய விவகாரம் எதுவும் இன்னமும் முடிவுக்கு வந்திருக்கவில்லை.  மாற்றத்தைப் பெற்றுக் கொள்ளாவிடில் அரசியலமைப்பைத் தயாரிப்பதோ அல்லது அதனைக் கட்டியெழுப்புவதோ கடினமானதாக அமையும். பிரயோசனமற்ற நடவக்கையாக இல்லாவிடினும் இது பாதிப்பானதாக அமைந்துவிடும்.


ப்ரொன்ட் லைன் 

TOTAL VIEWS : 828
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zv1wr
  PLEASE ENTER CAPTA VALUE.