தேர்தலை பிற்போடுவதால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை வெற்றி கொள்ளுதல்
2017-08-01 10:08:31 | General

மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமை எதிர்பார்க்கப்பட்ட விடயமல்ல. உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெற வேண்டுமென அரசியலமைப்பு குறிப்பிடுகிறது. ஆனால்  ஒத்திவைக்கப்பட்டமை ஆச்சரியமானதாக அமையவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சில வாரங்களுக்கிடையில் உள்ளூராட்சி தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படுமென அரசாங்கத் தலைவர்களினால் பிரகடனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றது.

இரு வாரங்களுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கும் ஏனைய கட்சித் தலைவர்களுக்குமிடையில் கருத்தொருமைப்பாடு எட்டப்பட்டிருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  பழைய தொகுதிவாரி முறைமை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அதாவது இவை இரண்டில் 60:40 என்று கொண்டதாக தேர்தல் நடத்தப்படுமென அவர் கூறியிருந்தார்.

முன்னர் 70:30 என்ற விகிதத்தில் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூராட்சி தேர்தல் முறைமை தொடர்பான அதிகளவுக்கு தாமதமாகியிருக்கும் திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர் இந்த ஆண்டுக்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்குமென அமைச்சர் முஸ்தபா கூறியிருந்தார். எவ்வாறாயினும் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தனது வார்த்தைகளுக்கு அமைய செயற்படுவதற்கு பதிலாக அரசாங்கம் இப்போது மாகாண சபை தேர்தல்களை ஒத்தி வைப்பதென தீர்மானித்திருக்கிறது.

அவை இந்த வருடம் இடம்பெறவிருந்தன.  வட மத்தி, சப்ரகமுவ, கிழக்கு மாகாண 
சபைகளுக்கு இந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்படவேண்டியிருந்தன. அக்டோபர் 1 இல் இந்த மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. அதேவேளை 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு நாடப்பட்டிருந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய முறைமையின் கீழ் தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை மாற்றி பழைய தொகுதி வாரி முறைமையும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் கலந்ததாக தேர்தல் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஏற்பாட்டின் பிரகாரம் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தியமைக்கப்படும். புதிய முறைமைக்கு வழியமைத்துக் கொடுக்கும் விதத்தில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கு 60% மான உறுப்பினர்கள் பழைய தொகுதி வாரி முறைமையிலும் 40% உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் காணப்படும் பிரச்சினையானது உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பாக சகல கட்சிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தமையாகும்.

ஐ.தே.க. மற்றும் சு.க. ஆகியவை பெரிய கட்சிகள். அவை  பழைய தொகுதிவாரி முறைமையை கொண்டிருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் அழுத்தத்தை கொண்டிருக்கின்றன.  குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற வாக்காளர் தெரிவு செய்யப்படுபவராக பழைய தொகுதிவாரி முறைமையின் கீழ் விளங்குவார். ஆனால் சிறிய கட்சிகள் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. இந்த முறைமையானது அக்கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைக் குறிப்பிட்ட தொகுதியொன்றில் பெற முடியாது போனாலும கூட அக்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் விகிதா
சார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக அமையும்.


அரசாங்கம் மூன்று காரணங்களை கொடுத்திருக்கின்றது. மாகாண 
சபைத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு ஒரு காரணம் மட்டுமன்றி மூன்று காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரணங்களும் தனக்கே உரித்தான பெறுமானத்தை கொண்டுள்ளன. தேர்தல் முறைமை தொடர்பாக உள்ளூராட்சி சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு அதே அடிப்படையில் மாகாண சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது என்பது முதலாவது காரணமாகும்.

உள்ளூராட்சி முறைமையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான கோட்டாவை மாகாண சபை முறைமைகளுக்கு உள்ளீர்த்து அனுசரணை வழங்குவது என்பது மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான இரண்டாவது காரணமாகும். அரசாங்கத்தின் யோசனையானது மாகாண சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தமது வேட்பாளராக மாகாண சபை தேர்தல்களின் போது குறைந்தது 30% பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்குவதற்கு கட்டுப்பட்டவர்களாக மாற்றுவதாகும்.

