சர்வதேச விசாரணையாளர்களை முதலில் கொண்டுவந்தவர் மகிந்தவே; வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றச்சாட்டு
2017-03-17 13:23:32 | General

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விசேடமாக சட்டத்தரணியாக விளங்கும் நிலையில் வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் என்பது வெறும்  மிகைப்படுத்தல் என்பதை அவர் நன்கு அறிவார். ஆனால் இந்த விவகாரத்தை பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துக்காக கையாண்டு வருகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறார். 


அவரின் தலைமைத்துவத்தின் கீழ் பலதரப்பட்ட நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததையும் அதில் சர்வதேச விசாரணையாளர்கள் ஈடுபட்டிருந்ததையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது எனவும் அமைச்சர் சமரவீர தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த அறிக்கை வருமாறு;


2017 மார்ச் 13 இல் எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் தேசத்தை அழிப்பன என்ற தலைப்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். 


அறிக்கையில் பொருத்தப்பாட்டை கொண்டிராதவையும் தூண்டுதல் அளிக்கக்கூடியவையும் தவறானவையும் முரண்பட்ட தன்மையை கொண்டதாக இருக்கின்றன என்பதே எனது ஆரம்ப நிலைப்பாடாகும். மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட ஊடக அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் சிறப்பான முறையில் சுய அனுகூலத்துக்காக பயன்படக் கூடியவையாக இருக்கும் என்பதால் அவற்றை இலகுவாக புறக்கணிக்க முடியும். எவ்வாறாயினும் முன்னாள் அரச தலைவர் இலங்கை சமுதாயத்தின் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்கு வேண்டுமென்றே நாடிநிற்கின்றார்.

பொதுமக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் விசேடமாக யுத்தத்தின் பின்னரான வருடங்களில் சகல சமூகங்களும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இதனை மேற்கொள்கின்றார். இந்த விடயம் பாரதூரமானதாகவும் விரிவான விதத்தில் பதிலளிக்க வேண்டியதாகவும் இருப்பதாக நான் உணர்கின்றேன். 


சகல சமூகங்களையும் இலங்கையர்களாக ஒன்றுபடுத்துவதற்கு எடுத்திருக்கும் சகல சாத்தியமான நடவடிக்கைகளுக்குமான உன்னத முயற்சிகளுக்காக முதலாவது தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் இலங்கை வரலாற்றை உருவாக்கியிருக்கின்றது.  எமது நாட்டிலுள்ள சகலரும் கூறுவதையும் செவிமடுக்க வேண்டுமென்பதில் நாங்கள் வருத்தப்படவில்லை. எமது அரசியல் எதிராளிகளும் இதில் உள்ளடங்குவார்கள்.

அச்சுறுத்தல், ஓரங்கட்டுதல் அவர்களை துன்புறுத்துவதிலும் பார்க்க அவர்களுடன் விவாதித்து கலந்துரையாடி செயற்படுவது உட்பட எமது நாட்டிலுள்ள சகலரையும் நாங்கள் செவிமடுக்கின்றோம். எமது நாட்டுக்கு வர்த்தகம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேச அரங்கில் நாட்டுக்கு நல்ல பெயரை மீண்டும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை.

எமது அரசியல் பங்காளிகளை பகைத்துக் கொள்வதிலும் பார்க்க சர்வதேச அரங்கில் நாட்டின் நல்ல பெயருக்காக நாங்கள் செயற்படுகின்றோம். நீண்டகாலமாக அரசின் விலைமதிக்க முடியாத வளங்களை அடியோடு களைந்ததற்காகவும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எமது கொள்கையையிட்டும் நாங்கள் வருத்தப்படவில்லை. நீண்டகால சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பை வழங்கும் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் தொடர்பாக பரிசீலனை செய்வதற்கு நாங்கள் வருத்தப்படவில்லை.


இப்போது நான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தவறான விதத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளில் கவனத்தை திருப்பவில்லை. அவரின் முழுமையான வாதமும் ஐந்து முக்கியமான ஆவணங்களை தவறாக புரிந்து கொண்டமை மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட மேற்கோள் விடயங்களில் ஊசலாடுகின்றது. ஆதலால் இந்த ஒவ்வொரு ஆவணங்கள் தொடர்பாகவும் நான் விளக்கமளிக்கின்றேன். 


