அரசியலமைப்பு சீர்திருத்தமும் அரசியல் திசை திருப்பங்களும்
2017-04-05 11:02:20 | General

பின்காலனித்துவ இலங்கை அரசின் உறுதிமொழியானது அதன் அடக்குமுறை மற்றும் உள்ளீர்த்துக் கொள்ளாமையினால் துரோகமிழைக்கப்பட்ட தன்மையை கொண்டதாகும். 


அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் விருப்பம் குறைவாக இருப்பதா? அல்லது கூட்டு எதிரணியிடமிருந்து பிரதிபலிப்புகள் வெளிப்படும் என்ற அச்சமா? அல்லது பொருளாதார நெருக்கடியா? 


வரலாற்று ரீதியாக அரசியல் விருப்பம், அரசியல் ரீதியான எதிர்த் தாக்குதல் இடம்பெறும் என்ற அச்சம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்ற மூன்றும் இணைந்ததாகவே அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரங்கள் தொடர்பான முயற்சிகள் தடம்புரண்டுள்ளன. அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான வெறும் தடைகளுக்கு அப்பால் இந்த குறிப்பிட்ட மூன்று கவலைகளும் அரசியல் தீர்வின் அங்கமாக இருக்கின்றன  என்ற வாதத்தை நான் முன்வைக்கிறேன். 


பின்காலனித்துவ கவலைகள்


பின்காலனித்துவ இலங்கை அரசின் உறுதிமொழியானது அடக்குமுறை மற்றும் உள்ளீர்த்துக் கொள்ளாமை என்பனவற்றால் துரோகமிழைக்கப்பட்ட  புறத்தோற்றத்தைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம்  அரசாங்கத்தின் பெரும்பான்மை மற்றும் வர்க்க ரீதியான தன்மைகள் சிறுபான்மை சமூகங்களை அந்நியப்படுத்தியிருந்தன. 

கிராம மற்றும் நகர மக்கள் தொகையில் அதிகமான  தொகையினரை ஓரங்கட்டியிருந்தன. இந்த மக்களின் எதிர்பார்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கான அரசின் பகை அடக்குமுறையாக அமைந்தது. அல்லது அடிக்கடி பொருளாதார ரீதியான நிவாரணத்தை வழங்குவதனூடாக சாந்தப்படுத்துவதாக அமைந்திருந்தது. 


பின்காலனித்துவ அரசு பெற்ற பாவத்தின் மூலமானது மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இல்லாமல் செய்து, அவர்களை உள்ளீர்த்துக் கொள்ளாத மோசமான நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்தது.  சகல தரப்பையும் உள்ளீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் உதாரணமாக, சுதேச மொழிக் கொள்கையை கொண்டு வருதலும் சிங்களம் மட்டும்  சட்டத்தை  ஏற்படுத்துவதுமாக அமைந்திருந்தது. 

 நாட்டின் சனத்தொகையில் கால்வாசித் தொகையினருக்கும் அதிகமானவரை இது புறந்தள்ளியது. அவர்களின் முதல் மொழியாக தமிழ் அமைந்திருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்களின்  செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு அரசின் அடக்கு முறை இட்டுச் சென்றது. அவை கிளர்ச்சிகள் மற்றும் நீண்டகால ஆயுதப் போராட்டங்களாக மாற்றமடைந்தன. 

1971 இல் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சி இளைஞர்கள் மத்தியிலான கவலைகளினால் மேலெழுந்ததாகும். 1980 களின் பிற்பகுதியில் இளைஞர்களின் கவலைகள் மிகவும் கொடூரமான கிளர்ச்சியாகவும் எதிர்க்கிளர்ச்சியாகவும் அமைந்தன. தமிழ் போராட்டத்தை நசுக்குவதற்கான முயற்சிகளில் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால நிலை என்பன 70 களின் பிற்பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டன. போராட்டம் பரவி அதிகரித்ததை அதன் மூலம் காண முடிந்தது. 

 ஆயுத இயக்கங்களின் போராட்டங்கள் அதிகரித்தமை அதிகளவுக்கு அரசின் அடக்குமுறைக்கு வழிவகுத்து வன்முறையின் சுழற்சியாக அமைந்தது.
அடுத்ததாக அபிவிருத்தி தொடர்பாக மேலிருந்து கீழ் அணுகுமுறை கைக்கொள்ளப்பட்டது. இந்த விடயம் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட வர்க்கங்கள் மற்றும் சிறுபான்மையினர் சமத்துவமான முறையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த தவறியிருந்தது. 1950 களிலும் 1960 களிலும் காலனியாக்கமும் விவசாயத் திட்டங்களும் கிராமப்புற சிங்கள இளைஞர்கள் ஓரங்கட்டப்படுதலை அதிகரிக்கச் செய்வதற்கு சிறிதளவே தீர்வை தேடிக் கொடுத்தன. 