அரசாங்கம் எடுத்திருக்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தின் அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசியல் தீர்மானம் எடுக்கும் சகல அமைப்புகளிலும் அதிகரித்துக் கொள்வது என்பது அமைந்திருக்கின்றது. கடந்த வருடம் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 25% கோட்டாவை உள்ளீர்த்துக் கொள்வதென திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வேட்பாளர்களுக்கான பட்டியலுக்கு அப்பால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான பட்டியலுக்கு அப்பால் அவர்கள் தெரிவு செய்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டு எவ்வாறாயினும் அதேபோன்ற கோட்டா பாராளுமன்ற மட்டத்தில் வழங்கப்படாதென அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன்  அந்த எதிர்பார்ப்பானது ஆட்சியின் உயர்மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தன்மையை ஏற்படுத்துவதாக  தோன்றியது. அத்துடன் உள்மட்டதிலிருந்து பெண்களை மேல் நோக்கி அணி திரட்டுவதற்கான எதிர்பார்ப்பாகவும் அமைந்திருந்தது. உள்ளூராட்சி நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2% ஆக மட்டுமே உள்ளது. மாகாண சபைகளில் 4% ஆகவும் பாராளுமன்றில் 6% ஆகவும் காணப்படுகின்றன.

அதேவேளை இலங்கையில் தற்போது தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் பல்லின பல்மத பிரதிநிதித்துவத்தின் சமூக மட்டத்திலான தேவைப்பாடு காணப்படுகின்றது. அத்துடன் அந்த ஆட்கள் முழு சமூகத்தினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த நாடக் கூடாதெனவும்  நாட முடியாதெனவும் அங்கீகரிப்பதற்கு போதாத தன்மை இப்போதும் இருந்து வருகின்றது. இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர்.

ஆதலால் மாகாண சபையில் பெண்களுக்கான கோட்டாவை ஏற்படுத்தல் சாதகமான முன்னேற்றமாகும். சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் அரசாங்கம் அதிக பணத்தை சேமிக்க முடியுமெனவும அதற்கமைய மாகாண சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தேவையாக மூன்றாவது காரணம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளை வெவ்வேறு பட்ட திகதிகளில் நடத்துதல் அதாவது மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடையும் போது நடத்துவதால் தேர்தல் இயந்திரமானது பல தடவை பயன்படுத்த வேண்டிய தேவைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென அர்தத்தப்படுகிறது.

9 மாகாண சபைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் 9 வெவ்வேறான தேர்தல்களை வேறுபட்ட காலங்களில் நடத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. முன்னைய அரசாங்கம் இதனை செய்தது. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய நிர்வாகத்தில் மாகாண சபை தேர்தல்கள் மற்றும் ஏனைய தேர்தல்கள் அவர்கள் விரும்பிய போதெல்லாம் நடத்தப்பட்டன. மக்களின் ஆணையை தொடர்ந்தும் தாங்கள் பெற்று வருவதாக மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் காண்பிக்க வேண்டிய தேவையெல்லாம் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
காலக்கெடு தேவைப்பட்டது.


ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அரசாங்கம் தேர்தலை நடத்தியது. அவர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கும் மக்களின் முழு மனதான ஆதரவை பெற்றிருக்கின்றார்கள் என்ற ஆதாரத்தை முன்வைப்பதற்கும் வலுவான ஆயுத மற்றும் நிதி வளங்களில் அவர்கள் கவனத்தை செலுத்தியிருந்தனர். ஒரே நாளில் சகல மாகாண சபை தேர்தல்களையும் நடத்துவது இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமைவதுடன் அதற்கான பாரிய செலவினத்தையும் குறைப்பதாக அமையும்.