இலங்கை இணைஅனுசரணை வழங்கிய 2015 அக்டோபர் ஐ.நா. 
மனித உரிமைகள் பேரவை தீர்மானம்


30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் முடிவு எம்மீது திணிக்கப்பட்டதல்ல. இந்த தீர்மானத்திற்கான கால வரையறையை நாங்கள் நீடிப்பதற்கு அனுசரணை வழங்குவோம். இரு வருடங்களுக்கு அவற்றை நீடிக்க தற்போதைய மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது நாங்கள் இணை அனுசரணை வழங்கவுள்ளோம். 


இதனை செய்வதற்கு நாங்கள் ஏன் தேர்ந்தெடுத்தோம்? ஏனெனில் விரிவுபடுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். கட்டுப்படுத்துவதில் அல்ல. சகல பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை விரிவுபடுத்துவதிலேயே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.  நாங்கள் யாவருமே வலியுடன் கூடிய கடந்த காலத்தை வெற்றி கொள்வோம் என நம்புகிறோம். அதனை பரிசீலனை செய்வதன் மூலம் ஒளித்து வைக்காமல் வெற்றி கொள்வோம் என கருதுகிறோம்.

பெருமையுடைய ஒன்றுபட்ட நாடு மற்றும் ஒன்றுபட்ட மக்கள் என்ற எமது முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தக்கூடிய வன்முறை சுழற்சிக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  

உண்மை இழப்பீடு நீதி என்பன அத்தியாவசியமானவை என்பதை நாங்கள் அறிவோம். மேலும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதியானது தேசிய நீதித்துறை தோல்வியடையும் போது மடட்டுமே பிரயோகிக்ககப்படுகிறது. உலகம் அதனை வெளிப்படுத்துவதற்கு முன்னால் சுதந்திரமான இறைமையுடைய பொறுப்புடைய தேசம் என்ற முறையில் தீர்மானம் தொடர்பான எமது தொலைநோக்கை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம்.

எமது தேசிய மட்டத்திலான ஆற்றல்களுடன் பதிலளிக்கும் கடப்பாட்டை நாங்கள் முழுமையாக முன்னெடுக்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் சர்வதேச சமூகத்தின் எமது நண்பர்கள், பங்காளிகளின் ஒத்துழைப்புடன் இவற்றை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த விடயம் எமது நீதித்துறை நடவடிக்கைகளை மற்றும் ஆற்றலை கட்டியெழுப்புதல் தொடர்பான நம்பகத் தன்மையை மீள நிலைநாட்டுவதாக அமையும். இந்த விடயத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

நிலைமாற்று நீதி பொறிமுறைகள் அமுல்படுத்தப்படும் போது ஒரு குழுவுக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ மேலாக ஏனையவர்களுக்கு நன்மை பயப்பதாக அமையாது. நிச்சயமாக தனிப்பட்ட குழுவினரையோ அல்லது ஆயுதப் படைகளையோ வேறுபடுத்தி இலக்கு வைப்பதாக அமையாது. முன்னாள் ஜனாதிபதி தனது சொந்தப் பொறுப்பை மறைத்து வைப்பதற்காக ஆயுதப் படைகளுக்காக இலங்கை மக்களை தூண்டுகிறார்.

இது சந்தர்ப்பவாதமாகும். விசேடமாக வெற்றிக்காக ஆயுதப் படைகளை வழிநடத்திச் சென்ற தளபதியை சிறை வைத்த  நபரிடமிருந்து இது வெளிவந்திருக்கின்றது. யுத்த காலத்தில் ஒவ்வொருவருமே கடுமையாக விலையைச் செலுத்தியுள்ளனர். எமது படை வீரர்களும் தாய்நாட்டுக்கான அர்ப்பணிப்பைச் செலுத்தியுள்ளனர். 5000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காணாமல் போன பொலிஸ் காரர்களின் குடும்பங்கள் உட்பட நல்லிணக்கத்தின் அனுகூலங்களை சகல இலங்கையர்களும் அனுபவிப்பதற்கு இது பொருத்தமான விடயமாக உள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தினால் இவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது பற்றித் தேடப்படும். 


