ரஜினியின் அரசியல் பிரவேசம்; பாரிய சவாலை எதிர்நோக்கவுள்ள பிரதான திராவிடர் கட்சிகள்
2018-01-02 12:24:29 | General

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. விற்கும் அதன் பிரதான அரசியல் எதிரியான தி.மு.க. விற்கும் வெவ்வேறு விதமான சவால்களை ஏற்படுத்த முடியும் . அ.தி.மு.க. இப்போது குழம்பிய நிலையில் இருக்கின்றது. இந்நிலையில், மற்றொரு நடிகரான ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிக்கும்போது இதிலிருந்து சில புலம்பெயர்வுகளை பார்க்கமுடியும்.

அதேவேளை, தி.மு.க.விற்கு சென்ஜோர்ஜ் கோட்டையைக் கைப்பற்றுவது கடினமான காரியமாக காணப்படுகின்றது. வெற்றி அணிநடை சில சமயங்களில் நெருக்கடியானதாக அமையும். பல்முனைப் போட்டியில் தி.மு.க. வுக்கு எதிராக நடிகர் சரிவை ஏற்படுத்திவிடக் கூடுமென கருதப்படுகிறது. விசேடமாக தேர்தல் தொகுதிகளில் வாக்கு இடைவெளிகள் குறுகியதாக அமையக்கூடும். 

அ.தி.மு.க. வின் ஆதரவுத் தளம் திரைப்பட ரசிகர்களைக் கொண்டதாக இருக்கின்றதென்ற கருத்து காணப்படுகின்றது. அந்த ஆதரவுத் தளத்திலிருந்து பிரிவொன்று ரஜினிகாந்தின் கட்சிக்கு இடம்பெயரக் கூடும். ஆனால், 2 ஆவது தர தலைவர்கள் அதிகளவுக்கு வேறுபாட்டை ஏற்படுத்தமாட்டாதென்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

மக்களுக்கு அவர் என்ன செய்துள்ளார். எமது கட்சி ஸ்தாபகர் புரட்சித் தலைவர் (எம்.ஜி. ஆர்.) மக்கள் தலைவரென அறியப்பட்டவர். அவர் அரசியலுக்குள் பிரவேசித்தபோது மக்களின் தலைவராக அறியப்பட்டுள்ளார். எமது தலைவரான அம்மாவும் அவ்வாறே (ஜெயலலிதா) அறியப்பட்டிருந்தார். எவராவது அரசியலுக்குள் பிரவேசிப்பதாயின், சமூக ரீதியான சிந்தனையையும் அணுகுமுறையையும் கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது.

ரஜினிகாந்த் இப்போது தனது நோக்கத்தை மட்டுமே பகிர்ந்துகொண்டுள்ளார். அவரின் ஓய்வு பெறும் கட்டத்தில் அதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அது செயற்படாது என்று அ.தி.மு.க. பாராளுமன்றக் குழு உறுப்பினர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

இதேவேளை, வருட இறுதியில் ஏற்பட்டிருந்த மாற்றம் ஆளும் கட்சி மற்றும் தினகரனை ஒன்றுபடுத்துமென்று தெரிவிக்கப்படும் ஊகத்தையும் அவர் நிராகரித்திருக்கிறார். நாங்கள் அ.தி.மு.க. வினர். தினகரன் வெறும் ஒரு தனிப்பட்ட நபர் என்று முன்னாள் அமைச்சரான முனுசாமி கூறியுள்ளார்.

இந்த வருடங்களில் ரஜினிகாந்த் பாரதீய ஜனதா மற்றும் ஆர். எஸ்.எஸ். ஆகியவற்றின் கொள்கைகளை மட்டுமே வளப்படுத்தியிருந்தார். இப்போது எவரோ ஒருவரால் அவர் அரங்கிற்கு முன்தள்ளப்பட்டுள்ளார் என்று மற்றொரு அ.தி.மு.க. தலைவர் கூறியுள்ளார்.