பதிலாக தமிழ் மக்கள் அச்சத்தை அவர்கள் அதிகரிக்கச் செய்தனர். அவர்களின் நிலங்களிலிருந்து அவர்களை உரிமையற்றவர்களாக்கக்கூடிய அச்சம் அவர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. அதேவேளை இடதுசாரி சக்திகள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததுடன், தமது சோசலிச, பொருளாதார அபிவிருத்திக்கான நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு சிங்கள பௌத்த தேசிய வாதத்தையும் ஆதரித்திருந்தனர். 

அதேவேளை, இறக்குமதி பதிலீட்டுக் கொள்கைகள் 1970 களில் வடக்கிலிருந்து பெறப்பட்ட விவசாய ரீதியான அனுகூலங்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தன. அத்தகைய பொருளாதார மாற்றங்கள் தமிழ்த் தேசிய போராட்டத்தின் எழுச்சிக்கு பதிலாக அமைந்திருக்க முடியவில்லை. 


கோட்பாடுகள் இன தேசியவாத இயக்கங்களாகவும் இளைஞர்கள் கிளர்ச்சிகளாகவும் அமைந்ததுடன் சிக்கலான தன்மைகளையும் இயங்கியலையும் கொண்டிருந்தன. ஆனால், எமது வரலாற்றில் இருந்து தெளிவான விடயமாக அமைந்திருப்பது அடக்குமுறையும் பொருளாதார அபிவிருத்தியும் மட்டும் அவர்களுக்குத் தீர்வு காண முடியாது என்பதாகும். ராஜபக்ஷ ஆட்சியின் யுத்தத்துக்குப் பின்னரான பரிசோதனையானது எங்களுக்கு சில விடயங்களை தெளிவாக காண்பிக்கின்றது. 

தீர்வானது இராணுவ மயப்படுத்தப்பட்ட அடக்குமுறையுடன் இணைந்ததாகவும் நாட்டை அதிகளவுக்கு அந்நியப்படுத்தி விடுவதாகவும் அமைந்ததென்பதே இதன் அர்த்தமாக காணப்படுகிறது. 


ஜனநாயகமும் ஆட்சியாளர்களும்


அடக்குமுறை மற்றும் பொருளாதார ரீதியான விடயங்கள் தொடர்பான 
சவால்களுக்கு அரசாங்கம் தீர்வு காணும் போது பிரஜைகள் அரசியல் ரீதியாக ஆர்ப்பாட்டங்களுடன் பதிலளித்தனர். ஆட்சியை வெளியேற்றுவதற்கான வாக்களிப்பானது முக்கியமான தருணமாக அமைந்தது. 

எவ்வாறாயினும், வரலாறு பூராகவும் அரசியல் சக்தியொன்று மக்களை ஒன்றுசேர்க்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்கள் அடக்குமுறை மற்றும் உள்ளீர்த்துக் கொள்ளாமையை கையாண்டு வந்துள்ளனர். 1994 இல் பொதுஜன முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தது. 

அரசியல் தீர்வு தொடர்பாகவும்  பொதுமக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் மீண்டும் போருக்குத் திரும்பியமையும் அச்சமயம் ஆட்சியில் இருந்த அரசாங்கம் நவதாராளவாதக் கொள்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தமையும்  அந்த ஆரம்பத்தை கொண்டிருந்ததுமாக அமைந்தது. 


எமது வரலாற்றின் முக்கிய பிரச்சினையாக இருப்பது, தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொதுமக்களுடன் தூர இலக்கைக் கொண்ட அரசியல் தொலைநோக்கு குறித்து செயற்பட தவறிய விடயம் காணப்படுகிறது.இத்தகைய ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு அரசியல் ரீதியான விருப்பம் தேவைப்படுகிறது. 

அத்துடன் எதிரணி தலைமைத்துவத்திற்கு சவால் விடுப்பதும் அரசியல் அங்கமாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், ஆட்சியாளர்களின் ஜனநாயக ரீதியான தொலைநோக்கிற்கு அப்பால் அவர்கள் வர்க்க மற்றும் அரசியல் தளங்களை மேற்கொள்வதில் தமது கவனத்தை செலுத்தியிருந்தனர். 


வரலாற்று ரீதியாக ஆட்சியாளர்கள் தந்திரோபாயம் அவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களிலிருந்தும் வேறுபட்டதாக அமைந்தன. உதாரணமாக ஜெயவர்தனவின் ஆட்சியானது திறந்த பொருளாதார அரசியலை முன்னோக்கி கொண்டு சென்று  சிங்கள பௌத்த தன்மைகளை பரந்த அரசியல் தளத்தில்  பயன்படுத்துவதாக அமைந்தது. 