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சட்டத்தரணியாக இருக்கின்ற நிலையில் வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் என்பது அவரின் தரப்பில் வெறுமனே மிகைப்படுத்தப்பட்டதொன்றாக இருக்கின்றது என்பதை நன்கு அறிவார். ஆனால் அவர் இதனை பொதுமக்களை தவறாக வழிநடத்திச் செல்லும் நோக்கத்திற்காக செய்கின்றார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் பலதரப்பட்ட நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சர்வதேச விசாரணையாளர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. சர்வதேச சுயாதீன  மாண்புறு மக்கள் குழுவானது அவரால் ஏற்படுத்தப்பட்டது.

அவரின் வரவழைக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் அதில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, பிரிட்டன், ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்க பாராளுமன்றங்களுக்கிடையிலான சங்கம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சைபிரஸைச் சேர்ந்தவர்  என்போர் நியமிக்கப்பட்டிருந்தனர். சர்வதேச விசாரணையாளர்களும் பரணகம ஆணைக்குழுவுடன் தொடர்புபட்ட ரீதியில் செயற்பட்டிருந்தனர்.

யாவற்றுக்கும் மேலாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதல் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட  சர்வதேச ரீதியான உறுதிமொழியாகும். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையினால் எஸ்11/1 தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 27 மே 2009 இல் அத்தீர்மானம் உள்ளீர்க்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானம் “இலங்கை ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மீள் உறுதிமொழியானது இறுதித் தீர்வாக அவர் இராணுவத் தீர்வை கருதவில்லை' என்பதாக அமைந்திருக்கின்றது. அத்துடன் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வுக்கான அவரின் உறுதிப்பாட்டை அவர் சிறப்பான முறையில் கொண்டிருப்பதாவும் இலங்கையில் இறுதிச் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதாகவும் அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. 


முன்னாள் ஜனாதிபதி தனது அதிகளவு கர்வத்தாலும் கடமைகளை புறக்கணித்த தன்மையுடனும் எமது பிரஜைகள் தொடர்பான பொறுப்புகளை அலட்சியப்படுத்திய தன்மையுடனும் எமது நாட்டை முதற்தடவையாக  வெளிமட்ட விசாரணைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலைக்கு இட்டுச் சென்றிருந்தார். இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலக்தினூடான விசாரணைக்கு அவர் கொண்டு சென்றிருந்தார்.

அதேவேளை ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் அறிவு ரீதியாக வழிநடத்தப்பட்டு சுதந்திரமான இறைமையுடைய பொறுப்பு வாய்ந்த தேசமென்ற நம்பிக்கையை மீள பெற்றுக் கொண்டுள்ளனர். தேசிய நடவடிக்கைகளில் பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் சகல நடவடிக்கைகளும் உள்மட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த உண்மைகளை மறைப்பதை முன்னாள் ஜனாதிபதி தெரிவு செய்கின்றார். பதிலாக 30/1 தீர்மானத்தை நியாயமற்ற முறையிலும் விவாதிக்க முடியாத விதத்திலும் உரை பெயர்க்கின்றார். மக்களின் மனதில் அச்சத்தை கொண்டு செல்லும் பொருட்டும் அவர் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தில் கடந்த டிசம்பரில் அவர் விடயமொன்றை குறிப்பிட்டிருந்தார். அது அதிகாரத்திற்கு மீள வருவதே அவரின் கனவு என்பதை உணர்ந்து கொள்வதாக அமைந்திருக்கின்றது. 


2016 நவம்பரில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கைகள் சகல அரசியல் கட்சிகளும் பங்கேற்றிருந்த நிலையில் வெளியிடப்பட்டவையாகும். வெளிப்படைத் தன்மை மற்றும் கலந்துரையாடல் என்ற அடிப்படை நல்நோக்கத்திற்காக பொதுமக்களுக்கு இந்த அறிக்கைகள் கிடைக்கச் செய்யப்பட்டன.  

18 ஆவது திருத்தத்தை அவர் ஆரம்பித்திருந்த போது மறைவாகவும் துரிதமாகவும் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருந்தார். அந்த விடயம் எமது நாட்டின் அடிப்படை ஜனநாயக ரீதியான நன்மதிப்புக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்திருந்தது. 