தி.மு.க. வும் நாம் தமிழர் கட்சி ஸ்தாபகர் சீமானும் ரஜினிகாந்தின் ரசிகர் தளத்தை கையாள முடியும். எமது கட்சிக்கு கவலைப்படுவதற்கு எதுவுமில்லை யென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"ரசிகர்களுடன் மட்டுமே எந்தவொரு கட்சியும் இருக்கமுடியுமென நான் கருதவில்லை. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள். அவர் வெறுமனே நடிகர் மட்டும்தான்' என்று தினகரன் ஆதரவாளரான பதவியிழந்த சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.  எவ்வாறாயினும் ரஜினிகாந்த் போன்ற தனிப்பட்டவர்களின் முயற்சிக்கான பின்னணியின் காரணமாக அ.தி.மு.க. ஆதரவாளர்களுக்கிடையிலான ஐக்கியமின்மையும் மோதலும் காரணமாக அமைந்திருக்கின்றன என்ற உணர்வையும் அவர் கொண்டிருக்கின்றார். அதிகாரத்திலுள்ளவர்களும் எமது தலைவரும் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசித்தாலும் கூட அ.தி.மு.க. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாக உள்ளது.  ஆனால் வெளியேற விரும்பும் சிரேஷ்ட தலைவர்கள் ரஜினிகாந்திடம் செல்வதிலும் பார்க்க தினகரனை சிறப்பான தெரிவாக கண்டுகொள்ளக்கூடுமென்று நான் நினைக்கிறேன் என சென்னை  பல்கலைக்கழகத்தின் அரசியல் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியுள்ளார். 

கூட்டணியில் கவனம்

தி.மு.க. தலைமைச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், தங்கள் கட்சி இரும்புத் தூண் எனவும் அதனை கறையான்கள் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், சகலரும் இதே நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை.  லோக் சபா தேர்தல்கள் போன்றல்லாமல் சில ஆயிரம் வாக்குகள் அல்லது சில சந்தர்ப்பங்களில் சில நூறு வாக்குகள் கூட சட்டசபைத் தேர்தல் ஒன்றில் சமநிலையை மாற்றியமைக்க முடியும்.

ரஜினிகாந்தின் கட்சியின் வேட்பாளர்கள் சில ஆயிரம் வாக்குககளை எம்மிடமிருந்து எடுத்துக்கொண்டால் அது எமக்கு அபாயகரமானது என்று தி.மு.க. வின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக ரஜினிகாந்த் கூறுகிறார். இந்நிலையில், வெற்றிபெறக்கூடிய கூட்டணியை ஒன்றிணைப்பதற்கு தனது தந்திரோபாயத்தை மீள வரைந்து கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தி.மு.க. காணப்படுகின்றது. 5000 வாக்குகளிலும் பார்க்க குறைவான அளவு வித்தியாசத்தில் 21 ஆசனங்களில் 2016 இல் தி.மு.க. தோல்வியடைந்திருந்தது.

அ.தி.மு.க. 1000 வாக்குகளிலும் பார்க்க குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. ஆன்மீகவாதியென்ற பிரதிமையுடன் ரஜினிகாந்த் இருக்கின்றார். நேர்மையான அரசியல்வாதியாக விளங்குவார். இந்தப் பிரதிமையை தொடர்ந்தும் தக்க வைப்பதில் வெற்றிபெற்றால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிடுவார் என்று தி.மு.க.வின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 

இரு தசாப்த காலமாக அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற எதிர்பார்ப்புகள் காணப்பட்டிருந்த நிலையில், அரசியல் அரங்கில் பிரவேசிக்க அவர் பொருத்தமான தருணத்தை தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆன்மீக அரசியலை பின்பற்றுவதற்கான உறுதிமொழியுடன் 234 தொகுதிகளிலும் போட்டிபோடப் போவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், திராவிட மற்றும் இடதுசாரிக் கட்சிகளிலிருந்தும் அவர் தன்னை தூர விலக்கி வைத்துக் கொள்வார் என தென்படுகின்றது.

அவர் பாரதீய ஜனதாவுடன் கரங்கோர்க்கும் சாத்தியப்பாடும் காணப்படவில்லை. ஏனெனில், சாதி மற்றும் மதத்தைத் தவிர்த்த அரசியல் பற்றி அவர் கதைத்துள்ளார். அத்துடன், ஆன்மீக அரசியல் பற்றி அவர் பேசியுள்ளாரே தவிர, மத அரசியல் பற்றி கதைக்கவில்லை. அவரின் பிரவேசம் திராவிடக் கட்சிகள் தொடர்பாக நேரடியான தாக்கத்தை கொண்டிருக்குமென நான் கருதுகிறேன். ஏனெனில் திராவிடக் கட்சிகளே ஏற்கனவே தமிழகத்தின் அரசியல் அரங்கில் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைப் பொறுத்தவரை இதுவரை, பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் அவரை முன்தள்ளுவதாக கருத்துகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றை நிராகரிப்பதாக மிகக் கவனமான முறையில் தனது வார்த்தைகளை ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்திருக்கிறார். 