பொருளாதார கொள்கைகளிலும் சமத்துவமின்மை அதிகரித்ததுடன், அரசியல் மட்டத்தில் அவை அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆட்சியானது அதிகளவுக்கு திரும்பத் திரும்ப அடக்கு முறையை மேற்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தியிருந்தது. தமிழ் சமூகத்தின் மீதான தாக்குதல்களானது பகைவர் மீதான தாக்குதல்களாக உருவகப்படுத்தப்பட்டு பௌத்த சிங்கள சாய்வுத் தன்மையை கொண்டிருந்தன. 

பொருளாதாரக் கொள்கைகள் சமத்துவமற்ற முறையில் அதிகரித்ததும் அதன் அரசியல் தளத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அரசாங்கம் அதிகளவுக்கு  அடக்குமுறை தன்மைக்கு இட்டுச் சென்றது. 1983 ஆடிக் கலவரத்துடன் தமிழ்ச் சமூகம் பகைவராக உருவகப்படுத்தப்பட்டது. அத்துடன், சிங்கள பௌத்த தளத்தில் அதன் முயற்சிகளை அணி திரட்டுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. 


அரசியல் ஈடுபாடுகள்


தற்போதைய அரசாங்கமும் தனித்துவிடப்பட்ட தன்மையை கொண்டதாகவே அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அணுகுமுறைகளை கொண்டுள்ளது. மோசமானதாகவும் இதை குறிப்பிட முடியும். அவர்கள் அரசியலமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நிபுணர்கள் மற்றும் பொருளாதார கொள்கையாளர்கள் மக்களை அணிதிரட்டுவதற்கு அவர்களுடன் செயற்படுவதற்குமான பொருளாதாரக் கொள்கையை கொண்டிருக்க வேண்டுமென கருதப்படுகிறது. 

அரசுக்கும் அதன் பிரஜைகளுக்குமிடையிலான உறவுகள்  குறித்த  கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை தீர்மானிப்பது சட்ட மற்றும் பொருளாதாரத் துறை நிபுணர்களினால் முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. காலவோட்டத்தில் மீண்டும் இத்தகைய அணுகுமுறை தோல்வியிலேயே முடிவடைந்தது.


2015 இல் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அதிகளவிலான பெரும்பான்மை கிடைத்தது. வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த பிரஜைகள் அரசாங்கத்திற்கு அதிகளவுக்கு ஆதரவளித்தன. 2016 நடுப்பகுதியில் அரசாங்கம் தனது ஆணையை நிபுணர்களுக்கு  வழங்கியது. அரசியலமைப்பு நடவடிக்கைகள் மூடிய கதவு அமர்வுகளாக சென்றடைந்தன. 

இதன் பெறுபேறாக பொதுப் பிரதிநிதித்துவ குழுவின் (அரசியலமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள்) பரிந்துரைகள் அமைந்தன.  கடந்த வருடம் பொதுப் பிரதிநிதித்துவ குழுவின் நடைமுறைகள் அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நட்டமாக அமைந்தன.  அரசாங்கமும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைத்துவமும் பொதுமக்களுடன் தொடர்பாடலை கொண்டிராததற்கான குற்றத்தை தம்மீதே செலுத்த வேண்டும். தேசிய ரீதியாக வடக்கையும் தெற்கையும் அணி திரட்டுவதற்கு இத்தகைய ஏற்பாடுகள் தேவையானவையாக காணப்படுகின்றன.  

உண்மையில், எமது கடந்த கால வரலாறானது எதிரணி சக்திகளை என்ன மாதிரியாக கையாள்வது என்ற விடயத்தை கொண்டிருக்கின்றன என்பதாக அமைந்திருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் மேலாதிக்கவாத அரசியலாக மட்டுமன்றி அரசியலமைப்பை தயாரிப்பதற்கான குழப்பத்தையும் இவை தோற்றுவிக்கும். 

அத்துடன், பொருளாதார பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. உண்மையில் பொருளாதார நெருக்கடியான காலங்களில் இனமேலாதிக்க வாத சக்திகளுக்கு அதிர்ஷ்டமான தருணமாக அமைந்திருக்கின்றது. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக அரசாங்கம் ஒன்று பொதுமக்களை ஈடுபடுத்தும் போது அதனை சிறப்பாக முன்னெடுக்க முடியும். ஆனால், தற்போதைய அசாங்கத்திற்கு இது பொருத்தப்பாட்டை கொண்டிருக்கவில்லை.