இத்தகைய சீர்திருத்தமானது அரசாங்கத் தலைவர்கள் மீதான அழுத்தத்தையும் குறைப்பதாக அமையும். ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டிய தேவை இருந்த நிலையில் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவது அந்த அழுத்தங்களை குறைக்கும். இதனால் அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளிலும் பார்க்க அரசியல் ரீதியான செயற்பாடுகளில் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சாத்தியமான காலத்தை வழங்குவதாகவும் இது அமையும்.


எவ்வாறாயினும் மாகாண சபை சட்டத்தை திருத்துதல் மற்றும் தேர்தல்களை பிற்போடுதல் போன்றவற்றுக்கான இந்த நியாயப்படுத்தல்களுக்கு ஜனநாயகத்தின் உயிரோட்டத்திற்கு கிரமமாக தேர்தல்கள் நடத்துவது முக்கியமான என்பது தொடர்பாக சமநிலைப்படுத்தப்பட்ட தன்மை தேவைப்படுகிறது. கிரமமானதும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் அரசியல் அரங்கை வளமூட்டுவதற்கு அனுசரணையாக அமையும். இல்லாவிடில் ஊழல், மோசடி நிறைந்ததாக அது உருவாகிவிடும்.  

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றமை தங்களுக்கு தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையுடன் இறைமையை கொண்டிருப்பதற்கும் ஆட்சி செய்வதற்கான உரிமையை வழங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில்  முன்னைய ராஜபக்ஷ செயற்படுவதற்கு இடமளித்திருந்தது. தேர்தல்களை பிற்போடுவது என்பது பாரதூரமான சூழ்நிலைகளில் மட்டுமே இடம்பெற முடியும். அத்தகைய சூழ்நிலை தற்போது இலங்கையில் இல்லை. காலவரையறையற்ற விதத்தில் வைக்கப்பட்டிருக்காமல் தேர்தல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.

தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படும் போது கவனமாக காலவரையறை தேவைப்படுகின்றது. காலவரையறையற்ற விதத்தில் இழுபட்டுச் செல்லாமல் தேர்தலை நடத்துவதற்கான தேவைப்பாடு காணப்படுகிறது. 
அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய அரசியலமைப்பு வரைபுக்கான கட்டத்தை எட்டியுள்ளன. அந்த நடவடிக்கைகளை நிறைவேறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.  தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஐ.தே.க. சு.க. வுக்குமிடையில் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு மாற்றத்துக்கான உண்மையான சாத்தியப்பாட்டை அது வழங்கியுள்ளது.  

கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை வெற்றி கொள்ளக்கூடியதாக இது அமைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் உள்ளூராட்சி அல்லது மாகாண சபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்திலுள்ள கட்சிகளை ஒன்றுக்கொன்று எதிரானவையாக நிறுத்துவதாக அமைந்துவிடும். புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் இடம்பெறும் வரை தேர்தல் ஒத்தி வைப்பது தொடர்பாக குறிப்பிடாத காரணமாக இது அமைந்திருக்கிறது. எவ்வாறாயினும் இந்த ஒத்திவைப்பானது கடுமையானதும் பொறுப்புக் கூறலுமான காலவரையறையை கொண்டதாக இருக்க வேண்டும்.

தாமதப்படுத்துதல், தேர்தல் சட்டங்களின் மறுசீரமைப்பு தொடர்பாக கருத்தொருமைப்பாட்டை எட்ட இயலாமல் இருப்பதாக அமைந்துவிடும். அதேவேளை தாமதப்படுத்துதல் ஜனநாயகத்துக்கு பாதிப்பானதாகவும் அமையும். இந்நிலையில் அரசாங்கம் தனது செயற்பாட்டை வெளிப்படுத்துவதை பார்க்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பு ரீதியான சீர்திருத்தம் தேவைப்பாடாக உள்ளது. இந்த நடவடிக்கைகள் இரண்டு வருடங்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் முடிவுக்கு வருவதை பார்க்க வேண்டிய தேவைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது.

TOTAL VIEWS : 991
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n1fld
  PLEASE ENTER CAPTA VALUE.