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வரை தான் அரசியலுக்குள் பிரவேசிக்க மாட்டாரென ரஜினிகாந்த் வழமையாக கூறியிருந்தார். தி.மு.க.வின் ஊடகமான முரசொலியின் 60 ஆவது விழாவில் பேச்சாளராக கலந்துகொள்ள அவர் அண்மையில் மறுத்திருந்தார். 

இப்போது அவருக்கு சாதகமாக அரசியல் சூழல் உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். தே.மு.தி.க. ஸ்தாபகர் விஜயகாந்த் அதிகளவுக்கு உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். ஆயினும் அரசியல் அரங்கில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் பிரசன்னமாகியிருந்ததால் விஜயகாந்தின் உறுதிமொழிகள் எடுபட்டிருக்கவில்லையென்பதை திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியவாதக் குழுக்கள் களம் அமைத்துவரும் தருணத்தில் கர்நாடகத்தில் பிறந்தவரும் மராட்டி பேசும் நடிகருமான ரஜினிகாந்தின் பூர்வீகங்கள் அவருக்கு எதிராக செயற்படுமென்று வாதம் காணப்படுகின்றது. இந்நிலையில் அவற்றை எவரும் எடுத்துக் கொள்ளும் சாத்தியப்பாடு இல்லையென்று திருமாவளவன் கூறுகின்றார்.

இரு குடும்பங்களின் ஆட்சி

சென்னை மாநிலம் எப்போதுமே வெளித்தோற்றத்தில் நகரத் தன்மையை கொண்டதாக இருந்தது. தமிழக மக்கள் தொடர்ந்தும் அந்த பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். எம்.ஜி.ஆரை. மலையாளி என்ற கருணாநிதியின் பிரசாரமும் மக்களுக்காக எதனையும் செய்வதற்கு மலையாளி தவறிவிட்டார் என்ற பிரசாரத்தையும் கருணாநிதி மேற்கொண்டிருந்தார்.

ஆனால் அது தோல்வி கண்டது. அதேவிதத்தில் ஜெயலலிதா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்ற பிரசாரமும் முறியடிக்கப்பட்டது. சுப்பர்ஸ்டார் மற்றும் பச்சைத் தமிழன் என்ற பிரதிமைகளை அவரால் தக்கவைக்கக்கூடியதாகவுள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கான அடையாளமொன்றை ஸ்தாபிப்பதில்  திராவிடக் கட்சியின் தோல்வியும் ரஜினிகாந்தின் மேலெழுச்சிக்கும் இடையில் உள்ள தொடர்பானது தெளிவானதொன்று என்று புதிய தமிழகத்தின் ஸ்தாபகர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆட்சியென்பது உண்மையில் இரு குடும்பங்களின் ஆட்சியாகவுள்ளது. சில சமூகங்களின் மேலாதிக்கப் பிரசன்னத்துடன் அது காணப்படுகின்றது. சாதியில்லாமல் தமிழர்களின் அடையாளத்தை ஏற்படுத்த முடியாமல் அவர்கள் உள்ளனர் என்று கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாற்றுக் கொள்கைகளுடன் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உறுதிமொழிகள் இருந்தால் மட்டுமே அரசியலில் ரஜினிகாந்தினால் வெற்றிபெற முடியுமென்று அவர் தெரிவித்திருக்கிறார். அதேவேளை ரஜினிகாந்தின் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் தி.மு.க. தலைவர் துரைமுருகன், ஆன்மீக அரசியல் என்ற கருத்தீட்டை தன்னால் புரிந்துகொள்ள முடியாதிருப்பதாக கூறியுள்ளார். 

சட்டசபையில் அவரும் (ரஜினிகாந்த்) அவரின் கட்சி எம்.எல்.ஏ. க்களும் பஜனை பாடுவார்களா என்று கேள்வியெழுப்பியுள்ளார் என்று இந்து பத்திரிகையில் வி.பி. கோலப்பன் எழுதியுள்ளார்.

TOTAL VIEWS : 2542
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
y1czj
  PLEASE ENTER CAPTA VALUE.