மக்களும் அரசும்


பின்காலனித்துவ அரசானது பெரு ம்பான்மை மற்றும் வர்க்க நலன் சார்ந்தவற்றால் கொண்டு செல்லப்பட்டிருந்தால் அரசின் எந்தவொரு மறுசீரமைப்பும் ஒரே தருணத்தில் சமாந்தரமாக கொண்டு செல்லப்பட வேண்டிய தேவைப்பாட்டுடன் காணப்படுகின்றன. 

நவதாராளவாத மேற்குழாமும் கொழும்பிலுள்ள புத்திஜீவிகளும் மக்களை மையப்படுத்திய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிபுணத்துவத்தை வழங்க எதிர்ப்பைக் கொண்டிருக்கின்றன. அரசியலமைப்பில் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை உள்ளீர்த்துக் கொள்வதற்கு அவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கள பௌத்த தேசியவாதிகள்  ஒற்றையாட்சி அரசின் கோட்பாட்டை பேணிப் பாதுகாத்து வருமாறு வலியுறுத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் ஒற்றையாட்சியில் ஈடுபடுவது தொடர்பாக தென்னிலங்கையானது பரந்தளவில் செயற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஒற்றையாட்சி முறைமையானது மத்தியில் அதிகாரத்தை குவித்த கட்டமைப்பாகும். அரசியல் ரீதியான அடக்குமுறைகள், பொருளாதார ரீதியான நடவடிக்கைகளில் தெற்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. 

அதேவேளை பிரிவினைவாதம் என்ற சொற்பதமானது பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதொன்றாகும்.  பிராந்திய ரீதியான கவலைகளை புறந்தள்ளுவதற்கும் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் இவை முக்கியத்துவத்தை வழங்குகின்றன. 


ஒன்றுபட்ட இலங்கைக்கு அதிகளவிலான அதிகாரப் பகிர்வானது 1990 களிலிருந்து பலதரப்பட்ட முற்போக்கான தன்மைகளை கொண்டிருக்கின்றது. மேலும் செல்வதற்கும் அதிகாரப் பகிர்வானது எவ்வாறு வர்க்க மற்றும் ஏனைய சமூகக் கட்டமைப்புகளுடன் தொடர்பு கொள்கின்றது என்பதற்குமான தேவையை எமக்கு ஏற்படுத்துகின்றது. 

நாங்கள் மேலும் முன்னோக்கிச் சென்று அதிகாரப் பகிர்வுடன் தொடர்புபட்ட விடயங்கள் எவ்வாறு வர்க்க மற்றும் சமூகக் கட்டமைப்புகளுடன் இணைந்து செல்வது என்பதை பார்ப்பதற்கான தேவைப்பாடு காணப்படுகிறது.  
சாதி, பால்நிலை மற்றும் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையினர், குறிப்பாக வடமாகாண முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையினரின் விடயங்கள் புறக்கணிக்கப்பட்டவையாக காணப்படுகின்றன. 

கொழும்பிலுள்ள மத்தியில் குவிக்கப்பட்ட அரசின் கொள்கைகளினால் அன்றாட வேலைகளில் ஈடுபடும் கிராமப்புற மற்றும் நகரப்புற சேரிப் பகுதியில் வாழும் குடும்பங்கள் அன்றாடம் மத்திமப்படுத்தப்பட்ட அதிகாரங்களினால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. உதாரணமாக துறைமுக நகர கட்டுமானத்துக்கு முன்னுரிமை அளித்தல், நிதி நிலையம் என்பன ஒற்றையாட்சியைப் பற்றி பேசுகின்றனர்.  

ஆனால், அதிகளவு தூரத்திற்கு செல்ல வேண்டிய சாத்தியப்பாடு காணப்படுகிறது. வடக்கிலும் தெற்கிலுமுள்ள சாதாரண மக்கள் வாழ்வாதாரம் தொடர்பான பொதுவான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் முன்னெச்சரிக்கை உணர்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

ஏனைய சமூகங்களுடன் சகவாழ்வை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை கையாள வேண்டியதாகவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் நிலைமை இருந்து வருகிறது. ஆனால், மக்களை மையப்படுத்திய அரசின் ஜனநாயக மறுசீரமைப்பு நடவடிக்கைகள்  அபூர்வமாகவே வாய்ப்பை வழங்குகின்றது. ஏனெனில், முதலாளித்துவ முறைமையில் உள்ள நவீன அரசின் பங்களிப்பானது அடக்குமுறை மற்றும் மக்களை உள்ளீர்த்துக் கொள்ளாத தன்மைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. 


டெய்லி மிரர் 

TOTAL VIEWS : 1566
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
j2ioy
  PLEASE ENTER CAPTA VALUE.