உபகுழு அறிக்கைகளில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை இப்போதும் கலந்துரையாடப்படுவதற்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கின்றன. அந்த அறிக்கைகள் நிச்சயமாக குறிப்பிட்ட சில பரிந்துரைகளை உள்ளடக்கியவையாகும். அவற்றிற்கு சிலர் ஆதரவளித்திருக்கக்கூடும். ஏனையவர்களினால் விருப்பமற்றவை என கருதக்கூடும்.

இந்த உணர்வுபூர்வமான விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடும் போது அமைதியாகவும் கௌரவத்துடனும் பொறுப்பான விதத்திலும் அவை இடம்பெற வேண்டும். நவீன தேசமொன்றிற்கு அரசியலமைப்பொன்றை தயாரிக்கும் தேவைப்பாடு குறித்து ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தில் 2016 ஜனவரி 9 இல் குறிப்பிட்டிருந்தார்.

சகல சமூகங்களும் ஆதரவளிக்கும் விதத்தில் அது அமைய வேண்டுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் முயற்சியாக இது அமைந்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இலங்கை மக்கள் இறுதி யோசனைகளின் தன்மைகள் குறித்து தீர்மானிப்பார்கள். அரசியலமைப்பில் அவர்களுக்கான உரிமை உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை குடியரசின் இறைமையானது மக்களிடம் உள்ளது. அதை விட்டு விலத்திக் கொள்ள முடியாததொன்று என்று அரசியலமைப்பு கூறுகிறது.


விளக்கமும் நேர்மையும் 


சகல யோசனைகளையும் விளக்குவதற்கான எமது உறுதிமொழியானது தெளிவானதாகவும் நேர்மையானதாகவும் விடயங்களை திரிபுபடுத்தாமல் அல்லது பிளவுபட்ட சொல்லணிக் கலை நோக்கத்தைக் கொண்டதல்லாமலும் இருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஷ பிளவுபட்ட சொல்லணிக் கலைக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்.  2017 ஜனவரியில் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனை செயலணிப் பிரிவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த செயலணிப் பிரிவின் 11 சிவில் சமூக உறுப்பினர்களும் 2016 ஜனவரியில் பிரதமரால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

உத்தேச நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து சகல இலங்கையர்களினதும் கருத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் கோரப்பட்டிருந்தது. உண்மையைத் தேடும் பொறிமுறையாக இது மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போனோருக்கான அலுவலகம்  உண்மை ஆணைக்குழு இழப்பீடுகளுக்கான முறைமை, விசேட விசாரணையாளர்களுடன் நீதித்துறை பொறிமுறை என்பன உத்தேச நல்லிணக்க பொறிமுறைகளாகும்.  

கலந்தாலோசனை செயலணிப் பிரிவானது முழுமையான இலங்கை நடவடிக்கைகளாகும். 7306 கருத்துகளை நாட்டின் சகல பிராந்தியங்களிலிருந்தும் கலந்தாலோசனை செயலணிப் பிரிவு பெற்றிருந்தது. பகிரங்கமாக தமது கருத்துகளை வெளியிட அஞ்சியிருந்தவர்களும் இதில் உள்ளடங்கியிருந்தனர். மட்டக்களப்பு, அம்பாறை, தென்மாகாணம் ஆகியவற்றிலிருந்தும் அதிக எண்ணிக்கையான கருத்துகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. நாங்கள் கலந்தாலோசனை செயலணிப் பிரிவின் முயற்சியை பாராட்டுகிறோம்.

விரிவானதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டதுமான கலந்துரையாடல் நடவடிக்கைகளும் அறிக்கையும் இலங்கை பூராகவும் உள்ள கருத்துகளை ஒருங்கிணைத்தவையாகும். எமது கருத்தின் வெற்றியாக கலந்தாலோசனை செயலணிப் பிரிவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.  ராஜபக்ஷவின்  நிர்வாகத்தின் கீழ் இருந்த நல்லிணக்க பொறிமுறைகளிலிருந்தும் வேறுபட்டதாக இது அமைந்திருக்கிறது.

ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் விரிவான முறையில் பொதுமக்கள் மத்தியிலான கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கவில்லை. அதன் விளைவாக செயற்பாட்டுத் தன்மையை அவை இழந்திருந்தன. அதேவேளை கலந்தாலோசனைச் செயலணிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல பரிந்துரைகளும் உள்ளீர்க்கப்படுமென இது அர்த்தப்படாது. ஆனால் எமது பிரஜைகளின் கருத்துகளை கொண்டதென இது கருதப்படுகிறது. எமது சகல பிரஜைகளும் சகல பூகோள  அமைவிடங்களும் தெரிவித்தவை செவிமடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ராஜபக்ஷ பொதுமக்கள் மத்தியில் பிளவையும் அச்சத்தையும் கொண்டு செல்வதற்கு இவற்றைப் பயன்படுத்தியிருந்தார். 


ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.+  நடவடிக்கைகள் 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழான தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு முன்னர் இலங்கை பெற்றிருந்த அந்தஸ்தையும் சாதகமான வர்த்தக நிலைமையையும் மீளப் பெற்றுக்கொள்வதென தீர்க்கமான முடிவை எடுத்திருந்தது. ஏனைய பங்குடைமைகள் போன்று  ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பிட்ட சில தேவைப்பாடுகளை அதாவது அடிப்படை உரிமைகள் தொடர்பான தேவைப்பாடுகளை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்கின்றது.

இலங்கையுடன் வர்த்தக கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதற்கு தனது 500 மில்லியன் நுகர்வோரைக் கொண்ட கூட்டுத்தாபனங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்து வருகிறது. மனித உரிமைகளுக்கு அமைவான விடயங்கள் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்கின்றது.

அத்துடன் சட்டம் மற்றும் நல்லாட்சி தொடர்பான விவகாரம் குறித்தும் பரிசீலனை செய்கிறது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற முறையில் நாங்கள் சகல இலங்கையரினதும் வாழ்வை முன்னேற்றத் தேவையான விடயங்களை ஏற்படுத்த நாங்கள் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சிறப்பான உறவை சாதகமான முறையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். ஒன்றியம் அந்த இலக்கை நாங்கள் வென்றெடுக்க உதவும். தற்போது சட்டஆட்சி மீள எற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்த வருடம் வருடாந்த முதலீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுதல் கடந்த  யுத்த காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம்

நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. குறுகிய அரசியல் இலாபங்களுக்காக துஷ்பிரயோகங்களை சிலர் மேற்கொள்வதற்கு அதனை தவறாகப் பயன்படுத்தியிருந்தனர். அதனை அகற்றிவிட்டு நவீன சட்டத்தை அறிமுகப்படுத்துதல், தாய்நாட்டு பற்றற்றது என்று கூறுவது ஆதாரமற்றதாகும். அரசாங்கத்தை விமர்சிப்போர் உட்பட சகல இலங்கையர்களினதும் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக கவனத்திற்கெடுத்திருக்கிறது.  

இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நாட்டைப் பாதுகாக்க முடியுமெனவும் அதேவேளை ஒவ்வொரு பிரஜையினதும் உடல் உள கௌரவத்திற்கு மதிப்பளிக்கும் விதத்தில் அவர்களை பாதுகாக்க வேண்டுமென கருதியும் அதனை உறுதிப்படுத்தவும் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். சித்திரவதைக்கு நவீன ஜனநாயக இலங்கையில்  இடமில்லை.

தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் அச்சம் மற்றும் பொய்களுடன் ஆட்சி செய்யாது. வெளிப்படைத் தன்மை, உண்மை, நீதி, நல்லிணக்கப் பாதையை தெரிவு செய்ததற்காக தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் கவலைப்படாது சகல பிரஜைகளினதும் கௌரவத்தை நிலைநிறுத்துவது தொடர்பாக வருத்தப்படாது. எமது சிறப்பான தேசத்தின் எதிர்காலம் அச்சம் மற்றும் சந்தேகங்களை வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கொண்டிருப்பதாக விளங்காது.  

இது எதிர்கால தேசம் பிரகாசமானதாகவும் சிறந்த தன்மை கொண்டதாகவும் சகல தரப்பினரையும் உள்ளீர்த்ததாகவும் சமபிரஜைகளாக யாவரையும் கொண்டு செல்வதாகவும் அமையும். 


இறுதியாக எனது பழைய நண்பரும் அமைச்சரவை சகாவும் குறுகிய காலத்தில் "பாஸ்' ஆக இருந்தவருக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால் "உங்களையிட்டு  வெட்கப்படுகிறேன், மிகுந்த வெட்கம்'


சிலோன் டுடே 

TOTAL VIEWS : 1193
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
lds5t
  PLEASE ENTER CAPTA VALUE.