இலங்கையில் உடல் ரீதியான சித்திரவதையைப் பார்த்தல்
2017-07-25 13:10:51 | General

கேள்வி: சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அண்மையில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதிலுள்ள பாரிய விடயங்களில் சிலவற்றைக் கூறமுடியுமா?

பதில்: வெள்ளை வான் கடத்தல்கள், சட்டவிரோத தடுத்துவைப்பு, சித்திரவதை என்பன 2016 இலும் 2017 இலும் தொடர்ந்தமை துன்பியலானதாகும். பாதுகாப்புப் படைக் குழுவொன்று கடத்தும் போது மற்றொரு குழு விசாரணையுடன் சித்திரவதை செய்கின்றது. மூன்றாவது குழுவொன்று கப்பத்தைப் பெற்று விடுதலை செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக உள்ளனர். நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்ட சிறைக்கூடங்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 


சித்திரவதைக்காக விசேடமாக அமைக்கப்பட்ட அறைகளில் அவர்கள் விசாரணை செய்யப்படுகின்றனர். பணத்துக்காக விடுதலை செய்தல், விமான நிலையத்தில் குடிவரவு மோசடி என்பன பரிசீலிக்கப்படாமல் தொடர்ந்திருக்கின்றன. ஜோசப் முகாம் இப்போதும் சித்திரவதைக் கூடமாக ஏனைய அறியப்படாத இடங்களுடன் பயன்படுத்தப்படுகிறது. குற்றமிழைப்போர் உயிரி ஆய்வளவு கைவிரல் அடையாளம் இடும் இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் அவை அண்மையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் பல குடும்பங்களைச் சேர்ந்தோர் சித்திரவதை செய்யப்பட்ட விடயத்தை இப்போது பார்க்கும் போது அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவுள்ளது. தடுத்து வைக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் திரும்பத் திரும்ப 3 அல்லது 4 தடவைகள் கூட சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் பிரிட்டனுக்கு வருகின்றனர். பிரிட்டனில் புகலிடம் கோருவோராக நீண்டகால யுத்தம் மற்றும் சித்திரவதையின் பின்னர் இருப்பது பயங்கரமானதொன்றாகும்.

இலங்கையைச் சேர்ந்த அண்மைக் காலத்தில் தப்பியவர்கள் 30 பேருக்கான சிறிய திட்டத்தை நடத்துவதற்கு நான் உதவுகிறேன். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வகுப்புகளை உளவள ஆலோசனைக்காக நடத்துகின்றோம். நாங்கள் பார்க்கும் துன்பங்களின் கடுமையான தன்மையை என்னால் வர்ணிக்க முடியாது. சித்திரவதையில் தப்பிப் பிழைத்தோர்  நலன்புரி முறைமையின் குறைபாடுகளினூடாக பாதிக்கப்படுகின்றனர்.

இப்போது நாங்கள் சந்தித்த பாதிக்கப்பட்டோர்களில் மிகச் சிலரே விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தவர்கள். அவர்கள் சுயவிருப்பில் இணைந்து பல வருடங்களை அமைப்புக்காக செலவிட்டவர்கள். அதிகளவுக்கு பயிற்சி பெற்றிருந்தவர்கள், பலவந்தமாக அல்லது சிறுபிள்ளைகளை ஆட்திரட்டியமை என்பனவற்றைப் பார்ப்பதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களூடாக புலிகளுடன் தொடர்புபட்டவர்களையே நாங்கள் பார்க்கின்றோம்.

இலங்கைப் பாதுகாப்புப் படைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை வழங்கக்கூடியதாக தென்படும் சிரேஷ்ட புலி உறுப்பினர்களை மட்டுமே விசாரணை செய்கின்றார்கள் என்ற ஊகத்தை நாங்கள் கொண்டிருக்கக் கூடும். ஆனால், அதற்குப் பதிலாக தமிழர்களை நசுக்கும் தற்போது இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள் இலங்கைப் பிரஜைகளின் ஜனநாயக ரீதியான உரிமைகள் என்ற அவர்களின் கோரிக்கையை நசுக்குவதாக இருக்கின்றது என்பது தெளிவானதாகும். தமிழராக இருந்தால் அவரின் உரிமைகளை நிலை நிறுத்துவது விடுதலைப்புலிகள் மீள ஆரம்பிப்பதற்கு சமமான நடவடிக்கையாக உரைபெயர்க்கப்படுகின்றது.

கேள்வி: அறிக்கையை தயாரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்திருந்தது?

பதில்: 2016, 2017 இல் இடம்பெற்ற சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 24 வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டதாக அறிக்கை அமைந்திருக்கின்றது. 2015 இல் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 33 வாக்குமூலங்கள் கிடைத்திருந்தன. ஒவ்வொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படுவதற்கு 3, 4 நிமிடங்கள் எடுத்தன. கடந்த 30 மாதங்களுக்கு மேலாக இந்தப் பணி இடம்பெற்றது. தகவலை ஆய்வு செய்து நாங்கள் அறிக்கையை எழுதியிருந்தோம். சித்திரவதை முறைமைகளை பார்வையிடும் விதத்தில் வடிவமைக்குமாறு திறமையான தமிழர் ஒருவரை நாங்கள் கேட்டிருந்தோம். 

கேள்வி: சித்திரவதை, கடத்தல், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், பாலியல் வன்முறை, தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமை போன்றவற்றுக்கு தீர்வுகாணும் கொள்கையடிப்படையிலான பரிந்துரைகளின் அடிப்படையில், கொழும்பினால் எத்தகைய சாதகமான நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் எடுக்க முடியும்? அத்துடன் அர்த்தபுஷ்டியான சீர்திருத்தங்கள் குறித்து தீவிரமானதாக கொழும்பு இருக்கின்றதா என்பதை பரிந்துரைக்கும் விடயங்கள் என்ன?

பதில்: பரிந்துரைகள் எவ்வளவுக்கு இலகுவானவை என்பது தொடர்பாக நான் பிளவுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றேன். அரசியல் ரீதியாக இல்லாவிடினும் நிர்வாக ரீதியாக எத்தகைய பரிந்துரைகளைக் கொண்டிருப்பது சுலபமானது என்பதில் வேறுபட்ட கருத்தை கொண்டிருக்கிறேன். இவை வெறும் தனிப்பட்ட ரீதியான தெரிவு மட்டுமே. இலங்கையில் பல முக்கியமான பரிந்துரைகளை விசேட முன்முனைப்புகள் தொடர்பாக தெரிவித்திருக்கின்றனர். அவற்றை நான் திரும்பக் கோரமாட்டேன். உடனடியாக சாத்தியப்படக்கூடிய விடயங்கள் வருமாறு,  இலங்கையில் சனல் 4 இல் மோதல் சூனிய வலய ஆவணப்படத்தை சிங்களத்தில் காண்பித்தல்.


பாலியல் வன்முறைகளில் ஈடுபட வேண்டாமென்ற அறிவுறுத்தல்களை இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அரசாங்கம் வழங்குதல்.


ஐ.நா.விற்கு அமைதிகாக்கும் பணியாளர்களாக செல்லும் சகல இலங்கை சேவைத்துறையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை பிரசுரித்தல்.


போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மறுப்பதை நிறுத்துதல் அத்துடன், போர்க் கதாநாயகர்களை புகழ்வதையும் நிறுத்திக் கொள்தல்.


கலந்துரையாடல் செயலணிப் பிரிவின் அறிக்கையின் பரிந்துரைகளை அங்கீகரித்து ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளீர்த்துக் கொள்ளுதல். 


2009 மே 18 இலிருந்து 58 ஆவது படையணியிடம் சரணடைந்தோரின் பட்டியலை முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடுதல். 


சிரேஷ்ட பதவிகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நியமிப்பதை நிறுத்திக் கொள்தல்.  குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இல்லாமல் சாட்சியங்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபையை மீள அமைத்தல். இலங்கை தூதரகங்களுக்கு பிரவேசிக்குமாறு கோரப்படுவதிலும் பார்க்க கடிதங்கள் ஊடாக வெளிநாட்டிலுள்ள சாட்சியங்களை சாட்சியமளிக்கக்கூடிய வசதிகளை செய்து கொடுத்தல். 


சர்வதேச உதவியுடன் நம்பகரமானதும் சுதந்திரமானதுமான விசாரணை பிரிவொன்றை அமைத்தல்.


ஜோசப் முகாமை கலைத்துவிடுதல்


இலங்கைக்கு வெளியே சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு சுயாதீனமான அமைப்பை ஸ்தாபித்தல்.

கேள்வி: நீங்கள் பரிந்துரைத்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்குமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: இல்லை.

கேள்வி: உடல் ரீதியான சித்திரவதை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு சர்வதேச செயற்பாட்டாளர் உதவுவதற்கான சிறந்த வழிமுறைகள் எவை?

பதில்: மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான அழுத்தத்தை அதிகரித்தல் அவசரமாக தேவைப்படுகின்றது. தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகள் மற்றும் தண்டனை விலக்கீடு செயற்பாடுகள் தொடர்பாக பேசுவது ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு மட்டுமே உதவுமெனவும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறையின் அடிப்படையில் இந்த அரசாங்கத்தை அணுக முடியாதென்றும் ஐ.நா.வில் ஆட்கள் வாதிடுவதை நான் கேட்டுள்ளேன்.

இங்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த நாங்கள் ஆட்சி மாற்றத்தில் ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை. அல்லது ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை கொண்டிருக்கவில்லை. நாங்கள் அவர்கள் யாவரையும் ஒரே விதமான தரத்திலேயே வைத்திருக்கின்றோம். ஐ.நா. 2009 இல் இலங்கையில் மேற்கொண்ட கவலைக்கிடமான செயற்பாடுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன்.

நாசமாக்கப்பட்ட மக்கள் தொடர்பாக தெளிவான முறையில் பேசவேண்டுமென எதிர்பார்க்கின்றேன். குரலற்றவர்கள் இப்போதும் வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன். 2009 சர்வதேச சமூகம் இலங்கையில் தோல்வி கண்டமையை ஐ.நா. வின் உரிமைகள் முன்னணிக்கு இயக்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆயினும் இலங்கையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் இருப்பது துன்பியல் ரீதியானதாகும்.

ரெலிஸ் ஹயர், பென் எமர்சன் போன்ற சுயாதீனமான நிபுணர்கள் மீறல்கள் தொடர்பாக வெளிப்படையாக பேசியுள்ளனர். 2009 இல் இடம்பெற்ற யுத்தத்தின் தீவிரத் தன்மையை நினைவுகூருவதன் மூலம் என்னால் உதவியளிக்க முடியாது. விடுதலைப் புலிகள் அகற்றப்பட்டால் அதன் பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பலர் ஊகங்களைக் கொண்டிருந்தனர். சில வருடங்களின் பின்னர் ராஜபக்ஷக்கள் அகற்றப்பட்டால் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென்ற ஊகம் காணப்பட்டது.

ஆயினும் பிரச்சினைகளை தனிமைப்படுத்தப்பட்டு பார்த்தலும் சகல குற்றச்செயல்களுக்காகவும் படிமுறை ரீதியாக தீர்வுகாணத் தவறியமையும் குறைபாடான அணுகுமுறையாக காணப்படுகிறது. இந்த விடயம் முழுமையானதும் நிறுவன ரீதியானதுமான தோல்வியாகும். 2015 இல் வரலாற்று ரீதியான மாற்றத்திற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற எண்ணப்பாட்டை சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பலர் கொண்டிருந்தனர்.

அவர்கள் இப்போது நிலைமாற்று நீதி தொடர்பான வெற்றியளிக்கும் கதையைக் கொண்டதாக இலங்கை இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். நிலைமாற்றமானது வெறுமனே சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்படுதலிலிருந்தும் தோல்வியடைந்துவருகின்றது என்பதை அவர்களினால் ஏற்றுக்கொள்ள தயாரற்ற நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் புதியதும் அதிகளவுக்கு நவீனத்துவமானதுமான சர்வதேச அணுகுமுறை அவசரமாக தேவைப்படுகிறது.

"புலிகளின் கோடுகள்' என்ற முத்திரையை சூடாக்கிய உலோகச் சட்டத்தால் அவர்களுக்கு கொடுப்பதுடன், அவர்களை அத்தகையவர்களாக பட்டியலிடுதல் தடுக்கப்படவேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன்.

TOTAL VIEWS : 963
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hu3zb
  PLEASE ENTER CAPTA VALUE.